அமெரிக்காவில் குடியுரிமை சட்டத்தில் மேலும் கட்டுப்பாடு


அமெரிக்க இராணுவத்துக்காக அயல்நாடுகளில் பணியாற்றுபவர்கள் அந்நாடுகளில் பெற்றுக் கொள்ளும் குழந்தைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்குவதில் பல கட்டுப்பாடுகளை விதிக்க டிரம்பின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவில் குடியுரிமை பெற்று 5 ஆண்டுகள் வசித்தவரின் குழந்தையும், அமெரிக்க அரசு பணியாளர்களும், அமெரிக்க இராணுவத்தினரும் அயல்நாடுகளில் பணியாற்றும்போது அந்த நாட்டில் குழந்தைபெற்றால், அந்தக் குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் சிக்கல் இல்லாமல் இருந்தது.

பெற்றோரில் ஒருவரின் அமெரிக்கக் குடியுரிமையைக் காண்பித்து குழந்தைக்கு குடியுரிமை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், இந்த நடைமுறையை ஒக்டோபர் 29 முதல் மாற்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

கடிதம் மூலம் தானாகவே குடியுரிமை பெறும் வகையில் அல்லாமல் அத்தகைய வெளிநாடுகளில் தங்கியிருக்கும் அமெரிக்க பணியாளர், இராணுவத்தினர், வழக்கமாக பிறர் விண்ணப்பிப்பது போல் குடியுரிமைக்கு விண்ணப்பித்து, காத்திருந்து பெற்றுக் கொள்ளலாம். இது இராணுவ வீரர்கள் ஏற்கனவே சந்தித்து வரும் பல பிரச்சினைகளில், அவர்களுக்கு மேலும் கவலை தரக்கூடிய பிரச்சினை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

0 Comments:

Post a Comment