வெலிகம நகரில் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் இன்றிரவு முதல் தளர்த்தப்படும்
| December 18, 2020
வெலிகம சுகாதார அலுவலர் அலுவலகப் பகுதியில் உள்ள ஆறு கிராம பிரிவுகளுக்கு (9) ஆம் திகதி 24 கோவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து
சுகாதார துறையின் அறிவுறுத்தலின் பேரில்,தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே, பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்தார்
அதன்படி,
கல்பொக்க கிழக்கு,
கல்பொக்க மேற்கு,
புதிய தெரு
கோட்டெகொட
கோஹுனுகமுவா
மற்றும் ஹெட்டிவிதிய
ஆகிய கிராம பிரிவுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது
பொதுமக்கள் இதன் மூலம் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்திற்கொண்டு பயணகட்டுப்படுகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
நோய் மேலும் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறையினரால் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புகளை கடைபிடிக்குமாறும்
கூறப்பட்டுள்ளது.