திருடச் சென்ற வீட்டில் உறங்கிவிட்டதால் மறுநாள் காலையில் வீட்டாரிடம் சிக்கி தாக்கப்பட்ட பெண்கள் ஆடை திருடன்.

இரவு நேரங்களில் பெண்களின் ஆடைகளைத் திருடிச் செல்லும் நபர் ஒருவர் வீடு ஒன்றில் ஆடைகளை
எடுத்துக் கொண்டு அவ்வீட்டில் உறங்கிவிட்டதால் மறுநாள் காலையில் வீட்டாரிடம் சிக்கி தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று நிகவெரட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் திருமணமாகி வேறு பிரதேசத்துக்குச் சென்றுள்ள போதிலும் அவ்வப்போது தனது ஊருக்கு வந்து இரவு வேளைகளில் வீடுகளுக்குச் சென்று இவ்வாறு பெண்களின் ஆடைகளைத் திருடும் வழக்கத்தைக் கொண்டிருந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.


இச்சம்பவம் இடம்பெற்ற இரவும் இந்த நபர் அவரது சொந்த ஊருக்கு வந்து தனது வழமையான செயலில் இறங்கியுள்ளார்.

பல வீடுகளுக்குச் சென்ற போதிலும் அவரது நோக்கம் நிறைவேறாத நிலையில் வீட்டார் எவரும் இல்லாத வீடு ஒன்றினுள் வீட்டின் ஜன்னலை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளார்.

அவ்வீட்டில் வசிக்கும் தாயும் அவளது மகளான யுவதியும் அன்றைய தினம் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்ததால் ஒருவரும் இல்லாத வீட்டில் இந்த நபர் தனது விருப்பம் போல் வீட்டுக்குள் சுற்றித் திரிந்து அங்கிருந்த பெண்களின் ஆடைகளையும் எடுத்துள்ளார்.

மதுபானம் அருந்தியிருந்த குறித்த நபர், அவரது நோக்கம் நிறைவேறிய மகிழ்ச்சியில் கட்டிலில் ஓய்வுக்காக உறங்கிய போதும் அவர் அதில் ஆழ்ந்து உறங்கியுள்ளார். மறுநாள் காலையில் அவர் எழுந்திருக்காத நிலையில் வெளியே சென்றிருந்த தாயும் மகளும் தமது வீட்டுக்குத் திரும்பி வந்துள்ளனர்.

அவர்கள் வீட்டினுள் நுழைந்து பார்த்த போது மகளின் கட்டிலில் அந்த நபர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுடன் அச்சமுமடைந்துள்ளதோடு உடனடியாக உறவினர்களுக்கும் அயலவர்களுக்கும் அறிவித்ததன் பின்னர் அங்கு வந்தவர்கள் இவரைத் தாக்கி பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபருக்கு எதிராக வீட்டை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment