காத்தான்குடியில் ஆயுதங்கள் மீட்பு

காத்தான்குடி பிரேதேசத்தில் இன்று காலை தேடுதலில் ஈடுபட்ட படையினர் கத்தி ,வாள் ,சீடி மற்றும் ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளனர் .



காத்தான்குடி பெரிய மீரா பள்ளிவாயல் மையவாடியில் புதைக்கப் பட்டிருந்த நிலையில் குறித்த ஆயுதங்களை படையினர் மீட்டுள்ளனர்.

கல்லடி 231 ஆவது படைப்பிரிவினரே குறித்த ஆயுதங்களை மீட்டுள்ளனர்.







Read more »

தாக்குதலுக்கு இலங்கையை தெரிவுசெய்ய இதுவே காரணம் என்கிறார் இராணுவத் தளபதி

கடந்த ஒரு தசாப்தத்தில் சுதந்திரத்தை நன்றாக அனுபவித்தபோதும் தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொல்லாமையே மீண்டும் பயங்கரவாத தாக்குதல் ஒன்றுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதென இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக தெரிவித்துள்ளார்.



நாட்டில் நிலவும் பயங்கரவாத சூழல் குறித்து அவர் அளித்துள்ள செவ்வியொன்றில் இதனை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதில் அவர் மேலும் கூறுகையில்,

இந்த தாக்குதலுக்கு வெறுமனே இலங்கைக்குள் எந்த திட்டங்களும் இருக்க முடியாது, நிச்சயமாக இதில் வெளிநாட்டு சக்திகள் உள்ளன. அவர்களின் வழிநடத்தாலில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நடந்துள்ள சம்பவத்தில் யார் தவறிழைத்தது என்ற காரணியை ஒருவர் மீது சுட்டிகாட்ட முடியாது.

இதில் சகல தரப்பினரும் பொறுப்புக்கூற வேண்டும். புலனாய்வுத்துறை தகவல் கிடைத்ததில் இருந்து அத பின்னர் இதனை கையாண்ட அனைவரும் பொறுப்பாளிகள் தான். தேசிய பாதுகாப்பு விடயத்தில் சகலரும் அலட்சியமாக இருந்துள்ளனர். அரசியல் வாதிகளும் இதில் தமது கடமைகளை தவறவிட்டுள்ளனர். ஆகவே அடுத்தகட்டமான செய்யவேண்டியவற்றை சரியாக கையாள வேண்டும் என்றார்.
Read more »

நாட்டில் இவ்வாறான ஒரு நிலை வரும் என நாம் முன்னரே கூறினோம்- கருணா அம்மான்



நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கைப்பற்றப்பட்டு வரும் வெடிபொருட்கள் தொடர்பில் பூரண விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய சூழ்நிலையில் அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கரமான சூழ்நிலையினை முடிவுக்கு கொண்டுவர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று(03) மட்டக்களப்பு கல்லடியில் உள்ள அவரது அலுவலகத்தில்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையில் பெருமளவான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. இவை பாரிய சேதங்களை ஏற்படுத்தக்கூடிய வெடிபொருட்கள், இவை இலங்கைக்கு எவ்வாறு கொண்டுவரப்பட்டது, இதற்கான நிதி எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் விசாரணை கட்டாயம் இடம்பெற வேண்டும்.

அண்மையில் நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் உயிரிழந்துள்ளவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் என நாங்கள் கடந்த காலத்தில் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தோம். ஆனால், அதனை யாரும் கருத்தில்கொள்ளாததனால்தான், இவ்வாறான குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். (மு)
Read more »

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் இராணுவத்தால் கைது!


யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் இராணுவத்தால் கைது!
யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆயிதங்கள் பல மீட்பு...

யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று படையினர் நடத்திய சோதனையில் அரசினால் தடை செய்யப்பட்ட புலி பயங்கரவாத இயக்க தலைவர் பிரபாகரன் படம்,டெலஸ்கோப்புகள் இராணுவ சீறுடைகள்,

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து உயிரிழந்த மாவீரர்களின் படங்கள், ஸ்னைப்பர் மற்றும் தூர நோக்கி இராணுவ சப்பாத்துக்கள் மீட்க்கப்பட்டுள்ளன.







Read more »

ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கொழும்பு நகருக்கு மீண்டும் ஆபத்து! பொலிஸார் எச்சரிக்கை

கொழும்பிலுள்ள பாலங்களை தகர்க்க ஐ.எஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன.

கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் பாலங்களை குண்டு வைத்து தகர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலின் தொடர்ச்சியாக மேலும் பல தாக்குதல்கள் திட்டமிப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கொழும்பு நகரத்திற்கு அருகிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

கங்கைகள் மற்றும் பாலங்களை பாதுகாப்பதற்காக அதிகமாக படகுகளை பயன்படுத்துமாறு கடற்படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய கொழும்பு நகரத்திற்குள் நுழையும் பாலங்கள் சிலவற்றை வெடிக்க வைத்து தகர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த மாத இறுதிப்பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல் காரணமாக 257 பேர் உயிரிழந்த நிலையில் 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
Read more »

தீவிரவாதிகள் தொடர்பில் காவற்துறைக்கு தகவல் வழங்கிய 3 முஸ்லிம்களுக்கு தலா 10 இலட்சம்


கடந்த வாரம் சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாக காவற்துறைக்கு தகவல் அளித்த மூன்று முஸ்லிம் நபர்களுக்கு தலா 10 இலட்சம் ருபாய் பணப்பரிசு வழங்க காவற்துறை தலைமையகம் தீர்மானித்துள்ளது.

அதேபோல் , குறித்த சந்தர்ப்பத்தில் உடனடியாக செயற்பட்ட மூன்று காவற்துறை அதிகாரிகளுக்கும் தலா 5 இலட்சம் ரூபாய் பணப்பரிசு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Read more »

நிகாப் அணிந்து சென்ற மல்வானை பெண்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (2019.05.03) பியகம, பண்டாரவத்தை பகுதியில் நிகாப் அணிந்து சென்ற மல்வானை பெண்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவசர கால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும் இக் காலத்தில் முகம் மூடுவது (நிகாப்/ புர்கா உட்பட) தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே இது சட்ட விரோத செயற்பாடாக கருதப்படுகிறது.

அது மட்டுமல்லாது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும் நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடிக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளது.

எனவே எமது முஸ்லிம் தாய்மார்கள், சகோதரிகள் எமது நாட்டின் சட்டத்தை மதித்து நடக்குமாறும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் அறிவுரையை ஏற்று நடக்குமாறும் பனிவுடன் வேண்டிக் கொள்கிறோம்.

-மல்வானை நியூஸ்
Read more »

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பெண் பலி; 46 பேர் காயம்

வெனிசூலாவில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தினால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


மேலும், இந்த மோதலில் 46 பேர் காயமடைந்தனர்.
இது குறித்துடுவிட்டர் வலைதளத்தில் அந்த நாட்டின் தன்னார்வ அமைப்பான வெனிசூலா சமூக மோதல் கண்காணிப்புக் குழு வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

ஜனாதிபதி மதுரோவுக்கு எதிராக தலைநகர் கராகஸில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில், ஜிருபித் ரெளஸியோ என்ற 27 வயது பெண்ணுக்கு தலையில் குண்டு பாய்ந்தது. அதையடுத்து, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இந்த மோதலின்போது 46 பேர் காயமடைந்ததாக மனித உரிமை மற்றும் வைத்திய சேவை அமைப்புகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Read more »

வவுனியாவில் முஸ்லிம் இளைஞன் வெட்டிக்கொலை

வவுனியாவில் முஸ்லீம் இளைஞன் வெட்டிக்கொலை வவுனியா சாளம்பைக்குளத்தில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். மரணமடைந்தவர் சாளம்பைக்குளத்தை சேர்ந்த இம்திகா அஹலம் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார். உடலின் பல இடங்களில் வெட்டுக்காயங்களுடன் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை உயிரிழந்த நபர் மீது ஏற்கனவே திரவக (அசிட்) தாக்குதல் ஒன்றும் இடம்பெற்று சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் அறியப்படுகிறது

 
 
Read more »

கைது செய்யப்பட்டவர்களிடம் CID விசாரணை



இன முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட 600 கடிதங்களுடன் கைதான 03 பேரும் மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இனமுறுகளை ஏற்படுத்தும் வகையிலும், ஜனாதிபதிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலும் தயாரிக்கப்பட்ட 600 கடிதங்களுடன் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் ஒருவரின் பணியாளர்கள் மூவர் நேற்று இரவு கொழும்பு மத்திய அஞ்சலகத்தில் கைதாகினர்.

குறித்த 600 கடிதங்களையும் மத்திய அஞ்சலகத்தில் இருந்து அனுப்புவதற்காக பிரவேசித்த வேளையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கண்டி பிரதேசத்தில் உள்ள பல விகாரைகளுக்கு இந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவிருந்தன. கைதானவர்கள் 24, 28 மற்றும் 41 வயதுகளை உடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read more »