Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

என்னை மீட்டுட்டீங்க; என் குடும்பத்தின் வறுமையைப் போக்குங்க சார்!- அதிகாரிகளை கண்கலங்கவைத்த சிறுவன்

கஜா புயலின் போது மரம் விழுந்ததில் நடராஜன் என்பவர் இறந்தார். அவரின் இறுதிச் சடங்கின் செலவுக்கு பணம் இல்லாததால் அவரது மகன் சூர்யாவை ரூ,6,000 பணத்துக்கு ஆடு மேய்ப்பதற்கு கொத்தடிமையாக அனுப்பி வைத்தனர் குடும்பத்தினர். தஞ்சாவூர் அருகே கொத்தடிமையாக ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்த சூர்யாவை மீட்டனர் அதிகாரிகள். `சார், என்னை மீட்டுட்டீங்க. என் குடும்பத்தையும் கஷ்டத்தில் இருந்து மீள உதவி செய்யுங்க சார்' என கூறியது அனைவரையும் கண்கலங்க வைத்தது.
தஞ்சாவூர் அருகேயுள்ள மேல வன்னிப்பட்டு கிராமத்தில் கஜா புயலுக்குப் பிறகு10 வயது கொண்ட சூர்யா என்ற சிறுவன் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தான். இதைப் பார்த்த அப்பகுதியினர், `ஏன் தம்பி படிக்கிற வயசுல ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்க' என பரிவுடன் கேட்டுள்ளனர். அதற்கு சூர்யா சொன்ன பதில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ``எனக்குச் சொந்த ஊர் பட்டுக்கோட்டை அருகே உள்ள சூரப்பள்ளம். கஜா புயல் அடிச்சப்ப எங்க அப்பா மேல் மரம் முறிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் இறந்து விட்டார். அவரின் இறுதி சடங்குக்கு பணம் இல்லாமல் தவித்தனர் எங்கள் குடும்பத்தினர். இதனால் பொட்டலங்குடி என்ற ஊரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரிடம் பேசி ரூ.6,000 முன் பணம் பெற்றனர். பின்னர் அப்பாவின் காரியங்கள் முடிந்த பிறகு நான் இங்கு ஆடு மேய்ப்பதற்கு வந்து விட்டேன். அதன் பிறகு என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசக் கூட இல்லை. அப்பா சடலமாக கிடக்கும்போது அவரை அடக்கம் செய்வதற்கு வேறு வழி தெரியவில்லை அவர்களுக்கு. அதான் என்னை கொத்தடிமையாக அனுப்பி வைத்து விட்டனர்'' என்று கூறியுள்ளான்.

அதன் பிறகு சூர்யாவின் நிலை குறித்து தஞ்சாவூர் சைல்டு லைன் அமைப்புக்குப் புகார் கூறியுள்ளனர். இதையடுத்து, ஆர்.டி.ஓ சுரேஷ் உத்தரவின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி சூர்யாவை மீட்டனர். அவர்களிடம் சூர்யா, `எல்லோருக்கும் கஷ்டம் வரும் சார். ஆனா புயலடிச்ச சமயத்துல எங்களுக்கு வந்த கஷ்டம் பெரும் கொடுமை. ஒரு பக்கம் அப்பா சடலமாக கிடத்தப்பட்டு இருக்கு. மறுபக்கம் கண்ணீரும் கம்பலையுமாக என் குடும்பம் நின்றது பெரும் துயரம். அவரின் இறுதிச் சடங்கை செய்வதற்கே பெரும் போராட்டமாகிப் போனது சார். என்னை மீட்டதற்கு நன்றி சார். எங்க குடும்பத்தை கஷ்டத்தில் இருந்து மீட்க உதவி செய்யுங்க சார்'' என கேட்டது அனைவரின் கண்களையும் ஈரமாக்கியது. இந்த நிலையில், சூர்யாவுக்கு உடனடி நிவாரணமாக ரூ. 20,000 வழங்குவதற்கும், குழந்தைகள் நலக் குழுமத்தில் ஒப்படைத்து கல்வி, மறுவாழ்வு அளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read more »

ஆண்கள் அனைவருக்கும் இப்போது ஹீமோகுளோபீன் குறைபாடு

பொதுவாக முன்னரெல்லாம்  குழந்தைகள் பெண்களுக்கு மட்டும்தான் இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு இருந்தது. தற்போது ஆண்களில் சரிபாதியினரும் ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மனிதன் ஆரோக்கியமாக நடமாட அவசியமானது ஹீமோ குளோபின். ஹீமோகுளோபின் நமது உடலில் சிவப்பு இரத்த அணுக்களில் உள்ள இரும்புச் சத்து நிறைந்த புரதம். நுரையீரலிலிருந்து ஒக்ஸிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்லும் பொறுப்பு இந்தப் புரதத்துக்கு உரியது. ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக இருப்பதற்கு ஹீமோகுளோபின் சரியான அளவில் இருப்பது முக்கியம்.
உடல் சோர்வு, அசதி, அதிக களைப்பு, தலைவலி, களையிழந்த வெளிறிய சருமம், மயக்கம், உடலில் வலுவே இல்லாதது போன்ற உணர்வு, பசியின்மை இப்படியான அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தொடர்ந்து இருந்தால் கூட ஹீமோகுளோபின் அளவை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
உதாரணத்திற்கு வீதியில் செல்லும் 100 பேரை பரிசோதனை செய்தால் 70 பேருக்கு ஹீமோகுளோபின் குறைபாடு இருக்க வாய்ப்பிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஹீமோகுளோபின் அளவு குறைவதற்கு இரும்புச்சத்து குறைபாடு பொதுவான காரணம்.
பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஹீமோகுளோபின் அளவில் சிறிதான அளவில் மாற்றம் இருக்கும். தற்போது மாதவிடாய்க் காலமும் (நாட்கள்) அதிகரித்து இரத்தப் போக்கும் அதிகரித்து வருகிறது. மேலும் கர்ப்பகாலம், அடிக்கடி கருச்சிதைவு,மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான இரத்த இழப்பு சிலருக்கு ஹீமோகுளோபின் குறைபாட்டுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன.
ஆண்கள் குடும்ப பொருளாதாரம், பணியிடத்தில் மனஉளைச்சல், எப்போதும் ஒருவித பதற்றம் என்று உணவில் ஈடுபாடின்றி இருப்பது இப்போது அதிகரித்திருக்கிறது. இது ஒருகட்டத்தில், ஆரோக்கியக் குறைபாட்டில் கொண்டு போய் நிறுத்துகிறது. இரும்புச்சத்து, பி 12 விற்றமின் சி உட்பட பல குறைபாடுகளும் ஹீமோகுளோபின் அளவை படிப்படியாக குறைத்து விடுகின்றன. இதுதவிர அறுவைச் சிகிச்சை, மூலநோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் இழக்கும் இரத்தம், மலம் கழிக்கும் போது மறைமுகமாக வெளியேறும் இரத்தம், நீரிழிவு, குடற்புண், சிறுநீரகப் பிரச்சினை, வயிற்றுப் புற்றுநோய், எலும்பு மச்சையில் பிரச்சினை முதலானவை கூட ஹீமோகுளோபின் குறைவதற்குக் காரணமாக இருக்கலாம்.
எப்படியானாலும், மாறிவரும் உணவுப் பழக்கமே ஹீமோகுளோபின் குறைய முக்கிய காரணம் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.
30 வருடங்களுக்கு முன்பு உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களையும் சரிவிகித முறையில் சரியான காலங்களில் எடுத்துக்கொண்டதால் மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அன்றாடம் ஒரு பழம் என்பதெல்லாம் இப்போது மறந்தே போன காலமாகி விட்டது. (18ஆம் பக்கம் பார்க்க)
Read more »

அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் முடிவெடுத்தது ஏன்?

தற்போதைய இந்தியா - பாகிஸ்தான் மோதல் பிரச்சனையின் முதல் நாளில் இருந்தே பதற்றம் அதிகரிப்பதை பாகிஸ்தான் விரும்பவில்லை.

இந்தியாவுடனான பதற்றத்தை தணிக்கவும், உறவை சகஜ நிலைக்கு கொண்டுவரவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கையாளும் உத்திகளின் ஒரு பகுதியாகவே இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை விடுவிக்கும் அவரது நடவடிக்கை அமைந்துள்ளது.


அபிநந்தனை விடுவிக்கும் முடிவை அறிவித்தபோது இம்ரான்கான் எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடவில்லை, தாம் அழுத்தத்துக்கு ஆளானதாகவும் தெரிவிக்கவில்லை.
ஆனால், இந்திய பாகிஸ்தான் உறவில் பதற்றம் தனிவதற்கான நேர்மறையான அறிகுறிகள் தெரிவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். சௌதி வெளியுறவு அமைச்சர் திட்டமிடப்படாத முறையில் பாகிஸ்தானுக்கு திடீரென பறந்து சென்றார். இந்த இரண்டு நிகழ்வுகளும் இந்த விவகாரத்தில் ஏதோ ஒருவகையில் சர்வதேச சக்திகள் ஈடுபட்டிருப்பதைக் காட்டின.

இந்தியா தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கையாளும் அணுகுமுறையை சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

அவருக்கு உண்மையான அதிகாரம் இல்லை. ராணுவத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டவரே அவர் என்பது போன்ற பிம்பத்தை இந்திய ஊடகங்கள் உருவாக்கி இருந்தன. இந்நிலையில் தம்மை ஓர் அரசியல் தலைவராகவும், உண்மையில் பாகிஸ்தானின் விவகாரங்களை கட்டுப்படுத்துகிறவராகவும் நிரூபிக்க அவர் முயற்சி செய்தார்.

பாகிஸ்தானின் முக்கிய முடிவுகள் பாகிஸ்தானின் அரசியல் தலைமையினால்தான் எடுக்கப்படுகின்றன. அதன் ராணுவத் தலைமையினால் அந்த முடிவுகள் எடுக்கப்படவில்லை என்பதை உலகத்துக்கு காட்ட விரும்பினார் அவர்.

பாகிஸ்தான் மற்றும் இந்தியத் தலைவர்கள் தொலைபேசி மூலம் பேசுவார்கள் என்றும் அதன் மூலம் பதற்றம் தணியும் என்றும் பேச்சு நிலவுகிறது.

எனவே, நாள்கள் செல்லச் செல்ல உறவு இரு நாட்டு உறவில் சூடு தணியும். இந்திய விமானப்படை விமானி இந்தியா திரும்புவது அதற்கு உதவும் என்ற நிலை இருக்கிறது.

தொடக்கத்தில் இரண்டு இந்திய விமானப்படை விமானிகள் பாகிஸ்தானில் இருப்பதாக ஒரு குழப்பம் நிலவியது. ஆனால், பாகிஸ்தான் பாதுகாப்பு படை செய்தித் தொடர்பாளர் இந்த குழப்பத்தை தீர்த்து ஒருவர் மட்டுமே பாகிஸ்தான் பிடியில் இருப்பதாக தெளிவுபடுத்தினார்.

ஆனால், சுட்டு வீழ்த்தப்பட்ட இந்திய விமானங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இன்னமும் பாகிஸ்தான் இரண்டு என்றுதான் கூறிவருகிறது. ஒரு விமானம் பாகிஸ்தான் பகுதியில் விழுந்ததாகவும் மற்றொன்று இந்தியப் பகுதியில் விழுந்தது என்பது அவர்களது கூற்று. பாகிஸ்தானின் F16 விமானத்தை வீழ்த்தியதாக இந்தியா கூறுகிறது. ஆனால், பாகிஸ்தானில் அதை நிரூபிக்க சுயாதீனமான ஆதாரம் ஏதுமில்லை.

எனவே நம்மால் உறுதியாக சொல்ல முடிவது இதுதான். ஓர் இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஓர் இந்திய பைலட்டை பாகிஸ்தான் பிடித்துவைத்துள்ளது. மற்றதெல்லாம் கூற்றும் எதிர் கூற்றும்தான்.

தொடர்புடைய செய்திகள்:
  Read more »

  இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில், இந்திய விமானி அபிநந்தனை பாக்கிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.

  இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில், இந்திய விமானி அபிநந்தனை பாக்கிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.

  பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியாவை சேர்ந்த மிக் - 21 ரக விமானம் நுழைந்தபோது அந்த நாட்டு இராணுவ வீரர்களால் குறித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
  இந்த நிலையில் விமானத்தில் இருந்த இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டார்.
  கைதான விமானி அபிநந்தனின் பெயர் மற்றும் விமானப்படையில் அவரது அடையாள எண் ஆகியவற்றை வீடியோவுடன் பாகிஸ்தான் வெளியிட்டிருந்தது
  இந்த நிலையில் பாகிஸ்தான் இராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் வெள்ளிக்கிழமை (இன்றைய தினம்) விடுவிக்கப்படுவார் என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
  மேலும், அபிநந்தன் பஞ்சாப்பின் வாகா எல்லை வழியாக இன்று மாலை 3 - 4 மணிக்குள் தாயகம் திரும்பவுள்ளதாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Read more »

  எங்களிடம் ஒற்றுமை இருக்கிறது; இந்தியாவிடம் இல்லை- பாகிஸ்தான் அமைச்சர்  பாகிஸ்தானில் அரசியல் தலைமை ஒற்றுமையுடன் இருக்கிறது. ஆனால் இந்தியா பிரிந்து காணப்படுகிறது என்று பாகிஸ்தான் நிதி அமைச்சர் அசாத் உமர் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து பாகிஸ்தான் நிதி அமைச்சர் அசாத் உமர் கூறும்போது, “ நாட்டை பாதுகாப்பதுதான் ராணுவத்தின் தலைமை பண்பு. ஆனால் அரசியல்வாதிகளின் தலைமைப் பண்பு என்பது நாட்டில் அத்தகைய சூழலை ஏற்படுத்தாமல் இருப்பது. நான் கடந்த 72 மணி நேரங்களாக நடந்தவைகள் குறித்து பெருமை கொள்கிறேன். பாகிஸ்தானின்அரசியல் தலைமை ஒற்றுமையை காண்பித்துள்ளது. ஆனால் இந்தியாவில் அரசியல் தலைவர்கள் பிரிந்துள்ளனர். பாகிஸ்தானியர்களிடம் எந்த பிரிவும் இல்லை.

  புல்வாமா தாக்குதல், இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடிப்பு என்று இந்தியா - பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் தெரிவித்தார்.

  இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
  Read more »

  அண்ணா அபிநந்தனை எதிர்பார்து காத்திருக்கும் தங்கை ஜூலி!  விமானி அபிநந்தனின் வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறார் ஜூலி. பாகிஸ்தானியர்களிடம் சிக்கிய இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று தெரிவித்து இந்தியர்களின் பாராட்டுகளை பெற்றார். இதையடுத்து அபிநந்தன் இன்று நாடு திரும்புகிறார்.

  அவரின் வருகையை உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்ற இந்த நேரத்தில் ஜூலியும் தன்னுடைய எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளார் 


  அண்ணா உங்களுடைய வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் #alwayswithabinanthan என்று ஜூலி ட்வீட் செய்துள்ளார்.


  ஜூலியின் இந்த ட்விட்டை பார்த்தவர்கள். என்ன தான் இருந்தாலும் ஜூலி ஒரு வீரத்தமிழச்சியடா என்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ட்விட்டரில் ஏதும் ஒரு கருத்ததை சொன்னாலே ஜூலியினை வறுத்தெடுக்கும் இணையவாசிகள் இதற்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்
  Read more »

  வெறித்தனமாக பதிலடி கொடுக்க அணு ஆயுத அமைப்புடன் இம்ரான் கான் திடீர் ஆலோசனை..!


  இந்தியாவுடன் போர் பதட்டம் உருவாகியுள்ள சூழ்நிலையில், அணு ஆயுத விவகாரங்களில் முடிவெடுக்கக்கூடிய அமைப்பின் நிர்வாகிகளுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் திடீர் ஆலோசனை நடத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  புல்வாமாவில் இந்திய சிஆர்பிஎப் படை வீரர்கள் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில், 40 பேர் பலியாகினர்.

  இதையடுத்து நேற்று அதிகாலை, பாகிஸ்தான் வான் எல்லைக்குள் புகுந்து இந்திய போர் விமானங்கள் தீவிரவாதிகளின் முகாம்களை குண்டு வீசி அளித்து விட்டு திரும்பியுள்ளன.

  இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் இரு நாட்டு எல்லைப் பகுதியில் போர் விமானங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடுமையான பதற்றமான சூழ்நிலை எழுந்துள்ள நிலையில் இம்ரான்கான் இன்று அந்த நாட்டின் அணுஆயுத விவகாரங்களுக்கான முடிவெடுக்கும் உயர் கமிட்டி உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.


  இந்த கூட்டத்தில் அணுஆயுத பயன்பாடு குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும் இந்திய தரப்பை அச்சுறுத்துவதற்காக இவ்வாறு ஒரு கூட்டத்தை கூட்டி இருக்கக்கூடும் என்று இந்திய பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

  சர்வதேச சமூகத்தில் தனித்து விடப்பட்ட பாகிஸ்தான், இந்தியாவை எதிர்த்து போர் செய்வது என்பது இயலாத காரியம். இருப்பினும் இந்திய அரசை பீதிக்குள்ளாக்கி நோக்கத்திலும், பாகிஸ்தான் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நோக்கத்திலும் இவ்வாறு ஒரு கூட்டத்தைக் கூட்டி இருக்கலாம் என்கிறார்கள்.

  அதேநேரம், அடிபட்ட வேகத்தில் இருக்கும் பாகிஸ்தான் வெறியோடு இருப்பதால், அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எளிதில் எடுத்துக்கொள்ள முடியாது என்றும் எச்சரிக்கிறார்கள்.-Source: oneindia
  Read more »

  ‘‘எங்களால் முடியும் என்பதை காட்டவே பதிலடி; போர் நடந்தால் கட்டுப்படுத்த முடியாது’’ -இம்ரான் கான் எச்சரிக்கை


  இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எங்களாலும் திருப்பி தாக்க முடியும் என்பதை நிருபிக்கவே இன்று பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதல் நடத்தின என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

  புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நேற்று தாக்குதல் நடத்தி அழித்தன. இதில் பாலகோட், சாக்கோட், முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அங்கு இயங்கி வந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.

  தவறவிடாதீர்
  இந்தியாவுடன் மோதல் எதிரொலி: அணு ஆயுத தயாரிப்பு குழுவினருடன் இம்ரான் கான் திடீர் ஆலோசனை
  இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2 பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் உள்ள காஷ்மீரின் நவ்ஷாரா பகுதியில் அத்துமீறி நுழைந்தது. இதில் ஒரு விமானத்தை நமது வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதேசமயம், இந்திய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளது.

  இதனை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பு தெரிவித்தது. இந்திய விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் ஒரு விமானத்தை சுட்டுவீழ்த்தியதாகவும், அதில் இருந்த விமானி உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

  இந்தநிலையில் பாகிஸ்தான் போர் விமானங்கள் நடத்திய தாக்குதல் குறித்து அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் இன்று விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

  ‘‘புல்வாமா தாக்குதல் குறித்து ஆதாரங்களை தந்தால் நடவடிக்கை எடுக்கிறோம் என கூறினோம். எங்கள் பகுதிக்குள் புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதற்காக நாங்கள் பதில் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. ஏனெனில் எங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டதாக நாங்கள் எண்ணவில்லை. எங்கள் பகுதியில் அதிகமான பாதிப்புகள் இல்லாதபோது, இந்தியாவிலும் பாதிப்புகளை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. எங்களால் திருப்பி தாக்க முடியும் என்பதை நிருபிக்க மட்டுமே பாகிஸ்தான் விமானங்கள் இன்று தாக்குதல் நடத்தின.

  தவறான கணிப்பால் தான் போர்கள் நடக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான் இருநாடுகளிடமும் தற்போது ஆயுதங்கள் உள்ளன. நாங்களும் தவறாக கணித்தால், நாம் போரில் ஈடுபடும் சூழல் ஏற்படும். பிறகு நானோ, நரேந்திர மோடியோ எதையும் கட்டுப்படுத்த முடியாது. அதனால் தான் சரியான புரிதல் வேண்டும். தீவிரவாத பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தால் நாங்கள் தயாராக உள்ளோம்’’ என நான் கூறுகிறேன்.
  Read more »

  பாகிஸ்தான் பிடியில் இந்திய விமானப்படை விமானி அபினந்தன்: வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்தது  இந்திய விமானப்படை விமானி அபினந்தன் பாகிஸ்தான் ராணுவ பிடியில் சிக்கியதை வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

  டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் இதனை உறுதிப்படுத்தினார்.

  தவறவிடாதீர்

  ‘‘பாகிஸ்தானுக்குள் புகுந்து பின் லாடனை கொன்ற அமெரிக்கா; இந்தியாவாலும் செய்ய முடியும்’’- அருண் ஜேட்லி ஆவேசம்
  கடந்த 14-ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்களில் நேற்று (பிப் 27) தாக்குதல் நடத்தியது.

  இதற்கு பதிலடியாக இன்று காலை, பாகிஸ்தான் இந்திய எல்லையில் தாக்குதலில் ஈடுபட்டது.

  எல்லையில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் குறித்து விவரித்த வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், இந்திய விமானப்படை விமானி அபினந்தன் பாகிஸ்தான் ராணுவ பிடியில் சிக்கியதை உறுதி செய்துள்ளார்.

  செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், "இன்று அதிகாலை இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

  இந்திய தரப்பில் மிக் 27 ரக விமானங்கள் பதில் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன.

  இந்திய விமானத்தை வீழ்த்தியதாகக் கூறும் பாகிஸ்தான் அதிலிருந்த விமானி அபினந்தனை கைது செய்துள்ளதாகக் கூறியுள்ளது. அபினந்தன் இன்னும் திரும்பவில்லை. உண்மையை கண்டறியும் முயற்சியில் உள்ளோம்.

  இந்த சந்திப்பில் வேறு எந்த கேள்விகளுக்கும் நாங்கள் பதிலளிக்கப்போவதில்லை. மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. தகவல் கிடைக்கும்போது உங்களுக்கு தெரிவிக்கிறோம்" என சுருக்கமாகக் கூறிச் சென்றார்.  இன்று காலை முதலே சமூக வலைதளங்களில் வேகமாக ஒரு வீடியோ பரவிவருகிது. அதில், கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்புறம் கட்டப்பட்ட நபர் ஒருவர், எனது பெயர் அபினந்தன். நான் இந்திய விமானப்படையின் விமானி. எனது சர்வீஸ் எண் 27981, எனது மதம் இந்து என்று கூறுகிறார். மேலும், சில தகவல்களைக்கோர இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல அனுமதியில்லை என்கிறார். நான் பாகிஸ்தான் ராணுவத்திடமா இருக்கிறேன் என்றும் விசாரிக்கிறார்.

  இந்த வீடியோ வைரலான நிலையில்தான் பாகிஸ்தான் ராணுவத்திடம் அபினந்தன் சிக்கியதை இந்திய தரப்பும் உறுதி செய்துள்ளது.

  சென்னையைச் சேர்ந்தவர்:

  பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் சிக்கிய இந்திய விமானப்படை விமானை அபினந்தன் சென்னையைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவர் தாம்பரம் விமானப்படையில் பயிற்சி பெற்றவர் எனத் தெரிகிறது. கடந்த 2004-ம் ஆண்டு இவர் விமானப் படையில் இணைந்துள்ளார். இவரது தந்தை வர்த்தமானும் இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  Read more »

  இந்தியாவின் தாக்குதலை உறுதி செய்த பாகிஸ்தான் இராணுவம்  சரியான நேரத்தில் பாகிஸ்தானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனையடுத்து பாலகோட் பகுதியில் இந்திய ராணுவத்தின் வெடிகுண்டுகள்  விழுந்தன. அது திறந்தவெளி என்பதால் இந்த தாக்குதலில் எந்த உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

  புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய ராணுவம் வீசியுள்ளது. இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் இந்தியாவின் தாக்குதல் குறித்து பாகிஸ்தானும் தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள  பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் மாஜ் ஜென் ஆஸிப், முஷாபார்பாத் பகுதியில் இந்திய விமானங்கள் அத்துமீறின.
  Read more »

  பாகிஸ்தான் எல்லையையொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய ராணுவம் வீசியுள்ளது


  காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

   இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றதுஇதையடுத்து பாகிஸ்தானுக்கு வழங்கிய வர்த்தக ரீதியிலான அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றது. காஷ்மீர் தாக்குதலால் தன் நெஞ்சில் தீ எரிந்துகொண்டு இருப்பதாகவும், தாக்குதலுக்கு எதிரிகள் நிச்சயம் பெரிய விலை கொடுக்க வேண்டுமென்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

  இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய ராணுவம் வீசியுள்ளது. இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக விமானப் படை தரப்பில்
  Read more »

  🙂🙂இதனை இரண்டு நிமிடம் ஒதுக்கி வாசியுங்கள் - பயனுள்ளது என நினைத்தால் பகிருங்கள் .😊😊  சமூக மரியாதை, செல்வாக்கு என்றெல்லாம் சொல்கிறார்களே, அதற்கெல்லாம் என்ன பொருள்? நம்மீது பிறர் கொண்டிருக்கிற அபிப்பிராயம்தான் அவையெல்லாம்! இந்த அபிப்பிராயங்களை அவர்களாக உருவாக்கிக் கொள்வதில்லை. நம்முடைய வார்த்தைகள், செயல்பாடுகள், அணுகுமுறைகள் எல்லாம் சேர்ந்து நம்மீது சில அபிப்பிராயங்களைக் கட்டமைக்கிறது.

  நாம் நல்ல மனநிலையில் இருப்பதைப் பார்ப்பவர்கள், இவர் ரொம்ப அன்பான மனுஷன் சார்” என்று முடிவெடுக்கிறார்கள். எதற்கோ, யார் மீதோ அளவு கடந்து கோபப்பட்டதைப் பார்ப்பவர்கள் அய்யோ! சரியான சிடுமூஞ்சி என்று முத்திரை குத்திவிடுகிறார்கள்.
  மொத்தத்தில், நம்மீதான சமூக அபிப்பிராயங்களுக்கு நாமே காரணம். ஒவ்வொரு தனிமனிதரையும், அவரைச் சுற்றியுள்ள சமூகம் மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. எனவே, நமக்கு சமூக மரியாதை, செல்வாக்கு, மற்றவர்களின் பாராட்டு எல்லாம் வேண்டுமென்றால் நாமே எளிதாக அவற்றை உருவாக்கிக் கொள்ளலாம்.

  உங்கள் தோற்றம் : உங்களைப் பற்றிய முதல் அபிப்பிராயம், உங்கள் தோற்றத்திலிருந்தே தொடங்குகிறது. தோற்றம் என்பது வெளித்தோற்றம் மட்டுமல்ல. உங்கள் நலனில் உங்களுக்கிருக்கும் அக்கறை, உங்கள் தோற்றத்தையும் ஆரோக்கியத்தையும் நீங்கள் பேணிப் பாதுகாக்கிற விதம், எல்லாம் இணைந்துதான் உங்களைப் பற்றிய எண்ணத்தை உருவாக்குகிறது.

  உங்கள் இடம்: அலுவலகச் சூழல், உங்களைப் பற்றிய அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உங்கள் அலுவலகத்தின் ஒழுங்கு, ஆடம்பரமில்லாத அழகு, உங்கள் மேசையில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களின் வரிசை, எல்லாமே, எந்த விஷயத்தையும் நீங்கள் சரியாகச் செய்பவர் என்கிற அபிப்பிராயத்தை ஏற்படுத்துகிறது.உங்கள் வெளிப்பாடு : உடலசைவுகளும், உச்சரிக்கும் வார்த்தைகளும் உங்களைப் பற்றிய அபிப்பிராயத்தை அழுத்தமாக ஏற்படுத்தக் கூடியவை. பலரும், மற்றவர்களுக்குப் புரியாத மாதிரி பேசுவதுதான் ஒரு துறையில் சிறந்து விளங்குவதாக அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் என்று கருதுகிறார்கள். ஆனால், ஒரு துறையில் நிபுணராக இருப்பவர் சிக்கலான விஷயங்களையும், எல்லோரும் புரிந்து கொள்ளும்படி எளிதாகச் சொல்பவர்தான். எனவே, மற்றவர்களின் சிக்கல்களை எளிதாக்குபவரே மதிக்கப்படுகிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்.

  நேரந்தவறாமை : கடுகடு என்றிருக்கும் முகம்தான் கண்டிப்பை வெளிப்படுத்தும் என்றில்லை. நேரந் தவறாமை, சொன்ன சொல் தவறாமை போன்ற அம்சங்கள், “நீங்கள் கண்டிப்பானவர் என்ற உணர்வை ஏற்படுத்தும். உங்கள் மீதான மரியாதையை மேம்படுத்தும்.

  நடப்புகளை நன்கறிதல் : உங்கள் துறையில் மட்டுமின்றி உலகில் பொதுவாக நடைபெறும் விஷயங்களை ஓரளவு தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. நாலும் தெரிஞ்சவர் இவர் என்கிற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டு ஒன்றும் தெரியாமல் இருக்கலாமா என்ன?

  தெளிவாக வழிகாட்டுதல் : ஏதேனும் ஓர் இடத்திற்குப் போக வழி கேட்டால் கூட, தனக்குத் தெரியாது என்பதை வெளிப்படுத்த விருப்பமின்றி சுற்றிவிடுகிற இயல்பு நிறைய மனிதர்களுக்கு உண்டு.

  நம்மிடம் ஆலோசனை கேட்டு வருபவர்களுக்கு சரியாக வழி காட்டுவது நம்முடைய கடமை. ஒருவேளை நமக்குத் தெரியவே தெரியாத விஷயமென்றால், யாரை அணுகலாம் என்பதைத் தெளிவாகவும், துல்லியமாகவும் சொல்லி விடுவது நல்லது. இதன் மூலம் நமக்குத் தெரியாத விஷயங்களில் கூட “வழிகாட்டியாக” விளங்க முடியும்.

  நம்மை நாம் எப்படி வெளிப்படுத்து கிறோமோ அப்படித்தான் உலகம் நம்மை அறிந்து கொள்கிறது. எனவே, உலகம் உங்களை மதிக்க வேண்டுமென்றால், மதிக்கும் விதமாக உங்களை நீங்கள் வெளிப்படுத்துங்களேன்
  Read more »