உலக கிண்ண அரையிறுதியில் இலங்கைக்கு வாய்ப்பு கிடைக்க இது தான் நடக்க வேண்டும்.


உலக கிண்ணத்தின் புள்ளி பட்டியலில் அரையிறுதி வாய்ப்பை அவூஸ்ரெலியா மட்டுமே பெற்றுள்ளது.

இன்னும் மூன்று அணிகள் தெரிவு செய்யப்படும் நிலையில் இந்தியா 11 புள்ளிகள் (இன்னும் இலங்கை, வங்களாதேஷ் அணிகளுடன் போட்டிகள்) உள்ளன.

நியூசிலாந்து அணியும் 11 புள்ளிகள் (ஆனால் இங்கிலாந்து அணியிடம் மட்டும் ஒரு போட்டி) உள்ளன. இங்கிலாந்தை வீழ்த்தினால் 13 புள்ளியை பெற்று உள்ளே செல்லும்

இங்கிலாந்து 10 புள்ளிகள் பெற்றுள்ளன. நியூசிலாந்து அணியுடன்உள்ள போட்டியில் வீழ்த்தினால் 12 புள்ளியை பெற்று உள்ளே செல்லும்.

பாகிஸ்தான் அணி 9 புள்ளிகள் (வங்களாதேஷ் அணியுடன் மட்டும் போட்டி) உண்டு. வென்றால் 11 புள்ளிகளை பெரும்.

வங்களாதேஷ் இந்தியா, பாகிஸ்தான் என இரு போட்டி உண்டு. வென்றால் 11 புள்ளிகள் கிடைக்கும்.

இலங்கை 8 புள்ளிகள் (இந்தியா அணியை அதிக ஓட்டத்தால் வீழ்த்தினால் 10 புள்ளிகள்) கிடைக்கும்.

சொல்ல வாரது என்னவென்றால் இலங்கை அரையிறுதி செல்ல வேண்டுமானால் (நியூசிலாந்து அணி இங்கிலாந்தை வீழ்த்தி, வங்களாதேஷ் அணி பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும், பின்னர் இந்தியா வங்களாதேஷை வீழ்த்த வேண்டும்)

பின்னர் இலங்கை அணி இந்தியா அணியை பெரிய சராசரியால் வீழ்த்துமேயானால் அரையிறுதி செல்லும்.

இது நடக்குமா....???
Read more »

இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார்.


பி.பி.சி. செய்திச் சேவைக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு உலகக் கிண்ணத் தொடர் நிறைவடைந்ததும், ரசிகர்களுக்காக மேலும் ஒரு தொடரில் விளையாடியவுடன் அவர் ஓய்வெடுப்பதாக அறிவித்துள்ளார்.
நான் அணியின் வெற்றிக்காக மிகவும் போராடினேன் ஆனால் எனது உடல் தற்போது சோர்வடைந்து விட்டது. எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள சர்வதேச இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் தான் விளையாட எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த மலிங்க, எனினும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துடன் கலந்தாலோசித்த பின்னரே அது தொடர்பான உறுதியான தகவல்களை வெளியிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகக் கிண்ணத் தொடர் நிறைவுபெற்றதும், சர்வதேச கிரிக்கெட் தொடர் ஒன்றில் விளைாயடி விடைபெற வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகவுள்ளது. அதன்படி பங்களாதேஷ் அல்லது நியூஸிலாந்து அணியுடானான போட்டி எனது இறுதி தொடராக அமையலாம்.
நுவான் குலசேகர சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடம்பிடித்த இலங்கையின் முதல் வீரர் என்ற பெருமையை உடையவர். நான் அவருடன் 10 ஆண்டுகளாக இணைந்து விளையாடியுள்ளேன். எனவே அவருடன் இணைந்து ஒரு தொடரில் விளையாடியதன் பின்னர் நான் ஓய்வு பெற எதிர்பார்த்துள்ளேன். அதற்கான முயற்சிகளையும் முன்னெடுப்பேன்.

எனக்கு தற்போது 36 வயதாகிறது. போட்டிகளில் விளையாடுவதற்கான சக்தி என்னிடம் குறைவாக காணப்படுகின்றது. அதனால் எதிரனியினரை வீழ்த்துவது சவால் மிக்கதொன்றாக காணப்படுகின்றது.
நாங்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் கடந்த காலங்களில் 2,3 மற்றும் நான்காவது இடத்தில் இருந்தோம் ஆனால் அந்த நிலை தற்போது இல்லை. அதை எண்ணி நான் மிகுந்த வேதனை அடைகின்றேன் எனவே நான் ஓய்வு பெறுவதற்கு முன்னர் தரவரிசைப் பட்டியலில் 9 ஆவது இடத்தில் இருக்கும் எமது அணியை 7 ஆவது இடத்துக்கு முன்னேற்றினால் மகிழ்ச்சியைடைவேன்.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் நேரடியாக விளையாடுவதற்கான தகுதியை நாம் இழந்துள்ளோம். எனவே தான் நான் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி அந்த தகுதியை அணிக்காக பெற்றுக் கொடுத்ததன் பின்னர் ஓய்வு பெற வேண்டும் என எதிர்பார்த்துள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Read more »

இராணுவ சூனியப் பகுதிக்குள் இரகசியமாக அமேரிக்கா கொரியா ஒரு சந்திப்பு!


அடிக்கடி அணுஆயுத சோதனைகளை நடத்தியும், அணுஆயுதப் போரை ஆரம்பிக்கப் போவதாக அச்சுறுத்தியும் வரும் வட கொரியா தனது நிலைப்பாட்டில் மிகப் பெரிய மாற்றங்களை செய்வதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. இந்நிலையில் பல ஆண்டு காலமாக நிலவி வரும் இந்தப் பிரச்சினை குறித்த அடிப்படை விடயங்கள் பற்றி ஆராய்வது இங்கு முக்கியம்.
வட கொரியா அணு ஆயுதங்களை விரும்புகிறது.இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு கொரிய தீபகற்பம் இரண்டாகப் பிரிந்தது. கம்யூனிச நாடான வட கொரியா ஸ்டாலின் உருவாக்கிய சர்வாதிகார அமைப்பை ஏற்றுக் கொண்டு கட்டமைக்கப்பட்டது.உலக மேடையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தனது நாட்டை அழிக்க நினைக்கும் மற்ற உலக நாடுகளிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்கான ஒரே வழி அணுஆயுதங்கள்தான் என்று அந்நாடு கூறுகிறது.அணு ஆயுதத் தாக்குதலை வட கொரியாவால் நடத்த முடியுமா என்பது அடுத்த கேள்வி.
ஒருவேளை நடத்தலாம், ஆனால் வாய்ப்பு இல்லை.வட கொரியா இதுவரை ஆறு அணுசக்தி தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதில் ஒன்று ஐதரசன் குண்டு சோதனை என்று அது கூறுகிறது.
தொலைதூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணையில் பொருத்தக் கூடிய அளவுக்கு சிறிய ரக அணுகுண்டை உருவாக்கியுள்ளதாக வட கொரியா கூறினாலும் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
வட கொரியாவிலிருந்து அமெரிக்காவைத் தாக்கும் ​ெபாலிஸ்டிக் ரக ஏவுகணையையும் அந்நாடு கொண்டுள்ளதாக வல்லுநர்கள் நம்புகின்றனர். வட கொரியாவின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்றவை பலவிதமான தடைகளை விதித்துள்ளன.
தென் கொரியா மற்றும் ஜப்பானைக் குறி வைத்தே வட கொரியா தனது ஏவுகணைகளைத் தயாரிக்கிறது. வட கொரியாவின் தற்காப்பு தாக்குதல் பேரழிவை உருவாக்கும் பதிலடியை உண்டாக்கலாம். அதன் காரணமாக எண்ணற்ற வட கொரியர்கள் உயிரிழக்க நேரிடலாம்.
ஆசிய கண்டத்தின் மிகப் பெரிய சக்தியாக விளங்கும் சீனா கொரிய நாடுகளுக்கு இடையே நிலவும் சூழ்நிலையை எண்ணி கவலையடைந்துள்ளது. அதாவது, கொரிய நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏதாவது ஏற்பட்டு இரு கொரிய நாடுகளும் இணையும் பட்சத்தில், தற்போது தென் கொரியாவில் இருக்கும் அமெரிக்கப் படைகள் தனது எல்லைப் பகுதியை நோக்கி வரக் கூடும் என்று சீனா நினைக்கிறது.
இதற்கு முன்பு நடந்த ஆயுதக் குறைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் தோல்வியையே சந்தித்துள்ளன.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தையை நடத்திய வட கொரியா, அதன் பிறகு தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்றது. அதன் பின்னர், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு தாங்கள் தயார் என்று வட கொரியா விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தாங்கள் அணுஆயுத குறைப்பை உறுதி செய்யும் நடவடிக்கைளை ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.
ஒரு வருடத்தில் மூன்றாவது சந்திப்பு:
இதேவேளை வட மற்றும் தென் கொரியாவின் எல்லையில் இருக்கும் இராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் டொனால்ட் ட்ரம்ப் வடகொரிய அதிபர் கிம்மை சந்தித்துள்ளார்.
இராணுவம் விலக்கப்பட்ட இந்தப் பகுதியில் நடைபெற்ற சந்திப்புக்கு, ட்விட்டரில் திடீரென கிம்மை சந்திக்க டிரம்ப் அழைப்பு விடுத்தமையே காரணமாகும்.
"அமைதிக்காக அவர்கள் இருவரும் கைக்குலுக்குவர்" என தென் கொரிய அதிபர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வடகொரியா எந்த ஒரு கருத்தும் முன்னதாகத் தெரிவிக்கவில்லை. வடகொரியா அணு ஆயுதப் பயன்பாட்டை கைவிடுத்தல் குறித்ததான நின்று போன பேச்சுவார்த்தை இந்த சந்திப்பின் மூலமாக மீண்டும் தொடரும் என நம்பப்படுகிறது.
ஒரே வருடத்தில் ட்ரம்பும் கிம்மும் மூன்றாவது முறையாக சந்தித்துக் கொண்டுள்ளனர்.ட்விட்டரில் ட்ரம்ப் விடுத்த அழைப்பை "சுவாரஸ்யமானது" என வடகொரியா தெரிவித்திருந்தது.
முன்னதாக தென்கொரிய தலைநகர் சோலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கிம்மிற்கும் தனக்கும் இடையே நல்லதுதொரு உறவு வளர்ந்திருப்பதாகவும், அவரை சந்திக்க ஆர்வமாக உள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
Read more »

காது எதுக்கு இருக்கு என்று யாரையாவது கேட்டு பாருங்க.?

காது எதுக்கு இருக்கு என்று யாரையாவது கேட்டு பாருங்க.? கேட்பதற்கு என்பார்கள்.! ஆனால் காது இன்னொரு விஷயத்தை செய்கிறது. அது மிக முக்கியமானது.

உங்க கால்கள் தரையில் ஊன்றி நிற்பதற்கு காரணம் காது தான், மனிதன் மயங்கி சரிந்து விடாமல் மொத்த உடல் அமைப்பையும்  சமநிலை படுத்த காது மிக அவசியமாகிறது.

ஒரு பைக்கால் அதன் இரண்டு டயர்களால் நிற்க முடிவதில்லை ஏன்?  மனிதன் மட்டும் எப்படி இரு கால்களால் நிற்கிறான்?

பைக் நிற்க்க கூடுதலாக ஸ்டாண்ட் தேவைப்படுகிறது, அதனால் தன்னை தானே சமநிலை படுத்திக்கொள்ள முடிவதில்லை.

ஆனால் மனிதனால் அது முடியும், அவன்  வடிவம் நிற்க்க முடியாத நிலையில் இருந்தாலும் எந்த சக்தி அவனை சமநிலையுடம் நிற்க்க வைக்கிறது என்றால் அது அவன் காதில் உள்ள "காக்லியா"  திரவத்தினால் தான். 

ஒரு டெட்பாடியை நிற்க்க வைக்க முடியுமா? முடியாது ஏன் எனில் அவன் சமநிலை தவறி விட்டான். அதே உயிருடன் இருப்பவனால் நிற்க்க முடிகிறது,

காது கேட்பதற்கும்  காக்லியா திரவம்  உதவுகிறது,  ஒலி அலைகளை காது மடங்கல் உள்வாங்கி காக்லியாவை அதிர்வடைய வைத்து அந்த அலைகள் பல ஆயிரம் வழிகளில் அலைந்து திரிந்து மைக்ரோ நொடியில் உங்க மூளைக்கு சத்தங்களை உணர வைக்கிறது.

 10 அல்லது 15 டெசிபல் சத்தங்கள் வரை காது கேட்க்க போதுமானது. அதை மீறும் போது காதில் பிரச்சினைகள் வரும்,

 முதலில் மயக்கம், தலை சுற்றல் வாந்தி, மண்டை வலி என தொடர்ந்து இறுதியில் காது கேட்க்கும் திறன் குறைந்து விடும்.

காதின் மடல்கள் மிக அற்புதமான வடிவத்தில் ஆனது, மண்ணெண்ணெய் ஸ்டோவில் புலன் வைக்காமல் அப்படியே எண்ணெய்யை ஊற்றினால் எப்படி சிதறி போகும்?

அதே போன்று தான் அந்த காது மடல்கள் இல்லா விட்டால். சத்தங்கள் நேரடியாக மண்டைக்குள் மோதி அதுவே உங்களை கொன்று விடும் அவ்வளவு வலியுடனானதாக இருக்கும்.

அதை தான் ஃபில்டர் செய்கிறது காது மடல்களும் அதை சுற்றி உள்ள சிக்கலான அமைப்புகளும்.

#அழகிய_படைப்பாளன்_இறைவன் ❤

Read more »

தென் மாகாண பாடசாலைகள் 2.30 வரை நடைபெற வேண்டும் - தென் மாகாண ஆளுனர் காரியாலயம் அறிவிப்பு


தென்மாகாணப் பாடசாலைகள் முடிவடையும் நேரத்தை நீடித்துள்ளதாக தென் மாகாண ஆளுனர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அதன் படி தென்மாகாணத்திற்குட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் மாலை 2.30 மணிவரை நடைபெற வேண்டும் என ஆளுனர் அலுவலகம் அறிவித்துள்ளது.

தென் மாகாணத்தில் இயங்கும் தேசிய பாடசாலைகளுக்கு இந்த நேர மாற்றம் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 12.30 மணியளவில் ஆளுனர் அலுவலகம் மாகாணப் பாடசாலைகள் அனைத்திற்கும் தொலைபேசியினூடாக இவ்வறிவித்தல் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இதற்கான காரணத்தை ஆளுனர் அலுவலகம் தெரிவிக்க வில்லை.

இவ்வறிவித்தல் காரணமாக பெற்றார், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை வாகன சாரதிகள் உட்பட பலர் பல்வேறு முறைப்பாடுகளை தெரிவித்துவருகின்றனர்.
Read more »

பேஸ்புக்கின் மின்னிலக்க நாணயம் விரைவில் அறிமுகம்


பேஸ்புக் நிறுவனம் லிப்ரா எனும் புதிய மின்னிலக்க நாணயத்தை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.

நவீன மின்னிலக்கச் சாதனங்களின் மூலம் மலிவுக் கட்டணத்தில் உலக அளவில் பரிவர்த்தனையை எளிமையாக்குவது அதன் நோக்கமாகும். லிப்ரா, உலகளாவிய புதிய நாணயமாக திகழும் என்று கூறப்படுகிறது.

போஸ்புக் நிறுவனம் அடுத்த ஆண்டு அதை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது

நிதிச் சேவை வழங்கும் லாப நோக்கமற்ற அமைப்புகள், இணைய வர்த்தக நிறுவனங்கள் உட்பட சுமார் 25 பங்காளித்துவ அமைப்புகள் அதில் பங்கெடுத்துள்ளன.

மின்னிலக்க நாணயத்தைச் சேமிக்கவும் செலவிடவும் பரிவர்த்தனை செய்யவும் ஏதுவாக கலிப்ரா என்ற மின்னிலக்க பணப்பையையும் பேஸ்புக் உருவாக்கியுள்ளது.

அந்த நிறுவனத்தின் தகவல் பரிமாற்றச் செயலிகளான மசெஞ்சர், வட்ஸப் தளங்களுடன் கலிப்ரா இணைக்கப்படும். குறுஞ்செய்தி அனுப்பவது எவ்வளவு இலகுவானதோ, அந்த அளவுக்கு பணத்தை சேமிப்பது, அனுப்புவது மற்றும் செலவு செய்வதை இது இலகுவாக்கும்.

உலகெங்கும் வங்கி கணக்கு இல்லாத 170 கோடி மக்கள் மற்றும் அவர்கள் பணப் பரிமாற்றம் மேற்கொள்ளச் செய்யும் செலவுகள் ஆகியவை பற்றி இந்த திட்டம் பற்றிய அறிக்கையில் பேஸ்புக் விபரித்துள்ளது
Read more »

ஐ.எஸ் பெண் உறுப்பினருக்கு ஈராக்கில் 15 ஆண்டுகள் சிறை


ஈராக்கில் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஐ.எஸ் பெண் உறுப்பினருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பெண் ஐ.எஸ்ஸில் உறுப்பினராக உள்ளவரை திருமணம் செய்துள்ளார். இதில் அந்த நபர் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். அப்பெண் குறித்த கூடுதல் தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஈராக் நீதிமன்றம் அப்பெண்ணுக்கு 15 ஆண்டுக்கு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

ஈராக் நீதிமன்றம் இந்த வாரம் பத்திற்கும் மேற்பட்ட ஐ.எஸ் உறுப்பினர்களுக்கு மரணத் தண்டனை விதித்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈராக் ஐ.எஸ் இயக்கம் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்புடைய சுமார் 19,000 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இதில் சுமார் 3,000 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக ஏ.பி செய்தி நிறுவனம் கடந்த ஆண்டு செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Read more »

ரிஷார்ட் இன்று தெரிவுக் குழு முன்னிலையில்...!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவில், முன்னாள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் இன்று சாட்சியம் அளிக்கவுள்ளார்.

விசேட தெரிவுக் குழு அமர்வு, நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முன்னாள் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரான ரிஷார்ட் பதியுதீன் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவுக் குழு முன்னிலையில் பிசன்னமாகிய சந்தர்ப்பத்தில், அவருக்கு மீண்டும் இன்றைய தினம் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டது.

ரிஷார்ட் பதியுதீன் கடந்த 26 ஆம் திகதி தெரிவுக் குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கவிருந்த நிலையில், குழுவின் மூன்று உறுப்பினர்கள் அந்த சந்தர்ப்பத்தில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

இதன் காரணமாக முன்னாள் அமைச்சரை மீண்டும் இன்று முன்னிலையாகுமாறு தெரிவுக்குழுவினால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது

எனினும் தெரிவுக்குழு முன்னிலையில் பிரசன்னமாவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மறுப்பு தெரிவித்துள்ளர்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அவசரகால சட்டத்தை நீடிக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்ல இதனை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என பதிலளித்திருந்தார்.
Read more »

தவறான தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ள இலங்கை! -ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரோட்

இலங்கை மீண்டும் தவறான விடயங்களுக்காகத் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது’ என இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரோட் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்


கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இலங்கை தலைசிறந்த சுற்றுலாப் பயணத்தளமாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர்
இது இலங்கையின் சுற்றுலாப் பயணத்துறைக்கு சிறப்பானதொரு வருடமாக இருந்திருக்க வேண்டும்.என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஏற்பட்ட அரசியலமைப்பு நெருக்கடியினாலும், அதற்குப் பின்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்களாலும், முஸ்லிம்கள் மீதான வன்முறைகளாலும் அந்த மகிழ்ச்சிக்குரிய செய்தி மறைக்கப்பட்டு விட்டது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதேவேளை, மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதன் மூலம் இலங்கை சர்வதேசத்தின் மத்தியில் கொண்டிருக்கக் கூடிய அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் காணப்படுவதாக ஜேர்மனி எச்சரித்துள்ளது.

நான்கு கைதிகளுக்கு விரைவில் மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக ஜனாதிபதி சிறிசேன பகிரங்கமாக அறிவித்தமை தொடர்பில் வெகுவாக அவதானம் செலுத்தியிருப்பதாக ஜேர்மனியின் ஆளும் சமஷ்டிக் கட்சியின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான செயற்திட்டங்களுக்கான வெளிவிவகார அலுவலகத்தின் ஆணையாளர் பார்பெல் கொஃப்லர் தெரிவித்துள்ளார்.
Read more »

கடந்த ஐந்து ஆண்டுகளாக தென் மாகாண பாடசாலைக் கல்வித்துறையில் தமிழ் மொழிப்பிரிவு தொடர்ந்தும் புறக்கணிப்பு

2012- 2014 காலப்பகுதியில் வழங்கப்பட்ட தென் மாகாண ஆசிரிய நியமனங்களில் காணப்பட்ட முறைகேடுகளுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் நீதிமன்ற உதவியை நாடினர். இவ்வாறு சட்ட ரீதியான உதவியை முஸ்லிம்கள் நாடியமையால் குறிப்பாக முஸ்லிம் பாடசாலைகளுக்கும், பட்டதாரிகளுக்கும் ஆசிரிய நியமனங்கள் வழங்குவது தடைப்பட்டது. இதனாால் பாதிக்கப்பட்டது மாகாண சபைகளினால்  பரிபாலனை செய்யப்படுகின்ற கிராமத்து பாடசாலை மாணவர்களாகும். இதனால் பல மாணவர்கள் தமக்கு பொருத்தமான பாடங்கள் கலைத்துறையிலுல் இல்லை என்று ஒ​ரே காரணத்துக்காக நகர் பாடசாலைக்கு சென்றனர்.

இவ்வாறு இன்னல்களுடன் தென்மாகாண தமிழ் மொழிப்பிரிவு பயணிக்கையில் இறுதியாக இவ்வாண்டு ஏப்ரலில் மாகாண சபை கலைக்கப்பட்டதும் தென் மாகாண ஆளுனர் ராஜித் கீர்த்தி தென்னகோன் அவர்கள் தனது அதிகாரத்தைக் கொண்டு நாட்டில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டபோதிலும் தமிழ் மொழிப்பிரிவு பாடசாாலைகளுக்கு  ஒரு மாதகால இடைவௌியில் ஆசிரிய நியமனங்களை வழங்கினார். இது வரவேற்கத்த விடயமாகும். ஆனால் அதன் பின்னர்தான் மறு பிரச்சி​னை ஆரம்பமாகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்ட  மாணவர்களுக்கு கற்பிக்கவேன வழங்கப்பட்ட ஆசிரிய நியமனங்களை அவதானித்தால் சிலருக்கு  பிரயாணத்திற்கு கஷ்டமான  தூரபிரதேசங்களில் கிடைக்கப்பெற்றது. தொழிலொன்றை  மேற்கொண்ட வண்ணம் விண்ணப்பித்த சிலருக்கும் ஆசிரிய நியமனம் கிடைத்தது. பெண் ஆசிரியர்களில் சிலருக்கு நியமனம் கிடைத்த பின்னர் கணவன் அல்லது ஆண் உறவினர்களால் நியமனத்தை பெற வேண்டாம் என்ற தடை பிறப்பிக்கப்பட்டது.

மேற்படி காரணங்களால் நியமனம் கிடைத்த சில ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளித்து  தமது பொறுப்புக்க​ளை ஏற்றுக் கொள்ளவில்லை. மீண்டும் இதனால் பாதிக்கப்பட்டது மாணவச் சமூகம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அடுத்தாக தொடர்ந்தும் ஆசிரிய  நியமனம் மூலம் சமூக சேவை செய்யனும் என எதிர்பார்க்கும் பட்டதாரிகளாகும்.

பல ஆண்டுகளாக ஆசிரியர் இல்லையென்ற  மாணவர்கள், இன்று நமக்கு புதிய ஆசிரியர் வருவார் என நம்பிக்கையுடன் பாடசாலைக்கு  சென்றனர். ஆனால் அன்றும் புதிய ஆசிரியர் பாடசாலைக்கு வரவில்லை. இதனால் அந்த மாணவர்களின் கனவுகளும் தொடர்ந்து கனவாக உள்ளது. என்பது கவலையான விடயமாகும்.

தென் மாகாணத்திலும், ஏனைய பிரதேசங்களிலும் இவ்வாறு அரசியல் தொழில்களுக்கு விண்ணப்பிப்போருக்கு பணிவான வேண்டுகோள் தமக்கு ஏற்கனவே தொழில்  இருந்தால், கஷ்ட பிர​தேசங்களில் தொழில் செய்ய விரும்பாவிடின், தனது கணவன் அல்லது ஆண்  உறவினர்களால் தொழிலை ஏற்க வேண்டாம் என தடையெனின் வீணாக விண்ணப்பித்து பிறருக்குள்ள வாய்ப்புகளை பறிக்க வேண்டாம்.

பட்டதாரிகளே! "கற்பவனாக இரு கற்பிப்பவனாக இரு கற்பவனுக்கு உதவுபவனாக இரு நான்காமவனாக இருந்து விடாதே....!!! (ஹதீஸ்)" என்ற நபிமொழிக்கேற்ப ஆசிரியர் நியமனம் கிடைத்தும் தொழிலை ஏற்காமல் நான்காமவனாக இருந்து விடாதே....!

Ibnuasad
Read more »