கொள்கலனில் இறந்த பெண் தாய்க்கு கடைசியாக செய்


வியட்நாமைச் சேர்ந்த பெண்ணொருவர் தாம் இறந்து கொண்டிருப்பதாக, தாய்க்கு அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்றை சுட்டிக்காட்டி, லண்டன் அருகே சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட கொள்கலனுக்குள் வியட்நாமைச் சேர்ந்தவர்களும் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

லண்டன் அருகே கொள்கலன் லொரியிலிருந்து 39 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதிலிருந்தவர்கள் சீனர்களாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் வியட்நாமைச் சேர்ந்த பாம் திட்ரா மை என்ற பெண், தாம் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக தனது தாய்க்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

அதில் தான் இறந்து கொண்டிருப்பதாகவும், ஏனெனில் தனக்கு மூச்சுத்திணறுகிறது எனக் கூறியுள்ள அந்த பெண், வெளிநாட்டில் குடியேற தாம் தேர்வு செய்த வழி வெற்றிகரமானது அல்ல எனவும் தெரிவித்துள்ளார். இதனால் கொள்கலனுக்குள் சடலமாகக் கிடந்தவர்களுள் வியட்நாமியர்களும் அடங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அந்த கொள்கலன் லொரியை ஓட்டி வந்த மரிஸ் ரொபின்சன் என்ற இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஆட்கடத்தல், கறுப்புப்பண பறிமாற்றம் ஆகிய குற்றங்களுக்காகவும் அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர் பொலிஸ் காவலில் உள்ளனர். கொலை மற்றும் ஆட்கடத்தல் ஆகிய சந்தேகங்களின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்கலனில் இறந்தவர்களில் சிலரே அடையாள அட்டைகளும் பிற ஆவணங்களும் வைத்திருந்ததால், அவர்களின் டி.என்.ஏ மற்றும் தழும்புகள் ஆகியவற்றைக் கொண்டே அவர்களை அடையாளம் காணவேண்டிய சூழல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 Comments:

Post a Comment