டாக்டர் பிரியங்கா ரெட்டியை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற 4 பேரையும் போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொன்றனர்.


இந்தியா ,ஐதராபாத்தில் கால்நடை பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டியை

பலாத்காரம் செய்து எரித்து கொன்ற 4 குற்றவாளிகளையும், பொலிஸார் என்கவுன்டரில் சுட்டு கொன்றனர்.

அவர்கள் தப்பி செல்ல முயன்ற போது, இந்த சம்பவம் நடந்தது.

கடந்த நவ.,27 ல், தெலுங்கானாவில் பணி பணி முடிந்து இரவு வீடு திரும்பிய பெண் டாக்டரை, உதவி செய்வது போல் கடத்திச் சென்று லாரி டிரைவர்கள் 4 பேர் பலாத்காரம் செய்தனர்.

அப்பெண்ணின் வாயில் கட்டாயப்படுத்தி விஸ்கியை ஊற்றி, அவரை மயக்கமடையச் செய்து, பலாத்காரம் செய்து, பின் கழுத்தை நெறித்து கொலை செய்து , உடலை எரித்தனர்.

இந்த கொடூரத்தில் ஈடுபட்டலொறி டிரைவர்கள், கிளீனர்கள் என கேசவலு, முகமது பாஷா, நவீன், சிவா ஆகியோரை பொலிஸார் கைது செய்து விசாரித்து வந்தனர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் வலுத்தது.
பார்லிமென்டிலும் இந்த சம்பவம் எதிரொலித்தது. குற்றவாளிகள் 4 பேரையும் 7 நாள் பொலிஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், குற்றவாளிகளை விசாரணைக்காக சம்பவம் நடந்த இடத்திற்கு பொலிஸார் அழைத்து சென்றனர். பெண் டாக்டரை எரித்து கொன்ற இடத்திற்கு அழைத்து சென்ற போது, குற்றவாளிகள், பொலிஸாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்றனர்.

இதனையடுத்து , அந்த இடத்திலேயே, குற்றவாளிகள் 4 பேரையும் பொலிஸார் சுட்டுக்கொன்றனர்.

0 Comments:

Post a Comment