நாடளாவிய ரீதியிலான வாக்குப்பதிவு விபரம் இதோ (காலை 7.00 முதல் 10.00 வரை)..!

நாடளாவிய ரீதியில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் இன்று காலை 10 மணிவரை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வாக்குப் பதிவுகளின் விபரத்தின் படி சுமுகமான முறையில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.

அதன்படி கண்டியில் 30 வீத வக்குப் பதிவும், அநுராதபுரத்தில் 30 வீத வாக்குப்பதிவும், காலியில் 25 வீத வாக்குப்பதிவும், மாத்தறையில் 30 வீத வாக்குப்பதிவும், நுவரெலியாவில் 40 வீத வாக்குப்பதிவும், மட்டக்களப்பில் 19 வீத வாக்குப் பதிவும், மொனராகலையில் 45 வீத வாக்குப் பதிவும், புத்தளத்தில் 40 வீத வாக்குப் பதிவும், வவுனியாவில் 35 வீத வாக்குப்பதிவும், மன்னாரில் 30 வீத வாக்குப்பதிவும், யாழ்ப்பாணத்தில் 24 வீத வாக்குப்பதிவும், கிளிநொச்சியில் 30 வீத வாக்குப் பதிவும், பொலன்னறுவையில் 48 வீத வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளது.

0 Comments:

Post a Comment