Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவுசெய்த பங்களாதேஷ்

இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் முஷ்பிகுர் ரஹிமின் அசத்தலான ஆட்டத்தினால் 7 விக்கெட்டுகளால் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றுள்ளது.



டெல்லியில் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றது.

149 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 19.3 ஓவரில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

லிட்டன் தாஸ் 7 ஓட்டத்துடனும், மொஹமட் நைம் 26 ஓட்டத்துடனும், சவுமி சர்கார் 39 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க அணியின் வெற்றிக்காக பெரிதும் போராட்டிய முஷ்பிகுர் ரஹிம் 43 பந்துகளில் 60 ஓட்டத்துடனும், மாமதுல்லா 15 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.



சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டி 2005 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது. இன்றைய இந்தியா-பங்களாதேஷ் அணிகள் இடையிலான மோதல், ஆண்களுக்கான 1000 ஆவது சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியாகும்.

இப் போட்டியில் இந்திய அணியினை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்திய பங்களாதேஷ் அணி வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது. அது மாத்திரமன்றி பங்களாதேஷ் அணி இந்த வெற்றியானது சர்வதேச இருபதுக்கு - 20 அரங்கில் இந்தியாவுக்கு எதிரான முதல் வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது.
Read more »

உலக கிண்ண அரையிறுதியில் இலங்கைக்கு வாய்ப்பு கிடைக்க இது தான் நடக்க வேண்டும்.


உலக கிண்ணத்தின் புள்ளி பட்டியலில் அரையிறுதி வாய்ப்பை அவூஸ்ரெலியா மட்டுமே பெற்றுள்ளது.

இன்னும் மூன்று அணிகள் தெரிவு செய்யப்படும் நிலையில் இந்தியா 11 புள்ளிகள் (இன்னும் இலங்கை, வங்களாதேஷ் அணிகளுடன் போட்டிகள்) உள்ளன.

நியூசிலாந்து அணியும் 11 புள்ளிகள் (ஆனால் இங்கிலாந்து அணியிடம் மட்டும் ஒரு போட்டி) உள்ளன. இங்கிலாந்தை வீழ்த்தினால் 13 புள்ளியை பெற்று உள்ளே செல்லும்

இங்கிலாந்து 10 புள்ளிகள் பெற்றுள்ளன. நியூசிலாந்து அணியுடன்உள்ள போட்டியில் வீழ்த்தினால் 12 புள்ளியை பெற்று உள்ளே செல்லும்.

பாகிஸ்தான் அணி 9 புள்ளிகள் (வங்களாதேஷ் அணியுடன் மட்டும் போட்டி) உண்டு. வென்றால் 11 புள்ளிகளை பெரும்.

வங்களாதேஷ் இந்தியா, பாகிஸ்தான் என இரு போட்டி உண்டு. வென்றால் 11 புள்ளிகள் கிடைக்கும்.

இலங்கை 8 புள்ளிகள் (இந்தியா அணியை அதிக ஓட்டத்தால் வீழ்த்தினால் 10 புள்ளிகள்) கிடைக்கும்.

சொல்ல வாரது என்னவென்றால் இலங்கை அரையிறுதி செல்ல வேண்டுமானால் (நியூசிலாந்து அணி இங்கிலாந்தை வீழ்த்தி, வங்களாதேஷ் அணி பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும், பின்னர் இந்தியா வங்களாதேஷை வீழ்த்த வேண்டும்)

பின்னர் இலங்கை அணி இந்தியா அணியை பெரிய சராசரியால் வீழ்த்துமேயானால் அரையிறுதி செல்லும்.

இது நடக்குமா....???
Read more »

இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார்.


பி.பி.சி. செய்திச் சேவைக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு உலகக் கிண்ணத் தொடர் நிறைவடைந்ததும், ரசிகர்களுக்காக மேலும் ஒரு தொடரில் விளையாடியவுடன் அவர் ஓய்வெடுப்பதாக அறிவித்துள்ளார்.
நான் அணியின் வெற்றிக்காக மிகவும் போராடினேன் ஆனால் எனது உடல் தற்போது சோர்வடைந்து விட்டது. எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள சர்வதேச இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் தான் விளையாட எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த மலிங்க, எனினும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துடன் கலந்தாலோசித்த பின்னரே அது தொடர்பான உறுதியான தகவல்களை வெளியிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகக் கிண்ணத் தொடர் நிறைவுபெற்றதும், சர்வதேச கிரிக்கெட் தொடர் ஒன்றில் விளைாயடி விடைபெற வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகவுள்ளது. அதன்படி பங்களாதேஷ் அல்லது நியூஸிலாந்து அணியுடானான போட்டி எனது இறுதி தொடராக அமையலாம்.
நுவான் குலசேகர சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடம்பிடித்த இலங்கையின் முதல் வீரர் என்ற பெருமையை உடையவர். நான் அவருடன் 10 ஆண்டுகளாக இணைந்து விளையாடியுள்ளேன். எனவே அவருடன் இணைந்து ஒரு தொடரில் விளையாடியதன் பின்னர் நான் ஓய்வு பெற எதிர்பார்த்துள்ளேன். அதற்கான முயற்சிகளையும் முன்னெடுப்பேன்.

எனக்கு தற்போது 36 வயதாகிறது. போட்டிகளில் விளையாடுவதற்கான சக்தி என்னிடம் குறைவாக காணப்படுகின்றது. அதனால் எதிரனியினரை வீழ்த்துவது சவால் மிக்கதொன்றாக காணப்படுகின்றது.
நாங்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் கடந்த காலங்களில் 2,3 மற்றும் நான்காவது இடத்தில் இருந்தோம் ஆனால் அந்த நிலை தற்போது இல்லை. அதை எண்ணி நான் மிகுந்த வேதனை அடைகின்றேன் எனவே நான் ஓய்வு பெறுவதற்கு முன்னர் தரவரிசைப் பட்டியலில் 9 ஆவது இடத்தில் இருக்கும் எமது அணியை 7 ஆவது இடத்துக்கு முன்னேற்றினால் மகிழ்ச்சியைடைவேன்.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் நேரடியாக விளையாடுவதற்கான தகுதியை நாம் இழந்துள்ளோம். எனவே தான் நான் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி அந்த தகுதியை அணிக்காக பெற்றுக் கொடுத்ததன் பின்னர் ஓய்வு பெற வேண்டும் என எதிர்பார்த்துள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Read more »

உலகக்கோப்பையில் இலங்கைக்கு அரையிறுதி வாய்ப்பு எப்படி? இந்த அணி தோற்கனுமே!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு அரையிறுதி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மே மாதம் 30-ஆம் திகதி துவங்கிய உலகக்கோப்பை தொடர் இப்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
கிட்டத்தட்ட அனைத்து அணிகளும், இந்தியாவைத் தவிர 6 போட்டிகளில் விளையாடிவிட்டன.இதில் இலங்கை அணி விளையாடிய 6 போட்டிகளில் 2-ல் வெற்றி 2-ல் தோல்வி, இரண்டு போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டது என மொத்தம் 6 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளன.

இன்னும் இலங்கை அணிக்கு 3 போட்டிகள் தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவு, இந்தியாவுடன் உள்ளன. இந்த மூன்று போட்டிகளில் இலங்கை கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
இதில் மூன்றிலும் வெற்றி பெற்றுவிட்டால் இலங்கை அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். அதே சமயம் ஒன்றில் தோல்வியடைந்துவிட்டால் 10 புள்ளிகளுடன் இருக்கும்.அப்போது இங்கிலாந்து அணி அனைத்து போட்டிகளிலும் தோற்க வேண்டும், வங்கதேசம் அணி இரண்டு போட்டிகளுக்கு மேல் ஜெயிக்க கூடாது, பாகிஸ்தான் மீதம் விளையாடும் போட்டிகளில் ஒரு போட்டியிலாவது தோற்க வேண்டும்.

இது நடந்தால் மட்டுமே இலங்கை அணியால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும்.
Read more »

சூப்பர் ஓவரில் மூன்றாவது பந்தில் வெற்றி!

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.



12 ஆவது ஐ.பி.எல். தொடரில் 51 ஆவது லீக் ஆட்டம் மும்பை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு 8.00 மணிக்கு ஆரம்பமானது.



இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை குவித்தது.

163 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஐதராபாத் அணியும் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை குவித்தது.



ஐதராபாத் அணி சார்பில் விரிடிமன் ஷா 25 ஓட்டத்துடனும், குப்டீல் 15 ஓட்டத்துடனும், கேன் வில்லியம்சன் 3 ஓட்டத்துடனும், விஜய் சங்கர் 12 ஓட்டத்துடனும் அபிஷேக் சர்மா 2 ஓட்டத்துடனும், மொஹமட் நபி 31 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், மணீஷ் பாண்டே 71 ஓட்டத்துடனும், ரஷித் கான் எதுவித ஓட்டமின்றியும் ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.



பந்து வீச்சில் மும்பை அணி சார்பில் பும்ரா மற்றும் குர்னல் பாண்டியா, ஹர்த்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.



போட்டி சமநிலையில் முடிவடைந்தமையினால் இதையடுத்து சூப்பர் ஓவர் வழங்கப்படட முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 8 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

சூப்பர் ஓவரில் 9 ஓட்டங்களை நோக்கிக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மும்பை அணி மூன்று பந்துகளை எதிர்கொண்டு வெற்றியிலக்கை கடந்தது (பாண்டியா -7, பொல்லார்ட் - 2)

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்
Read more »