மீன்பிடித்தல் பாவமான செயல் என்று கூறிய பௌத்த பிக்குவை ' கொன்ற இளைஞர் வெலிகமையில் சம்பவம்.
| May 17, 2021
பௌத்த விகரைக்கு அருகே ஒரு ஓடையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு இளைஞனிடம் மீன்பிடித்தால் தீங்கு விளைவிக்கும் பாவமான செயல் என பௌத்த தேரர் கூறியுள்ளார்.
பௌத்த பிக்குவின் வார்த்தையால் கோபமடைந்த இளைஞன் ஐந்து பேர் கொண்ட குழுவினருடன்
விகரைக்கு சென்று பிக்குவை கடுமையாக தாக்கியுள்ளனர்.
பலத்த காயங்களுடன்
பிக்கு மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி 16 ஆம் தேதி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கொலை தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் 3 பேரை கைது செய்வதற்கான விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.