வெலிகமயில் பக்கவாதம் ஏற்பட்டு கொரோனாவில் மரணித்த பரிதாபம்இன்று வெலிகமையில் கொரோனாவில் பெண் ஒருவர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மை பற்றிய தேடலை லங்கா நெட் நிவ்ஸ் மேற்கொண்டது.  

வெலிகம கல்பொக்க பகுதியைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பாத்திமா சம்ஸியா என்ற பெண்மணியே இவ்வாறு மரணித்துள்ளார். குறித்த பெண் ஏற்கனவே கடந்த மூன்று மாதங்களாக பாரிசவாதத்திற்கு (Paralysis) உள்ளாகியிருந்தார். இந்நிலையில் இறுதியாக 17.01.2021 ஆம் திகதி காலை 8:30 மணியளவில் வீட்டில் நோய்வாய்ப்பாட்டு அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்கையில் மரணமடைந்துள்ளார். 

மரணமடைந்ததன் பின்னர் பிரதேச சுகாதார அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் மேற்கொண்ட பீசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என்றாலும் குறித்த வீட்டில் இதுவரை எவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருக்கவில்லை. பக்கவாதம் ஏற்பட்டால் தனிமைப்படுத்தப்பட்டது போல் பொதுவாக தனது வேலைகளை செய்யமுடியாமல் கட்டிலும் படுக்கையுமாக இருப்பார். 

இவ்வாறான ஒரு சமூகத் தொடர்பு இல்லாமல் இருந்த ஒரு பெண்ணுக்கு மரணித்தன் பின்னர் கொரோனா ஏற்பட்டது எவ்வாறு? இலங்கையில் மாத்திரம் தான் இவ்வாறு மரணித்ததன் பின்னர் பலருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments:

Post a Comment