ஏன் முஸ்லிம்களுக்கு அமைச்சரவை வழங்கப்படவில்லை... ஜனாதிபதியின் பதில்
| December 21, 2019

அமைச்சரவைக்கு நியமிப்பதற்கு பொருத்தமான முஸ்லிம்
ஒருவர்
இல்லாமை காரணமாகவே அமைச்சரவைக்கு முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வியாழனன்று தெரிவித்தார்.
அன்று நண்பகல் இலங்கையிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த ஜனாதிபதி இடம் வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப்பதிலளித்தே
அவர் இதனை தெரிவித்தார்.
இதேநேரம் பாராளுமன்றம் மார்ச் 3 ஆம் திகதி கலைக்கப்படும் என்றும் ஏப்ரல் இறுதியில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.