பக்தாதிலுள்ள “கிறீன் ஸோன்” மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்
| January 09, 2020
அமெரிக்க தூதரகம் மற்றும் ஏனைய நாட்டு தூதரகங்கள் அமையப் பெற்றுள்ள அதி உயர் பாதுகாப்பு வலையத்தின் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இத்தாக்குதலில் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லையெனவும் கூறப்படுகின்றது.
இத்தாக்குதலுக்கு எவரும் இதுவரையில் பொறுப்புக் கூறவில்லையெனவும் தகவல்கள் தெரிவித்துள்ளன. ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவ படை முகாம்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி 24 மணி நேரம் முடிவடைய முன்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது