ஜனாஸாவை எரிப்பதா? அடக்குவதா? இறுதி முடிவெடுக்க 30 பேர் கொண்ட குழு - ஜனாதிபதி ஆலோசனை



கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குவதா, அல்லது தற்போதும் அமுலில் உள்ள தகனம் மட்டு என்ற கொள்கையைத் தொடர்வதா என இறுதித் தீர்மானத்தை எடுக்க, நாட்டிலுள்ள முன்னணி வைரஸ் குறித்த நிபுணர்கள் 30 பேரை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ள விசேட ஆலோசனைக்கு அமைய இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளதாக அரச உயர் மட்ட தகவல்கள் தெரிவித்தன. அதன்படி இந்தக் குழு ஊடாக, அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து இறுதியான முடிவை அரசாங்கத்துக்கு வழங்குமாறு, ஜனாதிபதிபதி, சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

அடக்கம் செய்வதா? தகனம் செய்வதா எனும் விடயத்தில் அரசியல் ரீதியாக அல்லாமல், சுகாதார நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானம் எடுக்குமாறும் அதனை மிக விரைவாக அரசாங்கத்துக்கு அறியத் தருமாரும் ஜனாதிபதியின் ஆலோசனைய்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வது தொடர்பில் பல்வேறு மட்டத்தில் இருந்தும் அரசாங்கத்துக்கு எதிர்ப்புகள்வர ஆரம்பித்துள்ளன. இது தொடர்பில் நாடளாவிய ரீதியில் பொதுமக்களும் எதிர்ப்புகளை முன்வைக்கும் நிலையிலேயே ஜனாதிபதி, இறுதி முடிவை எடுக்க 30 முன்னணி வைரஸ் குறித்த நிபுணர்களைக் கொன்ட குழுவை நியமிக்க ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments:

Post a Comment