மாத்தறை மாவட்ட முஸ்லிம்களை நாளை சந்திக்கின்றனர் மகிந்த மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ.


மாத்தறை மாவட்ட முஸ்லிம்களை எதிர்வரும் 06.10.2019 ஞாயிற்றுக்கிழமை
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனா ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷா மற்றும் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷா ஆகியோர் சந்திக்கவுள்ளார்.

இச் சந்திப்பானது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் வெலிகம நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனா ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷா மற்றும் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷா ஆகியோரின் தலைமையில் கீழ் இடம்பெறவுள்ள இந்நிகழ்ச்சியில் வெலிகம நகரசபை முன்னால் தலைவர் மொஹமட் ஹுஸைன் ஹாஜியார் முஹம்மத், அதுரலிய பிரதேச சபை உறுப்பினர் சமீம் இக்பால் மற்றும் ஹக்மன பிரதேச சபை உறுப்பினர் பாயிஸ் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்


Ibnuasad
Read more »

வெலிகம கோட்டகொடை யை சேர்ந்த இம்தியாஸ் தூக்கில் இட்டு தற்கொலை.

வெலிகம கோட்டகொடை யை பிறப்பிடமாகவும் கெவ்னுகமுவ வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இம்தியாஸ் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இன்று மாலை வேளையில் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேசவசிகள் தெரிவிக்கின்றனர்.தற்கொலைக்கான  காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை மேலதிக பரிசோதனைக்காக வளானை வைத்தியசாலையில்  உடல் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை வெலிகம போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்
Read more »

About us

அஸ்ஸலாமு அலைக்கும்.

எமது WeligamaNews
facebook மற்றும் இணைய
www.weligamanews.com பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

குறிப்பாக வெலிகம பிரதேசத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ள எமது இணைய தகவல் சேவையானது வெலிகம தொடர்பான தகவல்கள் உட்பட உள்நாட்டு வெளிநாட்டு செய்திகளையும் உடனுக்கு உடன் அறிந்துகொள்ளலாம்.
உங்களுக்கும் எமது facebook பக்கம் மற்றும் இணையதளம் www.weligamanews.com

பக்கத்தில் செய்திகள் மற்றும் தகவல்களை வழங்கு வாய்ப்பை ஏற்படுத்தி எமது whatsapp இலக்கம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது உங்கள் ஊரின் பிரதேசத்தின்  நிகழ்வுகளை எமது வாட்சப் இலக்கத்தை தொடர்புகொண்டு தெரியப்படுத்ததுங்கள்

கீழே உள்ள இணைப்பின் மூலம் எம்மை நேரடியாக வட்ஸ்சப் இல் தொடர்புகொள்ளலாம்

https://api.whatsapp.com/send?phone=94766554436&text=&source=&data=

அதேவேளை வெலிகம பிரதேச ஜனாஸா அறிவித்தல்களையும் நாம் எமது இணையதளத்தில் பதிவேற்றவுள்ளோம். பள்ளிவாசல்களுக்கு அறிவிப்புக்காக கொடுக்கும் அந்த அறிவிப்பை எமக்கு whatsapp இல் டைப் செய்தொ அல்லது ஒரு புகைப்படம் எடுத்தோ எமது வாட்சப் இலக்கத்திற்கு அனுப்பினால் அதை இலவசமாக எமது இணையதளத்தில் பதிவேறவுள்ளோம்
என்பதையும் அறியத்தருகின்றோம்

நீங்கள் ஒரு தகவலை எமக்கு அனுப்புவதாக இருந்தால் கட்டாயம் உங்கள்
பெயர் ,இடம் மற்றும் தொலைபேசி இலக்கத்தையம் பதிவுசெய்து அனுப்புமாறும் கேட்டுக்கொள்கின்றோம்

Admin
www.weligamanews.com
Read more »

கிரிந்த பிரதேசத்தில் ஏற்பட்ட சிறு பதற்ற நிலை.. முஸ்லிம் வீடுகளுக்கும் சேதம். காரணம்


முஸ்லிம் இளைஞர்கள் சிலரது தவறின் காரணமாக (திஸ்ஸ மஹாராம) கிரிந்த பகுதியில்

இரு சமூகங்களுக்கிடையே சிறு சலனம் ஏற்பட்ட நிலையில் அங்கு தற்போது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று பெரும்பான்மை ஒருவருடன் ஏற்பட்ட சிறு பிரச்சினை கட்டுப்படுத்தப் பட்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்ட
நிலையில், இன்று முஸ்லிம் இளைஞர்கள் இருவர் சண்டை பிடித்த போது ஒருவர் மற்றவரை பியர் போத்தல் ஒன்றினால் வீசி அடித்த போது அது சென்று பண்சலை ஒன்றிலுள் விழுந்துள்ளது.

இதனை அடுத்து பெரும்பான்மையினர் பிரச்சினைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட இருவரும் ஊரை விட்டு ஓடி விட்டதாகவும், அவர்களை கேட்டு தாக்குதல் இடம்பெற்ற தாகவும் அங்கிருந்த ஒருவர் தெரிவிக்கின்றார்.

சில முஸ்லிம் வீடுகளும் தாக்கப்பட்ட நிலையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தற்போது நிலமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Read more »

கிரிந்த பிரதேசத்தில் ஏற்பட்ட சிறு பதற்ற நிலை.. வீடுகளுக்கும் சேதம்

முஸ்லிம் இளைஞர்கள் சிலரது தவறின் காரணமாக (திஸ்ஸ மஹாராம) கிரிந்த பகுதியில்
இரு சமூகங்களுக்கிடையே சிறு சலனம் ஏற்பட்ட நிலையில் அங்கு தற்போது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


சில வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


தற்போது நிலமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Read more »

மாத்தறை கிரிந்த பிரதேசத்தில் முஸ்லீம் வீடுகள் சில தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மாத்தறை கிரிந்த பிரதேசத்தில்
முஸ்லீம் வீடுகள் சில தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று சிங்கள முஸ்லீம் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதல் இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.

நேற்று இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சிறு கைகளப்பாக மாறி போலீஸ் மற்றும் விசேட அதிரடி படையினரின் தலையீட்டில் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது.

எனினும் இன்று முஸ்லீம் நபர் ஒருவர் இன்னொருவருக்கு வீசி எறிந்த போத்தல் விகாரை வளாகத்தில் விழுந்ததை அடுத்தே பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று மாலை வேளையில் அப்பிரதேசத்தில் உள்ள சில முஸ்லீம் வீடுகள் தாக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அங்கு படையினர் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் அங்கிருந்து செய்திகள் தெரிவிக்கின்றன.
Read more »

அரச ஊழியர்களின் சம்பளம் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானம்


அரச சேவையிலுள்ள ஊழியர்களுக்கு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 தும் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்கும் வகையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சம்பள முரண்பாட்டு விசாரணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த சம்பள அதிகரிப்பு இடம்பெற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, 2020 ஆம் ஆண்டு முதல் நிருவாக சேவையிலுள்ள அதிகாரியொருவரின் ஆரம்ப சம்பளம் 9587 ரூபாவினாலும், அமைச்சின் செயலாளர் ஒருவரின் ஆரம்ப சம்பளம் 23975 ரூபாவினாலும், சாதாரண அரச ஊழியர் ஒருவரின் சம்பளம் மூவாயிரம் ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. (மு)
Read more »

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 200 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய வாய்ப்பு.


எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் தென், சபரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் 200 மில்லி மீட்டர்
வரையில் கடும் மழை பொழிய கூடும் வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அந்த திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் மழை பெய்யும் வேளைகளில் ஆங்காங்கே இடிமுழக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுவதால் மின் உபகரணங்களை பயன்படுத்துதல் மற்றும் வயல் நிலங்களில் தொழிலில் ஈடுபடுதல், மரங்களுக்கு அருகில் ஒதுங்கியிருந்தல் ஆகிய நடவடிக்கைகளில் அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read more »

சீரற்ற காலநிலையினால் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 5600 பேர் பாதிப்பு


நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் ஆயிரத்து 426 குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரத்து 669 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மழையுடனான காலநிலையால் 326 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 323 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக 338 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 19 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை 69 சிறிய மற்றும் மத்தியதர வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக ஜின் கங்கை பெருக்கெடுத்து வருவதுடன், பத்தேகம பிரதேசத்தில் ஜின் கங்கையின் நீர்மட்டம் சற்று உயர்வடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதிக மழையுடனான காலநிலை காரணமாக மாத்தறை மாவட்டத்தின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(அ)

-தகவல் திணைக்களம்-
Read more »

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட மாநாடு வெலிகம நகரசபை மண்டபத்தில் நேற்று (22) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தலைமையில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட மாநாடு வெலிகம நகரசபை மண்டபத்தில் நேற்று (22)  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தலைமையில் நடைபெற்றது. 

தெற்கு மாகாண ஆளுநர் ஹேமல் குணசேகரவின் முழு மேற்பார்வையுடன் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

 மாநாட்டிற்கான SLFP அமைப்பாளர்  பொதுச் செயலாளர் தயசிறி ஜெயசேகர,  பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, ஆளுநர்கள் ஷான் விஜயலால் டி சில்வா மற்றும் சரத் ஏகநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குமார வெல்கம, லசந்தா அலகியவண்ணா, கேடர் கேடர் மஸ்தான், ஜங்காதன் ராமநாதன்  வீரகுமாரா திசனநாயக்க, மனோஜ் சிறிசேன, முன்னாள் முதல்வர்  சிறிசேனா, மாகாண கவுன்சிலர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 தெற்கு மாகாணத்தில் நேற்று பலத்த மழை பெய்த போதிலும், ஸ்ரீ.ல.சு.க.  கட்சி மாநாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Read more »

எதிர்வரும் 26, 27 திகதிகளில் அதிபர், ஆசிரியர் சுகயீன லீவு போராட்டம்; பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை.


(எஸ்.அஷ்ரப்கான்)
இலங்கையில் நாடளாவிய ரீதியாக எதிர்வரும் 26, 27 ஆம் திகதிகளில்
அதிபர் ஆசிரியர்கள் - சுகயீன லீவுப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இவ்விரு நாட்களும் அதிபர் ஆசிரியர்கள் சுகயீன லீவை அறிவித்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் - ஒன்றுபட்டு தமது உரிமைக்காக செயற்படவுள்ளனர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சுகயீன லீவை - சுகயீன லீவை எடுக்கும் நடைமுறையை பின்பற்றி திணைக்கள தலைவருக்கு கட்டாயம் அறிவித்தால் போதுமானது.

இந்த இரண்டு தினங்களிலும் - எவ்வித காரணங்களுக்காகவும் ஆசிரியர்களோ அதிபர்களோ எந்தவொரு அதிகாரிகளின் கட்டளைக்குப் பயந்தும், பணிந்தும் பாடசாலைக்கு செல்லவேண்டிய அவசியமில்லை.

இச் செயற்பாட்டின் முழுப்பொறுப்பையும் போராட்டத்தில் பங்கு கொள்ளும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து இலங்கை ஆசிரியர் சங்கம் ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் -
இரண்டு நாட்களும் பாடசாலை செயற்பாடுகளில் தடங்கல் ஏற்படுவதற்கு - தொடர்ச்சியாக எம்மை ஏமாற்றிவரும் இந்த அரசாங்கமே பொறுப்பெடுக்கவேண்டும். எமது நியாயமான தொழிற்சங்கப் போராட்டத்தைப் புரிந்து கொண்டு பெற்றோர்களும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஜோசப் ஸ்ராலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
நீண்டகாலமாக நிலவிவரும் அதிபர் , ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்த்து சம்பளத்தை அதிகரிக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் - போலியான வாக்குறுதிகளை வழங்கி அரசு தொடர்ச்சியாக எம்மை ஏமாற்றி வந்துள்ளது.

அரசியல் ரீதியாக நியமனங்களை வழங்கி கல்வித்துறையை சீரழித்து வருகின்றது.
ஆசிரியர் அதிபர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்த முயற்சிக்கிறது.
பிரிவெனா மற்றும் நன்கொடை பெறும் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத்திட்டத்தை வழங்கப் பின்னடிக்கிறது.


ஆசிரியர்களுக்கு தேவையற்ற அழுத்தங்களைப் பிரயோகித்து வருகிறது
தேசிய வருமானத்தில் கல்விக்கு 6% வீதத்தை ஒதுக்காமல் பெற்றோரிடம் பணம் அறவிட்டு வருகின்றது.
இவற்றிற்கு நாம் தீர்வுகாணவேண்டும்.
வெட்கக்கேடான வேதனத்தைப் பெற்றுவரும் அதிபர் ஆசிரியர்களாகிய நாம் - எமது உரிமைகளுடன் சேர்த்து இலங்கையில் தரமான கல்விக்கட்டமைப்பை உருவாக்கவும் -இலவசக் கல்வியைப் பாதுகாக்கவும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இந்த வகையில் -
அனைவரும் இணைந்து போராட்டம் வெற்றிபெற பலம்சேர்க்க வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
Read more »

வெலிகம யின் பல பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளுடன் 22 முஸ்லீம் இளைஞர்கள் கைது


ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 27 பேர் வெலிகம பொலிசாரால் நேற்று இரவு கைது கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடம்மிருந்து போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன

வெலிகமயின் பல பகுதிகளில் இருந்து நேற்று (5) குறித்த சந்தேகநபர்கள் , ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, வெலிகம போலீசார் தேரிவித்தனர்
குறித்த பகுதியில் போலீஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கபெற்ற தகவலை அடுத்தே சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட வெலிகம பொலிசாரால் விற்பனைக்காக ஐஸ் போதைப்பொருளை கொண்டு வந்த சந்தேகநபரையும் மேலும் அதனை பயன்படுத்தியவர்களையும் கைது செய்துள்ளனர்

இதில் வெலிகம பகுதியை சேர்ந்த 22 முஸ்லீம்கள் உற்பட ஐந்து சிங்களவர்களும் உள்ளடக்கமாக மொத்தம் 27 பேர் கைதாகினர்

கைப்பற்றப்பட்டுள்ள ஐஸ் போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Read more »

தென் மாகாணத்தில் அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவை ஆரம்பம்


நாளை மறுதினம் காலியில் திறப்பு
தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஒரு நாள் சேவை உட்பட சாதாரண சேவை வழங்கும் பிராந்திய தென் மாகாண அலுவலகம் முதற் தடவையாக திறந்துவைக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி.வியாணி குணதிலக்க தெரிவித்தார்.

நாளை மறுதினம் 6ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த சேவை அன்றைய தினம் பி.ப. 3 மணிக்கு (சுபவேளையில்) காலி, கடவத்சர பிரதேச செயலக கீழ்மாடியிலமைந்துள்ள கட்டடத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

பிராந்திய அலுவலக சேவை ஆரம்பிக்கப்பட்டதும் தென்மாகாணத்திலுள்ளவர்கள் இலகுவாக சாதாரண மற்றும் ஒருநாள் சேவையில்

அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும். அதேபோன்று நாடளாவிய ரீதியில் இருந்து வருபவர்கள் ஒருநாள் சேவையையும் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன், அடுத்தாண்டு குருநாகல், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களிலும் இந்தச் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ஆட்பதிவு செய்யும் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பீ.வியாணி குணதிலக்க தெரிவித்தார்.

Read more »