Showing posts with label வெலிகம. Show all posts
Showing posts with label வெலிகம. Show all posts

வெலிகம நகரசபை தலைவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் மீது குற்றச்சாட்டு சுமத்தி எழுதிய கடிதம் தொடர்பாக
வெலிகம நகரசபை தலைவர் ரொஹான் விஜ்ஜயவிக்ரம மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு நகரசபை உறுப்பினர்களிடம் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம தெரிவித்துள்ளார்.
    பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைவர் பதவியிலிருந்தி பதவி விலக வேண்டும் என்றும் தமைப்பதவியில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது இதற்கு எதிராக நாட்டில் உள்ள வேறுபகுதிகளில் ஐக்கிய தேசிய கட்சி நகரசபை உறுப்பினர்கள் வெலிகம நகரசபை தலைவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள். விடுத்துள்ளதாக மேலும் அவர் குறிப்பிட்டார்.

    வெலிகம நகரசபை தலைவர் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டிருந்தால்  அவருக்கு எதிராக கட்சியில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்
    Read more »

    சந்தேகத்திற்கு இடமான ஆயுதங்கள் இருப்பதாக வெலிகம வெலிபிடிய பிரதேசத்தில் அடக்கப்பட்ட ஜனாஸா கபுருகள் தோண்டப்பட்டு சோதனை.

    வெலிகம வெலிபிடிய பிரதேசத்தில் மலே பள்ளிவாசல் மையவாடியில் அடக்கப்பட்டிருக்கும் கப்ர் இல் ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸ் ற்கு கிடைத்த  முறைப்பாட்டை அடுத்து
     காவற்துறையினர் , விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணவத்தினர் இணைந்து வெலிகம வெலிபிடிய பிரதேசத்தில்  மையவாடியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்

    அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸா கபுருகள் சில தோண்டப்பட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக பிரதேசவசிகள் தெரிவிக்கின்றனர்.

    குறிப்பிட்ட பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான பொருற்கள் எதுவும் கண்டெடுக்க படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

    சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் பொருட்கள் தொடர்பில்  கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
    Read more »

    வெலிகம கபுவத்தை பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான பை ஒன்று பொலிஸ் தீவிர விசாரணை

    .வெலிகம கபுவத்தை பகுதியில் ஆற்றங்கரையில் யில் வீசப்பட்ட பை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது

     சந்தேகத்திற்கு இடமான பை இருப்பதாக பிரதேசவாசிகளால் பொலிஸார்கு அறிவித்ததை அடுத்த அங்கு விரைந்த பொலிஸ்  மற்றும் காவற்துறையினர் , விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணவத்தினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்
     பையில் இருந்து பல தொகை CD களை கண்டெடுத்தனர்.
     மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருக்கின்றன
    மேலும் அப்பிரதேசத்தில்
    காவற்துறையினர் , விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணவத்தினர் இணைந்து தற்சமயம் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
    Read more »

    வெலிகம மற்றும் அண்டிய பகுதிகளில் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்

















     வெலிகம ,வெலிபிடிய, புதியதெரு மதுராபுரி  மற்றும்  அண்டிய பகுதிகளில் தற்போதைய நிலையில் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

    காவற்துறையினர் , விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணவத்தினர் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் பொருட்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று அதிகாலை இந்த விசேட செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
    Read more »

    வெலிகம பகுதியில் முச்சக்கரவண்டியில் வந்து வீசிய நிலையில் குத்து வாள் மற்றும் வாள் கத்தி பாதுகாப்பு படையினரால் மீட்பு.




    வெலிகம காடேவத்த பகுதியில் முச்சக்கரவண்டியில் இருந்து கைவிடப்பட்டு போன நிலையில் குத்து வால் மாற்று கத்தி இன்று பொலீசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது

    இன்று வெலிகம காடேவத்த பிரதேசத்தில்
    முச்சக்கரவண்டி ஒன்று சந்தேககமாக காணப்படுவதாக பிரதேச மக்கள் பொலிஸ் மாற்று பாதுகாப்பு பிரிவினரிற்க்கு அறிவித்ததை அடுத்து  பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படை அங்கு சென்றது

    பை ஒன்று முச்சக்கரவண்டியில் இருந்து வீசி சென்றதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர் பையில் இருந்து குத்து வால் மற்றும் கத்தி கண்டெடுக்கப்பட்டுள்ளது சந்தேக நபரை தேடும் பணியில் வெலிகம போலீஸ் மற்றும் பாதுகாப்புபடையின் ஈடுபட்டுள்ளனர்

    Read more »

    வெலிகம பகுதி முஸ்லிம் நபரொருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி 56 லட்சம் ரூபா பணம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது!

    இவ்வளவு தொகைப்பணம் எங்கிருந்து வந்தது எனும் கேள்விக்கு உரிய விடை கிடைக்காததால் அங்கிருந்த ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

    குறித்த நபர் தான் ஒரு பட்டதாரி என்றும் சவூதியில் கணனி நிறுவனமொன்றில் தொழில்புரிந்து விட்டு கடந்த டிசம்பர் மாதம் தன் மனைவியுடன் இலங்கை வந்ததாகவும் கூறியுள்ளார்.

    கைது செய்யப்பட்ட நபர் நாளை மாத்தறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

    வீடுகளில் அதிக எண்ணிக்கையில் சிம் கார்ட், மொபைல் போன்ஸ்,போன்ஸ் பெற்றரி, பணம் என்பவற்றை வைத்திருந்த பலர் கடந்த சில நாட்களாக கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது!

    -அல்மசூறா பிறேக்கிங் நியூஸ்
    Read more »