தௌஹீத் ஜமாத் அமைப்பின் அலுவலகத்தை நிறுவ காணியை வழங்கினார் கோட்டா- பரபரப்பு தகவல்!


பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர், கோட்டாபய ராஜபக்ஷ தௌஹீத் ஜமாத் அமைப்பின் அலுவலகத்தை நிறுவ காணியொன்றினை பெற்றுக்கொடுத்தார் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துசார இந்துநில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறே நாட்டில் அடைப்படை வாதத்தினை தேற்றுவிக்க கோட்டபாய ராஜபக்ஷ பல முயற்சிகளை மேற்கொண்டார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “241 A, ஸ்ரீ சத்தர்வ மாவத்தை, கொழும்பு என்ற முகவரியில் உள்ள காணியை தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக்கொடுத்துள்ளார்.

குறித்த அமைப்பின் அலுவலகத்தை அமைப்பதற்கே அவர் இந்த காணியை வழங்கினார். இவ்வாறே அடிப்படைவாத அமைப்புக்களுக்கு அவர் உதவிகளை வழங்கியுள்ளார்.

மேலும் இவ்வாறான செயற்பாட்டின் மூலம் அவர் அமைதியாக இருக்கும் முஸ்லீம் இனத்தை இரண்டாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். இவ்வாறு அனைத்து செயற்பாடுகளையும் கீழ்த்தரமான அரசியல் யுத்தியை கொண்டு அவர் மேற்கொண்டார்.

இதேவேளை அடிப்படைவாதத்தை போதிக்கும் பள்ளிகள் 200 ஐ கட்டியதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த சம்பவத்திற்கும் கோட்டவே உறுதுணையாக இருந்தார்” என அவர் மேலும் கூறினார்.
Read more »

இலங்கையில் மையம் கொண்டுள்ள Fani சூறாவளி! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை


திருகோணமலையின் வடகிழக்கு திசையில் Fani சூறாவளி மையம் கொண்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் இருந்து வடகிழக்கு திசையில் 680 கிலோமீட்டர்கள் தொலைவில் சூறாவளி மையம் கொண்டுள்ளத.

வானிலை அவதான நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, மத்திய, தென், மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திலும் 150 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மழை பெய்யும் சந்தர்பங்களில் மணித்தியாலத்திற்கு 60- 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களை பயன்படுத்துவோர் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read more »

துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்ட விவகாரம்; கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் விளக்கம்

தனது அலுவலகத்தில் மீட்க்கப்பட்ட துப்பாக்கி ரவைகளுக்கும் எங்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் கிடையாது என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு காத்தான்குடியிலுள்ள காரியாலயத்தில் இன்று இராணுவத்தினர் மேற்கொண்ட சோதனையின்போது ரி.56 ரக துப்பாக்கி ரவைகள் மீட்க்கப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

இந் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர்,

இன்று எனது காத்தான்குடி காரியாலயம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டபோது, எனது பாதுகாப்புக்கு பொறுப்பான பொலிஸாரும், அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவினரும் காத்தான்குடி பொலிஸாரும், எனது காரியாலயத்தில் பின்னால் தங்கியிருந்த அறையிலிருந்து உத்தியோகபூர்வமாக காத்தான்குடி பொலிஸாரால் வழங்கப்பட்டு பாதுகாப்பிற்கு பயன்படுத்துகின்ற சுமார் 40 துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளனர்.

இது உத்தியோகபூர்வமாக பாதுகாப்பிற்காக பொலிஸாருக்கு வழங்கப்பட்டது. இது தொடர்பாக தற்போது பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் அறிக்கைகள் சமர்ப்பிக்கபடும் வரை காரியாலயத்திற்கு பொறுப்பான 2 சகோதரர்களையும் காத்தான்குடி பொலிஸில் தடுத்து வைத்துள்ளார்களே தவிர இந்த துப்பாக்கி ரவைகளுக்கும் எங்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் கிடையாது.

இது உத்தியகோபூர்வமாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான துப்பாக்கி ரவைகள் என்பதை மிகத் தெளிவாக குறிப்பிடுகின்றேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more »

படங்கள்) முஸ்லிம்களின் மையவாடிகளிலும் தேடுதல் நடவடிக்கைகள் ..



கடந்த சில நாள்களுக்கு முன்னர் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களுக்குப் பின்னர், இலங்கையில்
பல்வேறு பிரதேசங்களில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் சோதனை நடவடிக்கைகளிலிருந்து வாள்கள், துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள் மற்றும் கைக்குண்டுகளென பல ​ஆயுதங்கள் மீட்கப்பட்டுவரும் நிலையில், அதன் ஒரு கட்டமாக முஸ்லிம்களின் மையவாடிகளிலும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Read more »

அதி தீவிர புயலாக வலுபெற்றுள்ளது ஃபானி: சென்னை வானிலை மையம்



வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபானி புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாகவும், இது ஒடிசாவை நோக்கி செல்லக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ஃபானி புயல் சென்னையிலிருந்து 575 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ளதாகக் கூறினார். இந்த புயல், வடமேற்கு திசையில் பயணித்து நாளை மாலை ஒடிசா கடற்கரையை நெருங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த புயலால் வடதமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்த பாலச்சந்திரன், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் வங்கக் கடலின் தென் மேற்குப் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஃபானி புயலால் நேரிடும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான வாய்ப்புள்ள தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆயிரத்து 86 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபானி புயல், ஆந்திரப்பிரதேசம், ஒடிஷா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more »

கிழக்கு மாகாண ஆளுநர் வீட்டில் ஆயுதம் மீட்பு


மட்டக்களப்பு, காத்தான்குடியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கை இன்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதன்போது ரி 16 ரக துப்பாக்கியின் மகசீன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

http://www.battinaatham.net/description.php?art=19582
Read more »

சமூக வலைத்தளங்களின் பாவனைக்கு தடை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு





கடந்த வாரம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல பிரதேசங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து, சமூக வலைத்தளங்களின் மூலம் போலியான தகவல்கள் பரப்பபடுவதனால்  மற்றும் இனவாத கருத்துகள் பரப்பப்படுவதாக அரசாங்கத்தின் ஆலோசனைக்கமைய தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சமீபத்தில், நாட்டின் சில பிரதேசங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து, சிலர் இனவாத கருத்துகளை பகிரவும், கலவரங்களை ஒருங்கிணைக்கவும் சட்ட விரோதமாக சமூக ஊடகங்களை பயன்படுத்தியிருந்தனர். இது தொடர்பில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு சில சமூக வலைத்தளங்களை பயன்படுத்த அரசாங்கத்தினால் தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

அத்துடன் குறித்த சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் மற்றும் சமூக வலைத்தள சேவை, சமூக வலை பயனர்களினதும் சமூகத்தினதும் உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில், அனைத்து இலங்கையரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அரசாங்கம் கோரிக்கை விடுக்கின்றது.

சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டிருந்தால், அது தொடர்பில் அரசாங்கம் தனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறது. என அரசாங்க தகவல் திணைக்களத்தின் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களின் பாவனைக்கு தடை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு  சற்று முன்னர் பணிப்புரை விடுத்துள்ளார்




Read more »

இலங்கை மீதான தாக்குதலுக்கு காரணம் இதுதான்! ஐ.எஸ் அமைப்பின் தலைவர் வெளியிட்டுள்ள காணொளி

சிரியாவின் நகரமொன்றான அமைப்பின் கோட்டையாக இருந்த பிரதேசத்தை இழந்தமைக்கு பழி தீர்க்கவே, இலங்கை மீது தாக்குதல்​களை மேற்​கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி வெளியிட்டுள்ள காணொளியொன்றின் மூலம் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

2014ம் ஆண்டில், வடக்கு ஈராக்கிலுள்ள மொசூலில் முன்னெடுத்த பிரசாரத்தின் பின்னர், ஐ.எஸ் அமைப்பின் தலைவரால் வெளியிடப்பட்ட முதல் காணொளி இதுவாகும்.

கடந்த ஐந்து வருடங்களுக்குப் பின்னர் முதற்றடவையாக ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி காணொளியொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த காணொளி 18 நிமிடங்களை கொண்டுள்ளது.

இந்தக் காணொளியில், ஈராக் மற்றும் சிரியாவில், பிரிட்டன் அளவில் தங்கள் வசமிருந்த பிரதேசத்தை, அந்நாட்டுடன் இடம்பெற்ற போரின் போது இழந்ததாகவும் இது, நீண்டநாள் போராட்டமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

இறுதிப் போரின் போது, தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பாரிய பிரதேசம், தங்களது கையை விட்டுச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிராளிகளை அழிப்பது குறித்துச் சிலருடன் கலந்துரையாடும் அவர், எதிரிகளை அழிக்கும் நடவடிக்கை தொடரும் எனவும், அந்தக் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவில், தங்கள் வசமிருந்து பாகூஸ் பிர​தேசம், அமெரிக்க மற்றும் சிரிய படையினரின் கூட்டுப் படை நடவடிக்கையின் போது, தங்களிடமிருந்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் பறிக்கப்பட்டது.

இதற்கு பழி தீர்ப்பதற்காகவே, இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை முன்னெடுத்ததாகவும், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பே காரணம் என்றும் அதை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Read more »

முஸ்லிம் பெற்றோர்களே இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி இதனை கட்டாயம் வாசியுங்கள்

இரத்தக்காட்டேறித்தனம் இலங்கைக்குள் தனது நோக்கங்களை அடைந்து கொள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர் கூட்டமொன்றை நன்றாக பயன்படுத்தி விட்டது. தொடர்ந்தும் பயன் படுத்தும்.


இலங்கை வளங்களை சூரையாடுவதில் ஏகாதிபத்தியத்திற்கும் முதலாலித்துவத்திற்கும் இடையில் உண்டாகியுள்ள நீயா, நானா சமரின் கோரத் தாண்டவமே 21ஆம் திகதி இலங்கையை நாசப்படுத்திய இரத்தக் காட்டேறித்தனமாகும்.


பாதுகாப்புத்துறையில் இடம்பெற்றுள்ள பலவீனத்தை தனது பிரச்சாரத்திற்கு ஏதுவாக பயன்படுத்த ஆரம்பித்துள்ள குள்ளநரிக் கூட்டமானது அதிகாரத்தையும், ஆட்சி பீடத்தையும் குறிவைத்து காய் நகர்த்த ஆரம்பித்துள்ளது.


கொலையுண்டோர் பட்டியலை நன்றாக அவதானித்தீர்களா? பெளத்தம் பத்திரமாக பாதுகாக்கப்பட்டுள்ளது. அறவே சம்பந்தமற்ற கிரிஸ்தவம் பல நூறு உயிர்களை பறிகொடுத்துள்ளது? இஸ்லாம் பழிக்கடாவாக மாற்றப்பட்டுள்ளது. மர்மமொன்று புதைந்திருப்பதும் பூதமொன்று ஒழிந்திருப்பதும் புலப்படவில்லையா உங்கள் சிந்தனைக்கு?


இலங்கையில் பயங்கரவாதத்தை அரங்கேற்றி, பஞ்சமாபாதகத்தை செய்து, இரத்த குளியலில் மூழ்கியுள்ள ஏகாதிபத்தியமும் முதலாளித்துவமும் உள் வீட்டு குள்ளநரிக் கூட்டமும் வெவ்வேறு நோக்கங்களைக் கொண்டுள்ளன. அவற்றில் ஒன்றிற்கு கணிம வளமும், இன்னுமொன்றிற்கு கேந்திர நிலையமும் மற்றையதிற்கு ஆட்சி அதிகாரமும் தேவைப்படுகின்றன.


ஏகாதிபத்தியமும் முதலாளித்துவமும் இலங்கைக்குள் தமக்கு வேண்டியதை முழுமையாக அடைந்து கொள்ளும் வரை ஓயப்போவதில்லை. முஸ்லிம் வாலிபர்களை பயன்படுத்தி இலங்கைக்குள் இன்னுமின்னும் இரத்தம் குடிக்க முனைவர். வாலிபர்களே! அன்பான இஸ்லாமிய இளசுகளே! தூண்டல்களுக்குள் மாட்டுண்டு துயரில் விழிந்து விடாதீர்கள்.


30 வருட கொடூர யுத்தத்தின் போது கொழும்பில் உலக வர்த்தக மையம் குண்டு வெடிப்புக்குள்ளானது, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் தகர்க்கப்பட்டது, தலதா மாலிகை இலக்கு வைக்கப்பட்டது, காத்தான்குடி பள்ளிவாசலில், ஏராவூரில், வடக்கு தமிழர்களுக்கிடையில், ஆனையிறவு முகாமில் என எத்தனையாயிரம் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன ? எமக்காக போராடிய பல ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் மாண்டு போயினர். அப்போதெல்லாம் 30 வருடங்களாக இலங்கையை அறவே கண்டுகொள்ளாத ஏகாதிபத்தியத்தின் உளவுப்பிரிவுகள் 21ம் திகதி குண்டுகள் வெடித்த போது 22ம் திகயே இலங்கைக்குள் ஏன் நுழைய வேண்டும் ?


பின்னால் மறைந்துள்ள மர்மங்கள் பல.....


ஏன் எமது இஸ்லாமிய மடையர் கூட்டம் பழிக்கடாவாக்கப்பட வேண்டும்?


அப்பாவி முஸ்லிம் வாலிபர்களே! ஏமார்ந்து போகாதீர்கள். நீங்கள் விழிப்படையாவிடின் இவர்களின் நரபலி விளையாட்டில் வெடி குண்டுகளாக வெடித்துச் சிதறி உங்கள் இன்மை, மறுமை வாழ்கையை பாழ்படுத்திக் கொள்வது மட்டுமே மிஞ்சப் போகின்றது.


பெற்றோர்களே!


பாதுகாவலர்களே!


உங்கள் பிள்ளைகள் மூளைச் சலவைக் காரர்களின் கரங்களில் இலகுவாக சிக்கிக் கொள்வது மிகப்பெரும்பாலும் இரண்டு சந்தர்ப்பங்களில் தான்.


(01) உங்கள் வாலிபப் பிள்ளைகள் உயர் கல்வி, தொழில் என்ற பெயர்களில் முதலாம் உலக நாடுகளிலும் மத்திய கிழக்கிலும் வாழ்ந்து வரும் காலம். இதில் எல்லா வாலிபர்களையும் சேர்த்துக்கொள்ள முடியாது. இருந்த போதும் பல வாலிபர்கள் அந் நாடுகளில் வைத்து மூளைச்சலவைக்கு உற்படுத்தப்பட்டே பயங்கரவாதத்திற்குள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர். தற்கொலை குண்டுதாரியாக வெடித்துச் சிதறிய ஸஹ்ரான் ஹாஷிம் மத்திய கிழக்கில் தொழில் புரிந்தவன். அவனை போலவே வெடித்துச் சிதறிய தெமட்டகொட இப்ராஹிம் ஹாஜியாரின் மகன்கள் இருவரும் UK பல்கலைக்கழக பட்டதாரிகள் ஆவர்.


(02) பூட்டிய அறைக்குள் உங்கள் வாலிப ஆண்/பெண் பிள்ளைகள் அடைந்து கொண்டு இணையத்தில் (Internet) சங்கமித்துத் கொண்டிருக்கும் தருணங்கள்.


பெற்றோர்/ பாதுகாவலர்களாகிய உங்கள் கடுமையான கண்கானிப்பின் கீழ் அவர்கள் வந்தாக வேண்டும். போலீஸ் காரனாக செயற்பட்டு அவர்களை அவதானித்து வாருங்கள். இல்லையேல் போலீஸ் வந்து உங்கள் பிள்ளைகளையும் உங்களையும் அள்ளிச் செல்வது நிச்சியம்.


நாட்டில் சமாதானம் நிலவட்டும், அனைத்து இனங்களுக்கிடையிலும் புரிந்துணர்வு ஏற்படட்டும், எமது இலங்கையில் எமக்கு மீண்டும் அமைதி வேண்டும். அள்ளாஹ் துணை நிற்பானாக.


அபூ அஹ்மத்.


29/04/2019.
Read more »

புர்கா அணிதல் தடை செய்யப்பட்டுள்ளது!


பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அவசரகால சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் நாளை முதல் பொது இடங்களில் முக அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாதபடி
Wearing of burka & other garments covering full face will be banned from tomorrow by the President under Emergency Regulations to ensure public safety.
-அல்மசூறா பிறேக்கிங் நியூஸ்
Read more »

வெலிகம பகுதி முஸ்லிம் நபரொருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி 56 லட்சம் ரூபா பணம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது!

இவ்வளவு தொகைப்பணம் எங்கிருந்து வந்தது எனும் கேள்விக்கு உரிய விடை கிடைக்காததால் அங்கிருந்த ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தான் ஒரு பட்டதாரி என்றும் சவூதியில் கணனி நிறுவனமொன்றில் தொழில்புரிந்து விட்டு கடந்த டிசம்பர் மாதம் தன் மனைவியுடன் இலங்கை வந்ததாகவும் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் நாளை மாத்தறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

வீடுகளில் அதிக எண்ணிக்கையில் சிம் கார்ட், மொபைல் போன்ஸ்,போன்ஸ் பெற்றரி, பணம் என்பவற்றை வைத்திருந்த பலர் கடந்த சில நாட்களாக கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது!

-அல்மசூறா பிறேக்கிங் நியூஸ்
Read more »