வாகன வருமான வரி அனுமதிப்பத்திரத்தை ஒன்லைனில் 2 நிமிடத்தில் பெறும் வசதி



ஒன்-லைன் மூலம் வாகன போக்குவரத்திற்கான வருமான வரி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுப் பத்து வருடங்கள் கடந்த நிலையிலும் அந்தச் சேவையை மூன்று சதவீதமானோர் மட்டுமே உரியமுறையில் பயன்படுத்தியுள்ளதாக இலங்கை தகவல், தொடர்பாடல் தொழில் நுட்ப முகவரமைப்பின் ஆலோசகர் உதய கஸ்தூரி ரத்ன தெரிவித்தார்.
வாகன அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்வோர் 60 இலட்சம் எனச் சுட்டிக்காட்டியுள்ள கஸ்தூரி ரத்ன, இவர்களில் வெறும் மூன்று சதவீதத்தினரே ஒன்லைன் மூலம் பயன்பெற்றுள்ளனர்.

இதற்குப் பிரதான காரணம் தகவல் தொழில்நுட்பம் குறித்த சரியான புரிதல் இல்லாமையே யாகும் எனக் குறிப்பிட்டார். ஒன்லைன் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்த போதும் மூன்றே நிமிடங்களில் வாகன அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளமுடியும்.
இலத்திரனியல் மூலம் தரவுகளைக் கொடுப்பது மட்டுமே, விண்ணப்பதாரியின் பணியாகும். புகைச்சான்றிதழ், காப்புறுதிச்சான்றிதழ் எதுவும் அவசியப்பட மாட்டாது. விண்ணப்பதாரியிடமுள்ள கையடக்க தொலைபேசிமூலம் விண்ணப்பப்படிவத்தை பதிவேற்றம் செய்தால் மட்டும் போதுமானது.

மோட்டார் வாகன திணைக்களத்திலோ, பிரதேச செயலகங்களிலோ மணிக்கணக்கில் வரிசையில் நிற்கத்தேவையில்லை நாட்கணக்கில் அலையவேண்டியதும் கிடையாது.
E- Revenue License எனும் ERL திட்டத்தில் பிரவேசிப்பதற்கு gov.lk மூலம் நாடலாம். இதன்போது விண்ணப்பம் செய்வோர் தமது E.mail முகவரியை கொடுப்பது அவசியமானது கட்டணத்தைக் கூட கடனட்டை மூலம் செலுத்த முடியும். முதலில் தற்காலிக அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளமுடியும். ஒருவாரம் அல்லது பத்து நாட்களுக்குள் நிரந்தரமான அனுமதிப்பத்திரம் கிடைக்கக்கூடியதாக செயற்படுத்தப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment