2019 ஆம் ஆண்டின் மென்பந்து கிரிக்கெட் போட்டிகளின் சிங்கள மொழி மூலமான சிறந்த வர்ணனையாளராக வெலிகம மொஹமட் நிஸ்மி தெரிவு
| January 11, 2020
2019ஆண்டின் மென்பந்து கிரிக்கெட் போட்டிற்கான சிங்கள மொழிமூலமான சிறந்த வர்ணனையாளரை தெரிவு செய்வதற்கான நிகழ்வு ஜனவரி 2 ஆம் திகதி மீகமுவ சனோ ரிச் ஹோட்டலில் இடம்பெற்றது.
2019 ஆம் ஆண்டின் மென்பந்து கிரிக்கெட் போட்டிகளின் சிங்களமொழி மூலமான சிறந்த வர்ணனையாளராக வெலிகம மொஹமட் நிஸ்மி
தெரிவு செய்யப்பட்டார்.
தமிழ் பேசும் ஒருவர் சிங்கள மொழிமூலமன வர்ணனை விருது பெற்றிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
2017 ஆம் ஆண்டிலும் சிறந்த மென்பந்து கிரிக்கெட் வர்ணனையாளராகவும் மக்கள் மத்தியில் பிரபல்யமாக பேசப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மாத்தறை சேவியஸ் பாடசாலையின் பழைய மாணவரான இவர் தற்சமயம் ரூஹுனு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.
இவர் சிங்கள மொழி மூலமாக மாத்திரமன்றி ஆங்கிம், தமில் மூன்று மொழிகளிலும் சிறந்த வர்ணனையாளராகவும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.