பெண்களும் ஆடைகளும்



ஏதாவது நிகழ்வுகளுக்கு பெண்கள் அழைக்கப்பட்டு அங்கு அவர்கள் சமுகமளிக்கின்ற காட்சிகளைப் பார்க்கின்ற போது உண்மையில் இவர்கள் அல்லாஹ்வைப் பயந்தவர்களா என்று சிந்திக்க வேண்டியதாக உள்ளது. அந்தளவுக்கு அழகு என்ற பெயரில் இறுக்கமான ஆடைகளை அணிவதையே முஸ்லிம்கள் பெண்கள் விரும்பக்கூடியவர்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

யார் ஒரு பெண், மற்ைறயவர்களை கவர வேண்டு மென்பதற்காக வாசனை திரவியங்களை பூசிக் கொண்டு வீதியில் செல்கிறாளோ அவள் விபச்சாரி என கூறியிருக்கிறார்கள்.



வாசனை திரவியங்களை பூசுவதையே கூறியிருக்கின்றார்கள் என்றால் அடுத்தவர்களை கவர வேண்டுமென்பதற்காக இறுக்கமான ஆடைகளை அணிகின்றார்களே அவ்வாறு செய்யக்கூடிய ஒவ்வொரு பெண்களும் அல்லாஹ்வை அஞ்சி அவனிடம் தவ்பா செய்து கொள்ள வேண்டும். அற்ப இன்பங்களை அடைந்து கொள்ள வேண்டுமென்பதற்காக மறுமை வாழ்வை இழந்து விடக்கூடாது. மறுமையில் அல்லாஹ்வுடைய தண்டனையைப் பெற்றுத் தரக்கூடியதாக இறுக்கமான ஆடையை அணிவது இருந்து கொண்டிருக்கின்றது. உலகத்தில் அடுத்தவர்களை கவர வேண்டுமென்று நினைத்தால் அதனை அடைந்து கொள்ள முடியும். ஆனால் இந்த இன்பம் கிடைத்து அடுத்த மணி நேரமும் மரணம் ஏற்பட்டு முடிந்தும் விடலாம்.

எனவே அல்லாஹ்வைப் பயந்து யாரெல்லாம் இறுக்கமான ஆடைகளை அணிவதை அலங்காரமாக கருதுகிறார்களோ அவர்கள் அல்லாஹ்விடம் தௌபா செய்து கொள்ள வேண்டும்.

அபூ உமாமா,
அநுராதபுரம்

0 Comments:

Post a Comment