சர்ச்சைக்குரிய கருத்துக்கு தொண்டமானிடம் மன்னிப்புகோரிய பொலிஸ் தலைமையகம்!
| May 20, 2020
அண்மையில் தனியார் வானொலி ஒன்றில் எஸ்.எஸ்.பி. நவாஸ் அமைச்சர் தொண்டமான் வெளியிட்டிருந்த கருத்து தவறானதென கூறியிருந்தமை பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
ஊரடங்கு காலப்பகுதியில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் 7000ம் இளைஞர்கள் மலையகம் திரும்பியுள்ளதாக கூறியிருதார். அதனை எஸ்.எஸ்.பி. நவாஸ் மறுத்திருந்தார்.
இந்த விடயங்கள் தொடர்பில் பல சர்ச்சைகள் கடந்த சில நாட்களாக நீடித்துவந்த நிலையில், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் எஸ்.எஸ்.பி.நவாஸ் வெளிட்ட கருத்தை மீளப் பெற்றுக்கொள்வதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்தது