வெலிகம சுகாதார அலுவலக பகுதியில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 09 பேர்


 

கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்ட 9 பேர் வெலிகம  சுகாதாரப் பகுதியின்  அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவித்தன.

 வெலிகம மாத்தறை வீதி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர், ஹெட்டிவீதியவில்   ஒருவர், ஜின்னா வீதியில் ஒருவர் மற்றும் பழைய காலி வீதியில் ஒருவர் கோவிட் வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 இவர்கள் 51,17,23,75 வயதுடைய நான்கு பெண்கள் மற்றும் 16,59,24,23,20 வயதுடைய ஐந்து ஆண்கள் உள்ளனர்.

 பாதிக்கப்பட்டவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,

 மேலும் அவர்களது உறவினர்கள் வீட்டிலேயே மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

0 Comments:

Post a Comment