நிகாப் அணிந்து சென்ற மல்வானை பெண்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (2019.05.03) பியகம, பண்டாரவத்தை பகுதியில் நிகாப் அணிந்து சென்ற மல்வானை பெண்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவசர கால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும் இக் காலத்தில் முகம் மூடுவது (நிகாப்/ புர்கா உட்பட) தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே இது சட்ட விரோத செயற்பாடாக கருதப்படுகிறது.

அது மட்டுமல்லாது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும் நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடிக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளது.

எனவே எமது முஸ்லிம் தாய்மார்கள், சகோதரிகள் எமது நாட்டின் சட்டத்தை மதித்து நடக்குமாறும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் அறிவுரையை ஏற்று நடக்குமாறும் பனிவுடன் வேண்டிக் கொள்கிறோம்.

-மல்வானை நியூஸ்
Read more »

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பெண் பலி; 46 பேர் காயம்

வெனிசூலாவில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தினால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


மேலும், இந்த மோதலில் 46 பேர் காயமடைந்தனர்.
இது குறித்துடுவிட்டர் வலைதளத்தில் அந்த நாட்டின் தன்னார்வ அமைப்பான வெனிசூலா சமூக மோதல் கண்காணிப்புக் குழு வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

ஜனாதிபதி மதுரோவுக்கு எதிராக தலைநகர் கராகஸில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில், ஜிருபித் ரெளஸியோ என்ற 27 வயது பெண்ணுக்கு தலையில் குண்டு பாய்ந்தது. அதையடுத்து, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இந்த மோதலின்போது 46 பேர் காயமடைந்ததாக மனித உரிமை மற்றும் வைத்திய சேவை அமைப்புகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Read more »

வவுனியாவில் முஸ்லிம் இளைஞன் வெட்டிக்கொலை

வவுனியாவில் முஸ்லீம் இளைஞன் வெட்டிக்கொலை வவுனியா சாளம்பைக்குளத்தில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். மரணமடைந்தவர் சாளம்பைக்குளத்தை சேர்ந்த இம்திகா அஹலம் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார். உடலின் பல இடங்களில் வெட்டுக்காயங்களுடன் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை உயிரிழந்த நபர் மீது ஏற்கனவே திரவக (அசிட்) தாக்குதல் ஒன்றும் இடம்பெற்று சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் அறியப்படுகிறது

 
 
Read more »

கைது செய்யப்பட்டவர்களிடம் CID விசாரணை



இன முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட 600 கடிதங்களுடன் கைதான 03 பேரும் மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இனமுறுகளை ஏற்படுத்தும் வகையிலும், ஜனாதிபதிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலும் தயாரிக்கப்பட்ட 600 கடிதங்களுடன் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் ஒருவரின் பணியாளர்கள் மூவர் நேற்று இரவு கொழும்பு மத்திய அஞ்சலகத்தில் கைதாகினர்.

குறித்த 600 கடிதங்களையும் மத்திய அஞ்சலகத்தில் இருந்து அனுப்புவதற்காக பிரவேசித்த வேளையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கண்டி பிரதேசத்தில் உள்ள பல விகாரைகளுக்கு இந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவிருந்தன. கைதானவர்கள் 24, 28 மற்றும் 41 வயதுகளை உடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read more »

சூப்பர் ஓவரில் மூன்றாவது பந்தில் வெற்றி!

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.



12 ஆவது ஐ.பி.எல். தொடரில் 51 ஆவது லீக் ஆட்டம் மும்பை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு 8.00 மணிக்கு ஆரம்பமானது.



இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை குவித்தது.

163 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஐதராபாத் அணியும் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை குவித்தது.



ஐதராபாத் அணி சார்பில் விரிடிமன் ஷா 25 ஓட்டத்துடனும், குப்டீல் 15 ஓட்டத்துடனும், கேன் வில்லியம்சன் 3 ஓட்டத்துடனும், விஜய் சங்கர் 12 ஓட்டத்துடனும் அபிஷேக் சர்மா 2 ஓட்டத்துடனும், மொஹமட் நபி 31 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், மணீஷ் பாண்டே 71 ஓட்டத்துடனும், ரஷித் கான் எதுவித ஓட்டமின்றியும் ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.



பந்து வீச்சில் மும்பை அணி சார்பில் பும்ரா மற்றும் குர்னல் பாண்டியா, ஹர்த்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.



போட்டி சமநிலையில் முடிவடைந்தமையினால் இதையடுத்து சூப்பர் ஓவர் வழங்கப்படட முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 8 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

சூப்பர் ஓவரில் 9 ஓட்டங்களை நோக்கிக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மும்பை அணி மூன்று பந்துகளை எதிர்கொண்டு வெற்றியிலக்கை கடந்தது (பாண்டியா -7, பொல்லார்ட் - 2)

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்
Read more »

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி…!!



இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் தாமதமாக ஆரம்பிக்கப்பட உள்ளமையினால், தாமதமடைந்துள்ள கற்றல் நடவடிக்கைகளுக்காக, ஓகஸ்ட் மாத இரண்டாம் தவணை விடுமுறை காலத்தைக் குறைக்கும் நிலை ஏற்படுவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைள் கடந்த மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருந்தது

எனினும், கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலை அடுத்து, இரண்டாம் தவணை பாடசாலை ஆரம்பம் எதிர்வரும் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.இந்த நிலையில், கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், பாதுகாப்பு தரப்புடன் கலந்துரையாடியதன் பின்னரே திங்கட் கிழமை இரண்டாம் தவணைக்கு பாடசாலைகளை திறக்க வேண்டும் என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு வாரங்களாக பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக விடுமுறை கிடைத்துள்ளது.இனி கல்விப் பொதுத்தராதார உயர்தர மற்றும் சாதாரணத் தரப்பரீட்சைகளுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும்.எனவே எதிர்வரும் காலத்தில் விடுமுறைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.அதற்காக ஆகஸ்ட் மாதம் வழங்கப்படும் விடுமுறையை ரத்துசெய்யவும் ஏற்படலாம் எனவும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
Read more »

மாத்தறை கொடுவேகோடை பள்ளிவாசல் இமாம் பிணையில் விடுதலை

மாத்தறை கொடுவேகோடை சிறிய பள்ளிவாசலில் ஜிஹாத் சம்பந்தமான புத்தகம்  கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அப் பள்ளிவாசல் இமாம் கைதுசெய்யப்பட்டார்
கைதுசெய்யப்பட்ட அப்பள்ளிவாசல் இமாம் விசாரணையின் பின் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

நேற்று மாத்தறை கொடுவேகோடை பகுதியில் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன









Read more »

சாய்ந்தமருது சம்பவத்தில் பலியான 19 வயது அஸ்ரிபா: திருமண வாழ்க்கையை ஆரம்பிக்கும்போதே முடிந்துபோன சோகம்



சாய்ந்தமருதில் பயங்கரவாதிகளுக்கும், இராணுவ படையினருக்கும் இடையில் நடைபெற்ற சண்டையில் 19 வயதான அஸ்ரிபா இறந்துவிட்டது குறித்து அவரது தாய் ஹிதாயா பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார்.

சாய்ந்தமருதில் சம்பவம் நடைபெற்ற மறுநாள் காலையில் பொலிவேரியன் பகுதிக்குள் நுழையும் பிரதான பாதையில் நிறுத்தப்பட்டிருந்த நீல நிற ஆட்டோ ஒன்றிலிருந்து அஸ்ரிபாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அதில் பயணித்த அஸ்ரிபாவின் கணவரும் மாமியாரும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் முன்னதாகவே அனுமதிக்கப்பட்டனர். அவர்களுடன் பயணித்த அஸ்ரிபாவின் கணவருடைய சகோதரி, காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பியுள்ளார்.

துப்பாக்கி சூட்டில் தனது மகள் இறந்துவிட்டதாகவும், ஆனால் சம்பவத்தை நேரில் பார்க்காத காரணத்தால் யாரின் தாக்குதலில் அவள் உயிரிழந்தார் என்பதை உறுதியாக கூறமுடியாது என இருவேறு தகவல்களை அஸ்ரிபாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்
16 வயதில் திருமணம்

2016ஆம் ஆண்டு கல்முனைக்குடியைச் சேர்ந்த ஜாசிர் என்பவருக்கு எங்களது மகளை திருமணம் செய்துவைத்தோம். எங்கள் வீட்டில் நான்கும் பெண் பிள்ளைகள், இதனால் எங்கள் மூத்த மகள் அஸ்ரிபாவுக்கு வரப்போகும் மாப்பிள்ளை எங்களுக்கு மகன் ஸ்தானத்தில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டோம்.

அதற்கு தகுந்தாற்போல் ஜாசிர் எங்களை அவரது சொந்த பெற்றோர் போல் கவனித்துக்கொண்டார். திருமணமான 41 வது நாளிலேயே ஜாசிர் தனது தொழில்நிமித்தமாக வெளிநாட்டு சென்றுவிட்டார். இரண்டு வருடங்கள் கழித்து கடந்த வருடம் தான் ஊருக்கு திரும்பினார்.

தற்போது, அஸ்ரிபாவுக்கு 19 வயதாகிறது. அவள் தனது திருமண வாழ்க்கையை ஆரம்பிக்கும்போதே அதற்குள்ளாக அவள் வாழ்க்கை முடிந்துவிட்டது வேதனையளிக்கிறது என பெற்றோர் பகிர்ந்துள்ளனர்.

தனது மனைவியை ஒரு குழந்தை போல ஜாசிர் பார்த்துக்கொண்டார். அஸ்ரிபா ஆசையாக ஒரு கிளியை வளர்த்தார், அந்த கிளியும் அவள் இறந்த அடுத்தநாளே இறந்துவிட்டது என பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் சிந்தியுள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற அன்று நடந்தது என்ன?

அஸ்ரிபா தனது கணவருடன் கல்முனையில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றிருந்தார். இரவு குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இங்குள்ள மக்கள் எல்லோரும் பயந்து கலவரப்பட்டு அவரவர் வீடுகளுக்குள் புகுந்து கொண்டனர்.

அப்போது, அஸ்ரிபாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இங்கு வரவேண்டாம், கல்முனையில் இருந்துவிட்டு நாளை வருமாறு கூறினேன். ஆனால், அவள் எதையும் கேட்காமல் சாய்ந்தமருதுக்கு வந்துவிட்டாள்.

இடையில் அவளது அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. சம்பவம் நடைபெற்ற அடுத்த நாள் அதிகாலை இண்டரை மணியளவில் எங்களது மருமகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார் அஸ்ரிபாவின் நிலையை அவர் கூறவில்லை.

எங்களது மகளின் நிலை என்பது குறித்து நாங்கள் அறிந்துகொள்ள முயன்றபோதுதான் ஆட்டோவிலிருந்து அவளது சடலம் மீட்கப்பட்டது என கூறியுள்ளார்.
Read more »

சஹ்ரான் மற்றும் தாக்குதலை வழி நடத்திய தீவிர வாத தலைவர் இவர் தானா.!? வெளிவரும் உண்மைகள்

இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் முக்கிய சூஸ்திரதாரியாக “தெளஹீத் ஜமாத்” தை சேர்ந்த சஹ்ரான் இனம் காணப் பட்டார். இதனை தொடர்ந்து தெளஹீத் ஜமாத் இலங்கையில் தடை செய்யப் பட்டது.இதனை தொடர்ந்து  தீவிர விசாரணையையும் தேடுதலையும் ஆரம்பித்த பொலீஸார் சில திடுக்கிடும் உண்மைகளை கூறி உள்ளனர்.

தாக்குதலுக்கு சஹ்ரான் மற்றும் அனைவருக்கும் பின்னால் இருந்து செய்யத் தூண்டியவர் மொஹமட் இமாம் பாகிர் என்ற நபர். இவரை உடனடியாக கைது செய்த பொலீஸார் குறித்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது இமாம் பாகிர் சிரியாவிற்கு சென்று அங்கு ஐ எஸ் பயங்கர வாதிகளுடன் தங்கி பயிற்சி பெற்றுள்ளார்,  பல வருட பயிற்சியின் பின் இலங்கை வந்த இவர் இலங்கையில் ஐ எஸ் தீவிர வாதத்தை பரப்ப தொடங்கியுள்ளார்.

இவருடன் ஒன்றாக சென்ற நிலான் என்பவர் சிரியாவில் வைத்து நடந்த மோதலில் உயிர் இழந்துள்ளதால் இவரை இலங்கைக்கு ஐ எஸ் அனுப்பியுள்ளது.  இங்கு வந்த பின் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார் குறித்த நபர். தற்கொலை தாக்குதலுக்கு காரணமான 16 ஐ எஸ் உறுப்பினர்கள் இதுவரை கைது செய்யப் பட்டுள்ள நிலையில் இதில் பலர் துருக்கி சென்று பயிற்சி எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

இவருடன் ஒன்றாக சென்ற நிலான் என்பவர் சிரியாவில் வைத்து நடந்த மோதலில் உயிர் இழந்துள்ளதால் இவரை இலங்கைக்கு ஐ எஸ் அனுப்பியுள்ளது.  இங்கு வந்த பின் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார் குறித்த நபர். தற்கொலை தாக்குதலுக்கு காரணமான 16 ஐ எஸ் உறுப்பினர்கள் இதுவரை கைது செய்யப் பட்டுள்ள நிலையில் இதில் பலர் துருக்கி சென்று பயிற்சி எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
Read more »

தொலைபேசி அழைப்புக்கு தமிழ் மொழியில் பேசியதால் தாக்குதல் வெலிகமை யில் சம்பவம்






பஸ்ஸில் பயணிக்கும் போது தொலைபேசி அழைப்பிற்கு தமிழ் மொழியால்
பேசியதால் முஸ்லீம் நபர் தாக்கப்பட்ட சம்பவம் வெலிகம பிர்தேசத்தில் இடம்பெற்றுள்ளது

வெலிகம புதிய தெருவை சேர்த குறித்த நபர் மிதிகமயில் இருந்து
நேற்று இரவு வீடு செல்லும் போது பஸ் இல் பிரயாணம் செய்துகொண்டிருந்த அப்பிரதேச சிங்கள மக்களால் இவர் தாக்கப்பட்டுள்ளார்.
,சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளாகிய இவர் பின்னர் வீடு திரும்பியுள்ளார்
Read more »

ஐ.எஸ். அமைப்பின் உறுப்பினரின் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு – பொலிஸார் விசாரணை



ஹட்டனில் அமைந்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் உறுப்பினரொருவரின் வீட்டிலிருந்து ஒன்பது கத்திகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வீட்டிலிருந்த குறித்த நபரின் சகோதரரை கைது செய்துள்ளபோதிலும் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தற்போது யேமனில் வசிக்கும் குறித்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் உறுப்பினர் கடந்த 2016ஆம் ஆண்டு இறுதியாக இலங்கைக்கு வந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

இதனையடுத்து ஹட்டன்- மல்லியப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது வீட்டின் களஞ்சிய அறையிலிருந்து குறித்த கத்திகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த நபரின் சகோதரரை ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது, 20 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் அவருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read more »