வெலிகம நகர சபையின் தவிசாளராக அப்ராஸ் (Afras Mohamed) அவர்கள் ஏகமனதாகத் தெரிவு செய்யப்ட்டுள்ளார்.

இவர் Forum for Education and Ethical Development - FEED, Gintota நிறுவனத்தின் மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராவார். மாணவப் பருவத்தில் இருந்து, முஸ்லிம் சமூகத்தின் மட்டுமல்லாது, தேசிய அளவிலும் சமூக அபிவிருத்தி செயல்பாடுகளில் ஈடுபட்டவர்.

மக்கள் விடுதலை முன்னணியின் நீண்ட கால அங்கத்தவராக, அரசியலிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். சமூக சேவையில் அவரது பங்களிப்பு மிகுந்து வரவேற்பு பெற்றுள்ளது.

தவிசாளர் பதவிக்காக தேசிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட மொஹமட் அஃப்ராஸ் அவர்கள் 11 வாக்குகளைப் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்ட சமிலா லொரன்சுஹேவா அவர்கள் 8 வாக்குகள் மட்டுமே பெற்றார்.