சந்தேகத்திற்கு இடமான ஆயுதங்கள் இருப்பதாக வெலிகம வெலிபிடிய பிரதேசத்தில் அடக்கப்பட்ட ஜனாஸா கபுருகள் தோண்டப்பட்டு சோதனை.

வெலிகம வெலிபிடிய பிரதேசத்தில் மலே பள்ளிவாசல் மையவாடியில் அடக்கப்பட்டிருக்கும் கப்ர் இல் ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸ் ற்கு கிடைத்த  முறைப்பாட்டை அடுத்து
 காவற்துறையினர் , விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணவத்தினர் இணைந்து வெலிகம வெலிபிடிய பிரதேசத்தில்  மையவாடியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்

அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸா கபுருகள் சில தோண்டப்பட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக பிரதேசவசிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பிட்ட பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான பொருற்கள் எதுவும் கண்டெடுக்க படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் பொருட்கள் தொடர்பில்  கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
Read more »

ஹம்பாந்தோட்டயிலும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி ?


காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஏழுபேருக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத குழு ஹம்பாந்தோட்டை பிரதேசத்திலும் ஆயுதப் பயிற்சி வழங்கியுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதி ஸஹ்ரானின் நெருங்கியவர்கள் என சந்தேகிக்கப்படும் இக்குழுவினர் ஹம்பாந்தோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஸஹ்ரானின் சகோதரரினால் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும், பொலிஸ் பரிசோதகருமான என்.பி. கஸ்தூரி ஆராச்சி உட்பட பொலிஸ் குழுவினரால் இந்த சந்தேகநபர்கள் ஏழு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 21 ஆம் திகதி தாக்குதலுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கின்றதா என்பது குறித்து இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சகோதர தேசிய ஊடகமொன்றிடம்
Read more »

புவக்பிட்டி பாடசாலையிலிருந்து 10 முஸ்லிம் ஆசிரியைகள் இடமாற்றம்


அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பாடசாலையில் கடமையாற்றும் 10 ஆசிரியைகள் உட்பட 12 முஸ்லிம் ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுக் கொண்டுள்ளனர்.

வலயக் கல்விப் பணிப்பாளர் தலையிட்டும் கூட ஹிஜாப் அணிந்த ஆசிரியைகள் அங்கு வரத்தேவையில்லையென குறித்த குழுவினர் அடம் பிடித்த நிலையில், இரு ஆசிரியைகள் களுத்துறைக்கும் மற்றும் பாத்திமா கல்லூரி, சேர் ராசிக் பரீட் கல்லூரி, பதியுதீன் முஸ்லிம் பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கு மாற்றங்களைப் பெற்றுள்ளனர்.

புவக்பிட்டி தமிழ் பாடசாலையின் நிர்வாகமும் இது தொடர்பில் சர்ச்சைக்குழுவுக்கு சார்பாக நடந்து கொண்ட நிலையிலேயே இவ்விவகாரம் ஆளுனர் அசாத் சாலியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு இவ்வாறு தீர்வு காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஆளுனர் ஆசாத் சாலி, இச்சம்பவம் கவலை தருவதாகவும் ஏலவே தெளிவான அறிவுறுத்தல்கள் இருந்தும் கூட இனரீதியிலான அடக்குமுறை உபயோகிக்கப்படுவது எதிர்காலத்தில் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் எனவும் சுட்டிக்காட்டியதுடன், சந்தர்ப்ப சூழ்நிலையை கருத்திற்கொண்டும் மேலதிக சர்ச்சைகளை தவிர்க்கும் முகமாகவும் இவ்வழியில் தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்
Read more »

ஐஎஸ் அமைப்பு இலங்கையை தெரிவு செய்தது ஏன்? சிறிசேன விளக்கம்

ஐஎஸ் அமைப்பு தனது இருப்பை வெளிப்படுத்துவதற்காக இலங்கையில் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிபிசியின் பிராந்திய மொழிச்சேவையொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நான் அதிர்ச்சியடைந்துள்ளேன் அவர்கள் ஏன் இலங்கையில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்தார்கள் என்பது எனக்கு தெரியவில்லை என சிறிசேன தெரிவித்துள்ளார்.

உலகின் வலுவான நாடுகளுடன் நேரடியாக மோதுவதற்கான திறன் இல்லாத காரணத்தினாலா ஐஎஸ் அமைப்பு அமைதி நிலவும் நாடொன்றில் தாக்குதலை மேற்கொள்வதற்கு தீர்மானித்தது என நான் கேள்வி எழுப்பவிரும்புகின்றேன் என சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐஎஸ் அமைப்பு தான் இன்னமும் அழிந்துவிடவில்லை என்பதை சொல்வதற்காக தனது இருப்பை வெளிப்படுத்துவதற்காக இலங்கையில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்ததா எனவும் சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.

புலனாய்வு பிரிவின் உயர் மட்டத்தில்உள்ளவர்களிற்கு தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற தகவல் கிடைத்தது எனினும் அவர்கள் அதனை எனக்கு தெரியப்படுத்தவில்லை எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவர்கள் தங்கள் கடமையை புறக்கணித்தனர் அதன் காரணமாகவே நான் நடவடிக்கை எடுத்தேன் என தெரிவித்துள்ள சிறிசேன இவர்களை பதவியிலிருந்து நீக்கியுள்ளேன், விசாரணைகளிற்காக குழுவொன்றை நியமித்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் எந்த நாட்டிலும் குண்டுவெடிப்பினை தொடர்ந்து ஜனாதிபதி பதவிவிலகுவதில்லை எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த சவாலை எதிர்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதே எனது பணி என நான் கருதுகின்றேன் என சிறிசேன தெரிவித்துள்ளார்
Read more »

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு வெடிப்பு சதியில் அமெரிக்கா? இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு வெடிப்பின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன், 500 பேர் வரையில் காயமடைந்திருந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உரிமை கோரியிருந்தது. இதனையடுத்து, பலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த தற்கொலை குண்டு வெடிப்பின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தொடர்குண்டு வெடிப்பின் பின்னணியில் வெளிநாடுகளின் சதி இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம்சாட்டி வருகின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், "இந்த பயங்கரத்தில் சர்வதேச சதி இருப்பதை உணர முடிகிறது” என அண்மையில் கூறியிருந்தார்.

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் தலை தூக்கியுள்ள நிலையில் இருவரும் ஒரே வித சந்தேகத்தை முன்வைப்பது வெடிகுண்டு பயங்கரத்தின் மறைக்கப்படும் பக்கங்களை அம்பலப்படுத்துகின்றன.

இப்படிப்பட்ட சூழலில்தான், அமெரிக்காவுக்கும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையே இருக்கும் இரகசிய உடன்படிக்கை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா, சீனா, இந்தியா, நோர்வே, பிரித்தானியா, ஜப்பான், பாகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகளின் உதவியுடன் 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளை, மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரர்களும் இல்லாது செய்தனர்.

யுத்தம் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து சீனா மற்றும் பாகிஸ்தானின் செல்லப்பிள்ளையாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மாறிப்போனார்.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத இந்தியா, பிரித்தானி, நோர்வே நாடுகளின் உதவியுடன் 2015ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வீழ்த்த, மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தியது அமெரிக்கா.

எனினும், மைத்திரிபால சிறிசேனவும் ஒரு கட்டத்தில் சீனா, பாகிஸ்தானின் ஆதரவாளராக மாறிப்போனார். இந்த பின்னணியில் தான் கடந்த 3 ஆண்டுகளாக, அமெரிக்காவிடம் மிக நெருக்கமான, அரசியல் ரீதியாக நட்பை பலப்படுத்தி வருகிறார் கோத்தபாய ராஜபக்ச.

இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியை வீழ்த்தி கோத்தபாயவை ஜனாதிபதியாக்க கடந்த 6 மாதகாலமாக இரகசிய வியூகங்களை மேற்கொண்டிருக்கிறது அமெரிக்கா.

இதன் ஒரு கட்டமாக, கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமையை இரகசியமாகத் திரும்ப பெற்றுக்கொண்டிருக்கிறது அமெரிக்க அரசாங்கம். அமெரிக்காவும் ராஜபக்ச, சகோதரர்களும் இதனை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

“இலங்கையின் அரசியலமைப்பு சட்டப்படி இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது.

கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா சென்றிருந்த கோத்தபாய ராஜபக்ச, அங்கு தங்கியிருந்த 3 வாரங்களும் அமெரிக்க உயர் ஸ்தானிகர்களுடன் பல கட்ட ஆலோசனைகளை நடத்தியிருக்கிறார்.

அமெரிக்காவே தன்னுடைய குடியுரிமையை மீளப்பெற்றுக்கொண்டது போல இருக்க வேண்டும் என்பது கோத்தபாயவின் கோரிக்கையாக இருந்துள்ளதாக இலங்கை புலனாய்வு அமைப்புகளோடு தொடர்புடைய தமிழீழ ஆதரவாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இதனை அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுகின்றார் என்ற தகவல் வெளியாக கூடாது என்பதற்காகவே குடியுரிமை இரத்து இரகசியமாக வைக்கப்படுகிறது.

கோத்தபாயவின் வெற்றிக்காகத்தான் இலங்கையில் வெடிகுண்டு பயங்கரங்கள் தொடர்ந்து நடந்தேறுகின்றன. ஜனாதிபதி தேர்தல் வரை இலங்கையை பதற்றத்திலேயே வைத்திருக்க திட்டமிடுகிறது அமெரிக்கா” என அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

எவ்வாறாயினும், அமெரிக்கா மற்றும் கோத்தபாயவின் இந்த இரகசிய திட்டங்களுக்கு சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்ஷா விக்ரமதுங்க முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றார்.

தனது தந்தையின் படுகொலைக்கு பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சதான் காரணம் என லசந்தவின் மகள் அகிம்ஷா விக்கிரமதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

“கோத்தபாயவின் நடவடிக்கைகளை அறிந்த அகிம்ஷா, அமெரிக்காவில் தனது நண்பர்களான சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்தார்.

தனது தந்தையின் படுகொலைக்கு கோத்தபாயதான் காரணம் எனவும், இவர் மீது நிறைய போர்க்குற்றங்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டி அமெரிக்காவின் கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் கோத்தபாயவிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார் அகிம்ஷா.

அமெரிக்க குடியுரிமை பெற்றவரான கோத்தபாய மீது அந்நாட்டு நீதிமன்றத்தில் உள்ள வழக்கு முடியும் வரையில் குடியுரிமையை இரத்து செய்யவோ, திரும்பப் பெறவோ முடியாது.

கோத்தபாயவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாமல் தடுக்கவே அவர் மீது அகிம்ஷா இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்கா அரசின் உயரதிகாரிகளின் உதவியுடன் வழக்கை தடுத்து நிறுத்த கோத்தபாய முயற்சிப்பார் என யோசித்த அகிம்ஷாவின் சட்ட நிபுணர்கள், கோத்தபாய மீது பதிவு செய்யப்பட்ட வழக்கையும், அவருக்கு அனுப்பப்பட்ட மனுவையும் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்” என ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், அமெரிக்கா மற்றும் கோத்தபாய ராஜபக்சவின் கூட்டுச் சதியில் இலங்கை அரசியல் களம் சூடுபிடித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more »

பயங்கரவாத குழுவின் சொத்து விபரங்கள் வெளியானது


உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல்களை முன்னெடுத்த பயங்கரவாதக் குழுவின் 1,400 இலட்சத்துக்கும் அதிக பணம் மற்றும் 7 மில்லியன் பெறுமதியான சொத்து தொடர்பிலான விபரங்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சொத்துக்களை முடக்குவது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர நேற்று (06) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 73 பேரும் தடுத்துவைத்து விசாரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, நீர்கொழும்பு பகுதியில் இருதரப்பினருக்கு இடையில் நேற்று இடம்பெற்ற முறுகல் நிலை தொடர்பில் விசாரிப்பதற்காக 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
Read more »

தலவாக்கலையில் இரு குழுக்களிடையே மோதல் ; அறுவர் கைது!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகர மத்தியில் நேற்றிரவு 8 மணியளவில் இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானமையினாலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படாத போதிலும் ஒரு சிறிய விடயத்தை முன்வைத்து நகரத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முற்பட்டமை காரணமாக இவர்கள் அனைவரும் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
Read more »

மேலும் நான்கு இஸ்­லா­மிய அமைப்­பு­க­ளுக்குத் தடை?


அர­சாங்கம் அடுத்­த­வாரம் மேலும் நான்கு இஸ்­லா­மிய அமைப்­பு­க­ளுக்குத் தடை விதிக்­க­வுள்­ள­தாக, மூத்த அர­சாங்க அதி­காரி ஒருவர் தகவல் வெளி­யிட்­டுள்ளார்.

அவ­ச­ர­காலச் சட்ட விதி­மு­றை­களின் கீழ், மேலும் 4 இஸ்­லா­மிய அமைப்­பு­களைத் தடை செய்யும் அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டை­யவை எனக் கண்­ட­றி­யப்­பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் மற்றும் ஜமி­யத்து மில்­லாது இப்­ராகிம் ஆகிய அமைப்­புகள் கடந்த வாரம் அர­சாங்­கத்­தினால் அவ­ச­ர­காலச் சட்ட விதி­களின் கீழ் தடை செய்­யப்­பட்­டன.

இந்த அமைப்­புகள் தீவி­ர­வாத அமைப்­பு­க­ளாக பிர­க­டனம் செய்­யப்­பட்­டுள்­ளன. இந்த அமைப்­பு­க­ளுடன் தொடர்­பு­களை கொண்­டி­ருந்த மேலும் நான்கு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளே அடுத்த வாரம் தடை செய்யப்படவுள்ளன.

Read more »

முப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம்.






நீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவிரமடைந்துள்ளது.

சம்பவ இடத்தில் முப்படையினர் உள்ளபோதும், அவர்கள் முன்நிலையிலேயே முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் செய்யப்பட்டதாக அங்குள்ள ஊர் மக்கள் jaffna muslim இணையத்திடம் வேதனை தெரிவித்தனர்.

உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் சம்பவ இடத்தில் காணப்படுகின்ற போதிலும், முஸ்லிம்களைத்தான் வீடுகளுக்கு செல்லுமாறு பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்துகின்றனரே தவிர, வன்முறை நிகழ்த்தக்கூடிய நிலையில் காணப்படும் பௌத்த கிறிஸ்த்தவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தல் வழங்கவோ அல்லது அவர்களை கைது செய்யவோ, எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

முஸ்லிம் பகுதியான பலகத்துறைக்கு செல்லும், அத்தனை வழிகளும் அடைக்கப்பட்டு, முஸ்லிம்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது போன்ற ஒரு நிலை, பலகத்துறையில் தோன்றியுள்ளதாகவும் அங்குள்ள இளைஞர்கள் jaffna muslim இணையத்திடம் மேலும் சுட்டிக்காட்டினர்.


Jaffna muslims
Read more »

பதற்றத்தை தொடர்ந்து நீர்கொழும்பில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம்


நீர் கொழும்பில் ஏற்பட்ட இன வன்முறை காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


நாளை காலை 7 மணி வரையில் இந்த ஊரடங்கு சட்டம் நீடிக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பில் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அறிவித்துள்ளார்.




Read more »