ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலியினால் 2 வர்த்தக நிலையங்களுக்கு சேதம்.
| August 16, 2019

நாவுலவிலுள்ள இராணுவ முகாமில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்து
கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலியினால் எழுந்த அதிக காற்றுக் காரணமாக இரண்டு கடைகள் சேதமடைந்துள்ளன.
குறித்த ஹெலிக்கொப்டர் மேலெழுந்தபோது அதன் விசிறிகளிலிருந்து எழுந்த பலத்த காற்றின் காரணமாகவே சேதம் ஏற்பட்டுள்ளது.
நாவுல பொத விளையாட்டு மைதானத்துக்கு அருகிலிருந்த இரண்டு வர்த்தக நிலையங்களே இவ்வாறு சேதமடைந்துள்ளன.
இன்று (16) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது ஒரு வர்த்தக நிலையத்தின் கூரைப் பகுதி முற்றாக உடைந்து கீழே வீழ்ந்துள்ளது. Metro