ஜனாதிபதி கோத்தபாயவுக்கு இருக்கும் செல்வாக்கினால், பெரும்பான்மை பெற்று ஆட்சியமைப்போம்"



52 சதவீத வாக்காளர்களின் வாக்குகளை பெற்ற ஜானதிபதி கோத்தபாயவுக்கு மக்களின் மத்தியில் இருக்கும் அதே செல்வாக்கினை கொண்டு பொதுத்தேர்தலிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற்று ஆட்சியமைக்க முடியும் என தொழிநுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.


தனது உத்தியோக பூர்வ காரியாலயத்தில் இன்று -06- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.


தற்போது உலக நாடுகள் தொழிநுட்ப ரீதியாக பலவேறு அபிவிருத்திகளை கண்டுள்ளன. இலங்கையையும் தொழிநுட்ப ரீதியில் முன்னேற்ற பல்வேறு திட்டங்களை ஜனாதிபதி கோத்தபாய தீர்மானித்துளளார். தொழிநுட்ப இராஜாங்க அமைச்சருக்கு முன்னமே தொழிநுட்பம் சார்ந்து எனது அபிவிருத்திகள் காணப்பட்டன. அதன் மூலம் தான் ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனம் மற்றும் மொபிடெல் நிறுவனங்களை கொண்டு நடத்துவதற்கு இலகுவாக இருந்தது.


கடந்த வருடம் அமைச்சர் பதவியின் மூலம் புதிய அமைச்சரவையை உருவாக்க முடியும் என்ற பிரதமரின் கனவும் தற்போது நினைவாகி உள்ளது.


நாட்டை சுத்தப்டுத்தும் நடவடிக்கைகளில் மக்கள் தற்போது இணைந்துள்ளனர் இதன் மூலம் நாட்டின் அசுத்தமான பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன, மக்கள் சுத்தமான நாட்டினை விரும்புகின்றன மக்களின் ஜனாதிபதியும் நாட்டின் சுத்தத்தை விரும்புபவர் நாட்டின் சுத்தப்படுத்தும் செயற்பாடு வெற்றியளிக்கும் வகையில் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் இதன்போது கூறினார்.

0 Comments:

Post a Comment