துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்ட விவகாரம்; கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் விளக்கம்

தனது அலுவலகத்தில் மீட்க்கப்பட்ட துப்பாக்கி ரவைகளுக்கும் எங்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் கிடையாது என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு காத்தான்குடியிலுள்ள காரியாலயத்தில் இன்று இராணுவத்தினர் மேற்கொண்ட சோதனையின்போது ரி.56 ரக துப்பாக்கி ரவைகள் மீட்க்கப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

இந் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர்,

இன்று எனது காத்தான்குடி காரியாலயம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டபோது, எனது பாதுகாப்புக்கு பொறுப்பான பொலிஸாரும், அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவினரும் காத்தான்குடி பொலிஸாரும், எனது காரியாலயத்தில் பின்னால் தங்கியிருந்த அறையிலிருந்து உத்தியோகபூர்வமாக காத்தான்குடி பொலிஸாரால் வழங்கப்பட்டு பாதுகாப்பிற்கு பயன்படுத்துகின்ற சுமார் 40 துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளனர்.

இது உத்தியோகபூர்வமாக பாதுகாப்பிற்காக பொலிஸாருக்கு வழங்கப்பட்டது. இது தொடர்பாக தற்போது பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் அறிக்கைகள் சமர்ப்பிக்கபடும் வரை காரியாலயத்திற்கு பொறுப்பான 2 சகோதரர்களையும் காத்தான்குடி பொலிஸில் தடுத்து வைத்துள்ளார்களே தவிர இந்த துப்பாக்கி ரவைகளுக்கும் எங்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் கிடையாது.

இது உத்தியகோபூர்வமாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான துப்பாக்கி ரவைகள் என்பதை மிகத் தெளிவாக குறிப்பிடுகின்றேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment