விகாரைகள் மீது கைவைத்தால் நடப்பது வேறு, பள்ளிவாசல்களில் சோதனை வேண்டாமென சிலருக்கு உத்தரவு


கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது போல் பௌத்த விகாரைகள் கை வைத்தால் கடும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் பொதுபலசேனா எச்சரித்துள்ளது.


விகாரைகள் மீது ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் எதிர்வினைகளை எவராலும் தடுக்க முடியாது எனவும் பொதுபல சேனா அமைப்பை சேர்ந்த மாகல்கந்தே சுதத்த தேரர் எச்சரித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேரர் கருத்து வெளியிட்டார்.


தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது. தற்கொலைதாரிகள் அனைவரும் தேசிய தௌவீத் ஜமாத் மற்றும் ஜமியத்துல் இப்ராஹீம் அமைப்புக்களின் உறுப்பினர்கள் என உறுதியாகியுள்ளது.


ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்யும் அரசியல்வாதிகளுக்கும் நினைவில் வைத்துக் கொள்ளும்படி ஒன்றைக் கூற விரும்புகிறோம்.


விகாரைகள் மீது கைவைத்தால் நடப்பது வேறு. நாங்கள் மிகவும் பொறுமை காத்து வருகின்றோம். அதேபோல மதத் தலைவர்களுக்கும் ஒன்றைக் கூறுகிறோம். சிங்கள பௌத்த மக்களுக்கும், சிங்கள கிறிஸ்தவர்களுக்கும் இடையே உள்ள உறவில் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம்.


நாங்கள் அன்பு செலுத்தும் போது அவர்கள் குண்டுகளால் பதிலளித்தால் எமது அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? இந்த முப்படையினருக்கும், பொலிஸாருக்கும் பொதுமக்களாகிய நாங்களே சம்பளம் வழங்குகின்றோம். எனவே அவர்களுக்கும் பொறுப்பிருக்கிறது.


அரசியல்வாதிகள் எந்த தீர்மானம் எடுத்தாலும் மக்களைக் காப்பாற்றுவதற்கான கடமை அவர்களுக்குரியது. சில இடங்களில் சோதனை செய்ய வேண்டாம் என்றும் முஸ்லிம் பள்ளிவாசல்களில் சோதனை செய்ய வேண்டாம் என்றும் சிலருக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறியக்கிடைத்தது.


இந்த நிலைமை தொடர்ந்தால் சிங்கள பௌத்த மற்றும் கத்தோலிக்க மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைமையே ஏற்படும்


அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவிநீக்கம் செய்து கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும்படி ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கையையும் முன்வைத்திருந்தோம். எனினும் இதுவரை எந்தவித நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.


தமது அதிகாரத்தையும், பலத்தையும் அதிகரித்துக் கொள்வதற்காக ஜனாதிபதியும், பிரதமரும் அதேபோல எதிர்கட்சித் தலைவரும் முஸ்லிம் அமைச்சர்களையும் அரசியல்வாதிகளையும் கைது செய்யமாட்டார்கள்.


தீவிரவாதிகள் 300 பேரையல்ல, 3000 பேரைப் படுகொலை செய்தாலும் அந்த அமைச்சர்களை அரசாங்கம் கைது செய்யாது. ஏனென்றால் அதிகாரத்தை தக்க வைப்பதற்காக அவர்களுடைய வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக இதனை செய்யமாட்டார்கள் என தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
Read more »

வெலிகம மற்றும் அண்டிய பகுதிகளில் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்

















 வெலிகம ,வெலிபிடிய, புதியதெரு மதுராபுரி  மற்றும்  அண்டிய பகுதிகளில் தற்போதைய நிலையில் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

காவற்துறையினர் , விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணவத்தினர் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் பொருட்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று அதிகாலை இந்த விசேட செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
Read more »

வெலிகம பகுதியில் முச்சக்கரவண்டியில் வந்து வீசிய நிலையில் குத்து வாள் மற்றும் வாள் கத்தி பாதுகாப்பு படையினரால் மீட்பு.




வெலிகம காடேவத்த பகுதியில் முச்சக்கரவண்டியில் இருந்து கைவிடப்பட்டு போன நிலையில் குத்து வால் மாற்று கத்தி இன்று பொலீசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது

இன்று வெலிகம காடேவத்த பிரதேசத்தில்
முச்சக்கரவண்டி ஒன்று சந்தேககமாக காணப்படுவதாக பிரதேச மக்கள் பொலிஸ் மாற்று பாதுகாப்பு பிரிவினரிற்க்கு அறிவித்ததை அடுத்து  பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படை அங்கு சென்றது

பை ஒன்று முச்சக்கரவண்டியில் இருந்து வீசி சென்றதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர் பையில் இருந்து குத்து வால் மற்றும் கத்தி கண்டெடுக்கப்பட்டுள்ளது சந்தேக நபரை தேடும் பணியில் வெலிகம போலீஸ் மற்றும் பாதுகாப்புபடையின் ஈடுபட்டுள்ளனர்

Read more »

அரசியல் தலைவர்களிற்கு புலனாய்வுதரப்பினர் கடும் எச்சரிக்கை

இலங்கையின் அரசியல் தலைவர்களை அடுத்த சில மாதங்களிற்கு ஒன்றாக பயணம் மேற்கொள்ளவேண்டாம் என அரச புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ள நிலையிலேயே அவர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

கத்தோலி;க்க தேவாலயங்கள் கோவில்கள் உட்பட ஏனையவழிபாட்டிடங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவேண்டாம் எனவும் அரச தலைவர்களிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள புலனாய்வு பிரிவினர் அவ்வாறான இடங்களிற்கு நிச்சயமாக செல்லவேண்டும் என்றால் ஹெலிக்கொப்டர்களை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.



ஜனாதிபதி பிரதமர் எதிர்கட்சி தலைவர் உட்பட முக்கிய அரசியல் தலைவர்களிற்கு இந்த அறிவுறுத்தல்களை தேசிய புலனாய்வு பிரிவினர் அனுப்பிவைத்துள்ளனர்.
Read more »

சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்க செய்து பயங்கரவாதிகள் தற்கொலை

பங்காளதேச தலைநகர் டாக்காவில் பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் நடந்த சண்டையில், இரு பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.



டாக்காவிற்கு அருகே முகமத்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக அந்நாட்டு உளவு பிரிவின் தகவலுக்கு அமைய பயங்கரவாத தடுப்பு பிரிவு படை அங்கு சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதை அறிந்து, உடனடியாக அப்பகுதியில் இருந்த மக்களை வெளியேற்றி, அவ்வீட்டை சுற்றி வளைத்தனர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இறுதியில், பயங்கரவாதிகள் தாங்கள் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர்.

இதில் அவர்கள் உடல் சிதறி பலியாகினர். பயங்கரவாதிகள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அவருடைய மனைவியை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து, சிறப்பு படைப்பிரிவு அதிகாரி தெரிவித்ததாவது,

அவர்கள் எந்த பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளனர்.

இதனால் சுற்றியிருந்த பகுதிகளும் சேதம் அடைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறோம், என்றார்.

ஜூலை, 2016-ல் டாக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடைபெற்ற அதிரடி சோதனையில் ஐ.எஸ்., பயங்கரவாத இயக்க ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் பலர் கைது செய்யப்பட்டனர். 100க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.
Read more »

புனித ரமழானை வரவேற்போம்


"புனித ரமழான் மாதமே உன் வரவு நல்வரவாகட்டும்.

பாவமன்னிப்பு, ஷபா அத்துடைய மாதமே உன் வரவு நல்வரவாகட்டும்.

குர்ஆனுடைய மாதமே உன்வரவு நல்வரவாகட்டும்.

கொடை கொடுக்கும் மாதமே உன் வரவு நல்வரவாகட்டும்.

ஈடேற்றம் தரும் மாதமே உன்வரவு நல்வரவாகட்டும்."

இஸ்லாத்தின் மூன்றாம் கடமையாம் புனித நோன்பு வருடத்தில் ஒரு மாதம் நோன்பு நோற்பது முஸ்லிமான ஆண், பெண் அகிய இரு பாலார் மீதும் கடமையாகும். ரமழான் என்ற அறபுச் சொல் பாவங்களை சுட்டெரித்தல் என்று பொருள் தருகிறது. எனவே பாவவிடுதலை, விமோசனம் பெற இந்த நோன்பை சுபசோபனம் கூறி வரவேற்போம்.

அல்லாஹ் கூறுகிறான், - விசுவாசிகளே! நீங்கள் இறையச்சமுடையோராக மாறுவதற்கு உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. (அல் குர்ஆன் 2:185)

ரமழான் மாதம் நோன்பு நோற்பது கட்டாய கடமை என்று இவ்விரு வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன. மனித சமுதாயத்திற்கு நல்வழி காட்டும் திருக்குர்ஆன் இம்மாதத்தில் அருளப்பட்டதால் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந் நோன்பு கடமையாக்கப்பட்டதாகவும் இவ்வாறு நோன்பு நோற்பதால் இறையச்சமுடையோராக ஆகமுடியும் என்றும் இவ்வசனங்கள் எடுத்தியம்புகின்றன.

நாம் பக்குவப்படுவதும் இறையச்சமுடையோராக ஆக முடியும் என்றும் இவ்வசனங்கள் எடுத்தியம்புகின்றன.





உடல் ஆரோக்கியம் பேணப்படுகிறது. பசி எத்தகையது என்பது உணரப்படுகிறது.

இவ்வாறு சிலர் காரணம் கூறுவர்.

நோன்பினால் இந்தப் பயன்களெல்லாம் இருக்கலாம். இருந்தபோதிலும் நபி (ஸல்) அவர்களும் இந்த நோக்கத்தை விளக்கியுள்ளார்கள். யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ அவர் உண்ணுவதையும் பருகுவதையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத்தேவையுமில்லை.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல்கள்: புஹாரி, அஹ்மத், அபூதாவூத், திர்மிதி

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும்போது யாரேனும் அவரிடம் முட்டால்தனமாக நடந்தால் நான் நோன்பாளி என்று கூறிவிடட்டும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் திர்மிதி எனவே, எம்மை அண்மித்துள்ள புனிதமான றமழான் மாதத்தில் பயன்களை உணர்ந்து நல்ல முறையில் நோன்பை நோற்க வல்ல இறைவன் அனைவருக்கும் கிருபை செய்வானாக.



கலாபூசணம் எம். எஸ். எம். ஹாரிஸ் (கபூரி)
Read more »

நடிகர் கார்த்திக்குக்கு அக்காவாகும் அண்ணி ஜோதிகா


தமிழில் பாபநாசம் படத்தை நடிகர் கமலை வைத்து இயக்கிய ஜீத்து ஜோசப் அடுத்து நடிகர் கார்த்திக், ஜோதிகா வைத்து புதிய படம் ஒன்றை எடுக்கிறார். இப்படத்தில் கார்த்திக்கு அக்காவாக ஜோதிகா நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

ஜீது ஜோசப் மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்தாலும் தமிழில் அவருக்கு இது இரண்டாவது படம். இன்னும் இந்த படத்திற்கு பெயரிடவில்லை, சஸ்பன்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படம் றித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. வயாகாம் 18நிறுவனம், முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கார்த்தி, “அண்ணியுடன் முதல் படத்தில் இணைந்து நடிக்க இருப்பது த்ரில்லாக இருக்கிறது” என்றார்.
Read more »

துயரில் தோய்ந்த இலங்கையில் நினைவு கூரப்படும் மேதினம்


உலக தொழிலாளர் தினம் இன்றாகும். உலகின் ஏராளமான நாடுகளில் வாழ்கின்ற தொழிலாளர்கள் இன்று பாட்டாளிகள் தினத்தை கொண்டாடுகின்றனர்.இலங்கையிலுள்ள தொழிலாளர்களும் வருடம் தோறும் மே தினத்தை கொண்டாடுவது வழக்கம். பேரணிகள்,கூட்டங்கள் என்றெல்லாம் பாட்டாளிகள் தினக் கொண்டாட்டம் இலங்கையில் களைகட்டுவது வழக்கம்.

ஆனால் இவ்வருட மேதினத்தை எமது தொழிலாளர்களால் கொண்டாட முடியாமல் போய் விட்டது. காரணம் எமது நாட்டில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற துயரம் நிறைந்த சம்பவங்கள் ஆகும்.மே தின ஊர்வலங்களை நடத்துகின்ற மனநிலையில் இலங்கையின் தொழிற்சங்கங்கள் இன்று இல்லை. அவற்றில் பங்கேற்பதற்கான இயல்பு மனநிலை எமது தொழிலாளர்களிடம் இன்றில்லை. அவர்கள் துயரத்தில் இருந்து இன்னுமே மீளவில்லை. அதுமட்டுமன்றி, பாதுகாப்பு உத்தரவாதம் குறித்த அச்சமும் இன்றுள்ளது. எனவே இவ்வருட மேதினம் அமைதியாகிப் போயுள்ளது.ஆனாலும் பாட்டாளிகளின் உரிமைகளையும் அவர்களது சுதந்திரத்தையும் இன்றைய வேளையில் மறந்து விட முடியாது.

மே தினம் உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையையும் மனஉறுதியையும் குறிக்கும் தினமாகும்.தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்திய தினம் இதுவாகும்.

அமெரிக்காவில் 1890ம் ஆண்டு 8மணி நேரம் வேலை, 8மணி நேரம் ஓய்வு, 8மணி நேரம் உறக்கம் என்னும் கோரிக்கையை வலியுறுத்தியும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கேட்டும் தொழிலாளர்கள் போராடினர்.இதை எதிர்த்து அன்றைய அமெரிக்க அரசு ஈவிரக்கம் அற்ற தாக்குதலை நடத்தியது.ஏராளமான தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.உலகத் தொழிலாளர்களின் துன்பத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து, முதலாளிகளை ஓரங்கட்டி, தொழிலாளர்கள் ஆட்சியில் அமர்ந்தால்தான் அனைத்து விதமான துன்பங்களும் தீரும் என்று தொழிலாளர்கள் முடிவு செய்தனர்.

முதலாளிகள் உலக வரலாற்றின் வளர்ச்சிப் போக்கையே தடுத்து வருவதால் அதனை முடிவுக்குக் கொண்டு வரும் வல்லமை தொழிலாளர்களிடம் மட்டும்தான் உள்ளது என்று கூறி இதையெல்லாம் செய்வதற்கு உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்றும் கூறினார்கள்.

உலகெங்கும் உள்ள தொழிலாளர்களின் இடைவிடாத போராட்டத்தால் தொழிலாளர் உரிமை நிலைநாட்டப்பட்டது.தொழிலாளர்களின் உழைப்பினால்தான் உலகமே இயங்குகிறது.தொழிலாளர்களின் உழைப்பு இன்றி எந்தப் பொருளும் உருவாவதில்லை என்பதை பாட்டாளிகள் உணர்ந்தனர்.தாம் விலங்குகளை விட கீழ்த்தரமாக நடத்தப்படுவதையும் உழைப்பின் பலன்களை எல்லாம் அனுபவிக்கும் முதலாளிகள் தொழிலாளர்களை வறுமையிலும் துன்பத்திலும் இருக்கும்படி செய்கின்றனர் என்பதையும் உணர்ந்து ஒன்றுபட்டு உரிமைக்காகப் போராடினர்.





1886ம் ஆண்டு அமெரிக்கத் தொழில் நகரங்களான நியூயோர்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அந்நாடு முழுவதும் சுமார் 350000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலைநிறுத்தம் தொடங்கியது.இந்த வேலைநிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலைநிறுத்தத்தினால் அமெரிக்க பெருநிறுவனங்கள் மூடப்பட்டன. புகையிரதப் போக்குவரத்து நடைபெறவில்லை.வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர்களின் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கின.மிச்சிகனில் 40000 தொழிலாளர்களும் சிக்காகோவில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து 'அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு' என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது.இவ்வியக்கம் 8மணி நேர வேலைக் கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராட்ட இயக்கங்களை நடத்தியது.அத்தோடு மே 1, 1886அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

இவ்வாறு உலகெங்கும் நடந்த போராட்டத்தின் விளைவாக அமெரிக்காவில் இதற்கான வெற்றியை அடைந்தனர்.தொழிலாளர்களின் போராட்டத்தால் நிலைகுலைந்த அரசு அவர்களின் கோரிக்கையை 1890ம் ஆண்டு ஏற்றது.தொழிலாளர்களின் இந்த வெற்றியைக் குறிக்கும் விதத்தில் மே முதல் நாள் தொழிலாளர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

தொழிலாளர்கள் பேதங்களைக் கடந்து தொழிலாளர் என்னும் உணர்வுடன் ஒன்றுபட்டு போராடினால் வெற்றி கிடைத்தே தீரும் என்பதை மே தின வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.

ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்களால் அதிகளவு உயிர்ப்பலிகளைச் சந்தித்த எமது நாடு பெரும் சோகத்தில் மூழ்கியிருக்கும் இவ்வேளையில் பாட்டாளிகள் தினமும் வந்துள்ளது. இத்தினத்தை கொண்டாடும் இயல்பு நிலை தற்போது எங்களிடம் இல்லாத போதிலும் உலகத் தொழிலாளர்களின் பாதுகாப்பையும், உரிமைகளையும் இன்றைய தினத்தில் நினைவு கூருவோம்.

சாமஸ்ரீ- க.மகாதேவன்- உடப்பூர்
Read more »

ரஷ்ய உளவு திமிங்கிலம் நோர்வேயில் கண்டுபிடிப்பு




நார்வே நாட்டின் ஆர்க்டிக் கடலோரப் பகுதியில் ரஷ்ய நாட்டு சேனம் பொருத்தப்பட்ட பெலுகா வகை திமிங்கிலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதற்கு ரஷ்ய கடற்படை பயிற்சி அளித்திருக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் நோர்வே நாட்டு வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த சேனத்தில் கோப்ரோ கேமரா தாங்கி ஒன்று இருந்ததாகவும், அதில் இருந்த அடையாளம் ஒன்று அது ரஷ்யாவை சேர்ந்தது என்பதைக் காட்டுவதாகவும் கடல் உயிரியலாளரான பேராசிரியர் அவுடுன் ரிகார்ட்சன் என்ற அந்த வல்லுநர் கூறியுள்ளார். நோர்வே நாட்டு மீனவர் ஒருவர் அந்த சேனத்தை திமிங்கிலத்தில் இருந்து கழற்றினார்.

ரஷ்யாவுக்கு அந்தப் பிராந்தியத்தில் கடற்படை தளம் ஒன்று உள்ளது.





இங்கோயா என்ற ஆர்க்டிக் தீவின் கடற்கரையில் இருந்து புறப்படும் நார்வே நாட்டு படகுகளை பயிற்சியளிக்கப்பட்ட அந்த திமிங்கிலம் பல முறை அணுகியுள்ளது. இந்த இடம், ரஷ்யாவின் வடதிசை கடற்படைத் தளம் அமைந்துள்ள முர்மான்ஸ்க் என்ற இடத்தில் இருந்து 415 கி.மீ. தொலைவில் உள்ளது.

பெலுௗகா வகை திமிங்கிலங்கள் ஆர்க்டிக் கடலை தாயகமாகக் கொண்டவையாகும்.
Read more »

தலைநகரை மாற்றுவதற்கு திட்டமிடும் இந்தோனேசியா

இந்தோனேசியாவின் தலைநகரை வேறு இடத்துக்கு மாற்ற அந்நாட்டு ஜனாதிபதி ஜொகோ விடோடோ முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டுத் திட்டமிடல் துறை அமைச்சர் பேம்பங் ப்ரா ஜ்ஜநெகோரோ தெரிவித்துள்ளார். அந்நாட்டின் தற்போதைய தலைநகரான ஜகார்த்தா, உலகில் அதிவேகமாக கடலில் மூழ்கிவரும் நகரங்களில் ஒன்று. அத்துடன், அந்த நகரம் கடும் போக்குவரத்து நெரிசலையும் சந்தித்துள்ளது.

10 இலட்சம் மக்கள் வசிக்கும் ஜகார்த்தாவில் இருந்து தலைநகர் மாற்றப்படும் என்று அமைச்சர் அறிவித்தாலும், புதிய தலைநகரம் எங்கே அமையும் என்பதை அவர் அறிவிக்கவில்லை. ஆனால், புதிய தலைநகரம் அமைப்பதற்காக பரிசீலிக்கப்படும் இடங்களின் பட்டியலில் போர்னியோ தீவில் உள்ள காளிமாண்டன் மாகாணத் தலைநகரான பலங்க்கராயா முதலிடத்தில் இருப்பதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.





வடக்கு ஜகார்த்தா கடந்த பத்து ஆண்டுகளில் எட்டு அடி மூழ்கியுள்ளதாகவும், தொடர்ந்து மூழ்கிவருவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 13 ஆறுகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் கடற்கரை நகரமான ஜகார்த்தாவின் பெரும் பகுதிகள் 2050ஆம் ஆண்டில் கடலில் மூழ்கியிருக்கும் என்று அந்த ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
Read more »

தோல்விக்குப் பின் மத்திய கிழக்கில் இருந்து ஆப்கானை நோக்கி நகரும் ஐ.எஸ்


ஈராக் மற்றும் சிரியாவில் கொடிய போர் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழு உறுப்பினர்கள் தனது ஜிஹாத் போராட்டத்தை தொடரும் அமெரிக்கா மீதான பாரிய தாக்குதல் ஒன்றுக்கு உதவ ஆப்கானிஸ்தானை நோக்கி படையெடுத்து வருவதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் சுயமாக அறிவித்துக்கொண்ட கலீபத் (இஸ்லாமிய பேரரசு) தோல்வியடைந்த பின்னர் தொற்காசியாவில் பேரழிவு தாக்குதல்கள் மூலம் ஐ.எஸ் தனது பிராந்திய செல்வாக்கை உறுதிப்படுத்த விரும்புகிறது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

“அவர்களில் சிலர் ஏற்கனவே இங்கு வந்து அவர்கள் அங்கு கற்ற தமது அறிவு, திறன் மற்றும் அனுபவத்தை இங்கு பரிமாற்ற முயற்சிக்கின்றனர்” என்று ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க சிரேஷ்ட உளவு அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி நிறுவனத்திற்கு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

“(ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்ஸுக்கு எதிராக) பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நாம் தொடராவிட்டால் அவர்கள் எமது சொந்த நாட்டில் பெரும்பாலும் ஓர் ஆண்டுக்குள் பாரிய தாக்குதல் ஒன்றை நடத்துவார்கள்” என்று அந்த அதிகாரி எச்சரித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் தமது பெயரை வெளியிடவில்லை.

இந்த தாக்குதல் சதியின் தன்மை பற்றி அந்த அதிகாரி குறிப்பிடாதபோதும், 2016 ஆம் ஆண்டு பிளோரிடா துப்பாக்கிச் சூடு உட்பட ஐ.எஸ் அமெரிக்காவில் இதற்கு முன்னர் பல தாக்குதல்களை நடத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது. பிளோரிடா தாக்குதலில் ஓர்லாண்ட் இரவு விடுத்திக்குள் நுழைந்த ஐ.எஸ் உடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் 2,500 மற்றும் 4,000க்கு இடைப்பட்ட ஐ.எஸ் உறுப்பினர்கள் இருப்பதாக ஐ.நா அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.





எனினும் ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் எண்ணிக்கை மற்றும் திறன் இரண்டிலும் வளர்ச்சி பெற்றிருப்பதாக அண்மையில் அங்கு விஜயம் செய்த அமெரிக்க செனட் ஆயுத சேவைக் குழு உறுப்பினரான ஜக் ரீட் குறிப்பிட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஐ.எஸ் குழுவை ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றாக ஒழுக்கி அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் அந்த ஆண்டு திட்டம் வகுத்தது. எனினும் இந்தத் திட்டத்தை மறு ஆய்வு செய்த ஆப்கானிஸ்தானுக்கான நேட்டோ திட்டம், அந்தக் குழுவின் தீவிரத்தன்மை குறைத்து மதிப்பிடப்பட்டதாக குறிப்பிட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஐ.எஸ் ஆறு உயர் மட்டத் தாக்குதல்களை நடத்தியதோடு 2017 இல் அந்த எண்ணிக்கை 18 ஆகவும் கடந்த ஆண்டு 24 ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி அரச அமைச்சு ஒன்றின் மீதான தற்கொலை தாக்குதலுக்கும் ஐ.எஸ் உரிமை கோரியது.
Read more »