Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

19 மணிநேரம் தொடர்ந்து பயணித்து நியூயோர்க்கிலிருந்து சிட்னி சென்ற விமானம்

உலகில் நீண்ட தொலைவு பறக்கும் விமானம் நியூயோர்க் நகரிலிருந்து புறப்பட்டு அவுதிரேலியாவின் சிட்னி நகருக்கு இன்று காலை சென்றடைந்தது.

நியூயோர்க் நகரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 49 பேருடன் புறப்பட்ட குவான்டாஸ் நிறுவனத்தின் போயிங் 787-9 ரக விமானம் இடை நில்லாமல் பயணிக்கும் அளவுக்கு போதுமான எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்தது.

ஏறக்குறைய 16 ஆயிரம் கிலோ மீற்றர் தொலைவு பறக்கும் அளவுக்கு எரிபொருள் இருந்தது. இந்நிலையில் 19 மணிநேரம் 16 நிமிடங்கள் பறந்து இன்று காலை அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை விமானம் சென்றடைந்தது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஆலன் ஜோய்ஸ்,

உண்மையில் 19 மணிநேரத்துக்கும் மேலாக இடைநில்லாமல் விமானம் பறந்துள்ளது வரலாற்று நிகழ்வு. பயணிகளையும், விமானிகளையும் எவ்வாறு மேலாண்மை செய்வது என்பதை இதில் கற்றுக்கொண்டோம்.

விமானம் புறப்பட்டவுடன் பயணிகள் அனைவரும் தங்களின் கைக்கடிகாரத்தின் நேரத்தை சிட்னி நேரத்துக்கு மாற்றிவைத்தனர்.

பயணிகள், விமானியின் உடல்நிலை, மெலோட்டின் அளவு, மூளையின் அதிர்வலை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.

வழக்கமாக இரவு நேரத்தில் விமானம் புறப்பட்டவுடன் இரவு உணவு அளிக்கப்பட்டு பயணிகள் தூங்குவதற்கு அறிவுறுத்தப்படுவார்கள்.

ஆனால், இந்த விமானத்தில் இரவு உணவுக்குப் பதிலாக மதிய உணவு அளித்து, 6 மணிநேரம் விழித்திருக்கச் செய்து, அதன்பின் பயணிகளுக்கு இரவு உணவு அளித்து தூங்க அனுமதிக்கப்பட்டார்.

கிழக்கு அவுஸ்திரேலியாவில் இரவு வரும் அனைவரும் விழித்திருக்க வைத்து உணவு வழங்கப்பட்டது. 6 மணிநேரத்துக்குப்பின் அவர்களுக்கு கார்போ ஹைட்ரேட் உணவுகள் வழங்கப்பட்டு, வெளிச்சமான திரை, விளக்குகளைப் பார்க்காமல் தூங்குமாறு அறிவுறுத்தப்பட்டார்கள்.

விமானத்த இயக்குவதற்காக வழக்கமாக இரு விமானிகள் இருக்கும் நிலையில் இந்த விமானத்தில் 4 விமானிகள் பயணித்தனர். 4 விமானிகளும் மாறி, மாறி தங்கள் பணியைச் செய்தார்கள் என்றார்.

Read more »

புவியின் உயிர் வாழ்வை அழித்து விடுமா அமேசன் தீ?


பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் போல்சொனாரோ 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் பதவிக்கு வந்த பின்னர், மரங்களின் அழிவு உச்சத்தை எட்டியது. அமேசன் காடுகள் குறித்து பல்வேறு தகவல்களை நாம் கடந்து வந்திருப்போம். பாடநூல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் வரை அமேசன் தொடர்பான ஏதோ ஒன்று, நம் கண்ணில் தவறாமல் தென்படும். பல்வேறு சிறப்புகளைத் தன்னுள் கொண்டிருக்கும் அமேசன் மழைக் காடுகள் கடந்த 3வாரங்களாகப் பற்றியெரிந்து கொண்டிருக்கின்றன.

கோடை காலங்களில் கூட, அமேசன் மழைக்காடுகளில் அத்தனை எளிதில் தீ விபத்து ஏற்பட்டு விடாது. அங்கு நிலவி வரும் ஈரப்பதம் அதற்கு முக்கியமான காரணம். உலகின் மிகப் பெரிய காடாக அமேசன் அறியப்படுகிறது. சுமார் 5.5மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. லத்தீன் அமெரிக்காவின் சுமார் 40சதவீத பகுதியை இந்தக் காடு கொண்டுள்ளது.

மேலும் இந்த மழைக்காடுகள் சுமார் 9நாடுகளில் பரந்து விரிந்து இயற்கையான பசுமைப் போர்வையாக விரிந்திருக்கின்றன. பொலிவியா, பிரேசில், கொலம்பியா, ஈகுவேடார், பிரெஞ்ச், கயானா, பெரு, சுரிநேம், வெனிசூலா ஆகிய நாடுகளில் அமேசன் காடு படர்ந்து காணப்படுகிறது. 60சதவீத அமேசான் காடு பிரேசில் நாட்டில் இருக்கிறது. பிரேசிலில்தான் தற்போது காட்டுத் தீ கடுமையாகப் பரவி வருகிறது.

அமேசன் மழைக்காடுகளை பல்லுயிர் சரணாலயம் என்றும் அழைக்கிறார்கள். பூமியில் இருக்கும் இனங்களில் 4-இல் ஒரு பங்கை தன்னுள் கொண்டுள்ளது இந்த அமேசன். உலகில் அறியப்பட்ட பத்தில் ஒரு உயிரினம் அமேசன் மழைக்காடுகளில் உள்ளது. சுமார் 30,000வகையான செடிகள், 2,500வகையான மீன்கள், 1,500பறவைகள், 500பாலூட்டிகள், 550ஊர்வன மற்றும் 2.5மில்லியன் பூச்சிகள் இருப்பதாக Amazon Cooperation Treaty Organization அமைப்பு கூறுகிறது. கடந்த 20ஆண்டுகளில் மட்டும் 2,200புதிய தாவர இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகில் உள்ள அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒன்று இம்மழைக்காடுகளில் வசிக்கின்றன.

பலரும் அறிந்த அமேசானின் மற்றொரு பெயர் `பூமியின் நுரையீரல்’. உலகின் மொத்த ஒக்சிஜன் உற்பத்தில் சுமார் 20சதவீதத்துக்கும் மேலாக அமேசானில் இருந்து கிடைக்கிறது. மேலும் அதிக அளவில் காபனீரொட்சைட்டை உள்வாங்கிக் கொள்கிறது. அமேசன் ஆறு உலகின் மிக நீளமான ஆறு. இது சுமார் 6,900கிலோமீற்றர் ஓடுகிறது. இந்த அமேசன் நதி மற்றும் அதன் கிளை நதிகள் உலகின் மொத்த நன்னீரில் 20சதவீத நீரைத் தருவதாகப் புள்ளிவிரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த அடர்ந்த மழைக்காடுகளில் சுமார் 420பழங்குடிகளைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இதில் இந்திய பழங்குடியினரும் அடக்கம். அமேசானில் இருக்கும் இந்திய பழங்குடியினர் சுமார் 86மொழிகளை பேசுவதாக Amazon Cooperation Treaty Organization அமைப்பு கூறுகிறது. அமேசனில் இருகும் பெரிய பழங்குடியின இனமாக `டிகுனா’ இனம் அறியப்படுகிறது. சுமார் 40,000மக்கள் கொண்ட இந்தப் பழங்குடியினர் பிரேசில், பெரு, கொலம்பியா ஆகிய நாடுகளில் வசித்து வருகின்றனர்.

இத்தனை பெரிய அமேசான் மழைக்காடு தற்போது மரங்கள் வெட்டப்படுவதாலும் பெரும் காட்டுத் தீ சம்பவங்களாலும் பெரும் அழிவைச் சந்தித்து வருகிறது. உலகில் இத்தனை உயிர்களை வாழவைக்கும் அமேசன், கடந்த 50ஆண்டுகளில் சுமார் 20சதவீதம் அளவுக்கு அழிக்கப்பட்டுள்ளது என்று சொல்வதற்கு காரணம் பெரும்பாலான காட்டுத்தீ, மனிதர்களால் ஏற்படுத்தப்படுவதுதான்.

தற்போதைய பிரேசிலின் பிரதமர் ஜெயர் போல்சொனாரோ 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் பதவிக்கு வந்த பின்னர், மரங்கள் அழிவு உச்சத்தை எட்டியதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூலையில் மட்டும் பன்மடங்கு அதிகமாகக் காடு அழிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் தரும் தகவலின்படி கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 2,254சதுர கிலோமீற்றர் காடு அழிப்பு அரங்கேறியுள்ளது. அதாவது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 278சதவீதம் அதிகம்.

மேலும், விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தின் புள்ளிவிபரத்தின்படி, பிரேசிலில் இந்த ஆண்டு தற்போது வரை 73,000காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் பெரும்பாலானவை அமேசனில்தான் பதிவாகியுள்ளன. இதுவே 2018-ம் ஆண்டு 39,759ஆக உள்ளது. எத்தனை வேகமாக அமேசான் அழிக்கப்பட்டு வருகிறது என்பதற்கு இது ஒன்றே சான்றாகும்.இதற்குப் பெரும்பாலும் சொல்லப்படும் காரணங்கள், ஒன்று வளர்ச்சி, மற்றொன்று பெரு விவசாயிகள்.

பிரேசில் அரசு தொடர்ச்சியாக வளர்ச்சி என்ற பெயரில் காடழிப்பு சம்பவங்களில் ஈடுபடுவதாக மற்ற நாடுகள் குற்றம்சாட்டி வருவதுடன் பிரேசில் அரசுக்கு வழங்கிய நிதி உதவிகளையும் நிறுத்தப் போவதாக ஜெர்மனி,​ேநார்வே ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

`அமேசன் காட்டில் தீ என்பது பிரேசிலின் பிரச்சினை மட்டும் கிடையாது. ஒட்டுமொத்த உலகின் பிரச்சினை' எனக் கவலைதோய்ந்த குரலில் பேசுகின்றனர் சூழலியல் ஆர்வலர்கள். கடந்த சில நாள்களாகவே உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது அமேசன் காட்டுத்தீ. எவ்வளவு பெரிய காட்டுத்தீயிலிருந்தும் மீண்டு வரும் அபார வலிமை படைத்தவை காடுகள். ஆனால் அரசியல் தீயிலும், தனிமனித பேராசை தீயிலும் எரிந்து கொண்டிருக்கும் இந்த காடுகள் மீண்டுவருமா என்பது சந்தேகம்.

உலகின் மிகப் பெரிய மழைக்காடுகளுக்குள் நடந்து கொண்டிருப்பதைச் சாதாரண இயற்கை நிகழ்வாகவோ விபத்தாகவோ கடந்து விட முடியாது. இதற்குபின் இருக்கும் அரசியல் மிகப் பெரியது. இந்தப் பாதிப்புகளுக்கு பெரும் காரணமாகக் கூறப்படுபவர் தற்போதைய பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சொனாரோ. இப்போது இந்த நெருப்பு அணைக்கப்பட்டு விட்டாலும் கூட இவரது அரசியல் கொள்கைகள் நிச்சயம் அமேசன் காடுகளை ஒருவழி செய்துவிடும் என்கின்றனர் சூழலியலாளர்கள்.

2018ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்திலிருந்தே, அமேசான் காடுகளின் வளங்களை வணிகமாக்கி நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்போம் என்பது அவரது முக்கிய கோஷமாக இருந்தது. அப்போதுதான் பிரேசில் பொருளாதாரம் சரிவிலிருந்து மீளத் தொடங்கியிருந்தது. விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் முதல் எண்ணெய் எடுக்கக் காத்திருக்கும் பெரும் முதலாளிகள் எனப் பலரும் இந்தக் கொள்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். பிரேசிலிருந்து பெருமளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி நடக்கிறது. பெருமளவில் இந்த மாடுகளை வளர்ப்பதற்கான மேய்த்தல் நிலங்களாக அமேசன் அவர்களுக்கு தேவைப்பட்டது. இப்படியான ஆசைகளிலிருந்துதான் பிரச்சினை தொடங்குகிறது.

இது இயற்கையாக நடந்ததுதான் என்கிறார் பிரேசில் நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் ரிகார்டோ சேல்ஸ். ஆனால், இதை முற்றிலுமாக மறுக்கின்றனர் சூழலியலாளர்கள். பொதுவாக இந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம்தான். ஆனால், இது மனித நடவடிக்கைகளால் நடந்ததாகவே தெரிகிறது. எப்போதையும்விட இந்த வருடம் அதிக எண்ணிக்கையில் இந்த காட்டுத்தீ பாதிப்புகள் காணப்படுகின்றன. இதைப் பிரேசில் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையமே (INPE) உறுதிசெய்கிறது. இந்தக் காட்டுத்தீ பாதிப்புகள் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு 84%அதிகம் என்கிறது அந்த அமைப்பு. பொல்சொனாரோ ஆட்சிக்கு வந்த பிறகு பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டிருப்பதையும் இந்த அமைப்பு கடந்த மாதம் சுட்டிக்காட்டியது.

இந்த அமைப்பின் இயக்குநரான ரிக்கார்டோ கால்வோவை பணிநீக்கம் செய்தது பிரேசில் அரசு. இதைப்போன்ற தவறான தகவல்களால் உலக அரங்கில் பிரேசிலுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று இதற்கு விளக்கம் தெரிவித்தார் பொல்சொனேரோ.

முதலில் இந்தத் தீயை அணைக்க போதிய சக்தி எங்களிடம் இல்லை, அமேசான் மீது எங்களுக்கும் அக்கறை இருக்கிறது என கைவிரித்தார் பொல்சொனேரோ. மேலும், தன் மேல் வெறுப்புணர்வு கொண்ட தொண்டர் நிறுவனங்களின் வேலைதான் இது என்றும் குற்றம்சாட்டினார்.

ஆனால், நேரில் களமிறங்கிய ஊடகவியாளர்கள் பெரும்பாலும் பொல்சொனேரோ ஆதரவு விவசாயிகள் மற்றும் முதலாளிகள்தான் இதற்குக் காரணம் என்று தெரிவிக்கின்றனர். சிறிய பகுதிகளை கைவசப்படுத்திக்கொள்ள வைக்கப்பட்ட சிறிய நெருப்புகள் கட்டுக்கடங்காமல் இப்போது பெரும் நெருப்பாக எரிகிறது.
Read more »

அமெரிக்காவில் குடியுரிமை சட்டத்தில் மேலும் கட்டுப்பாடு


அமெரிக்க இராணுவத்துக்காக அயல்நாடுகளில் பணியாற்றுபவர்கள் அந்நாடுகளில் பெற்றுக் கொள்ளும் குழந்தைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்குவதில் பல கட்டுப்பாடுகளை விதிக்க டிரம்பின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவில் குடியுரிமை பெற்று 5 ஆண்டுகள் வசித்தவரின் குழந்தையும், அமெரிக்க அரசு பணியாளர்களும், அமெரிக்க இராணுவத்தினரும் அயல்நாடுகளில் பணியாற்றும்போது அந்த நாட்டில் குழந்தைபெற்றால், அந்தக் குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் சிக்கல் இல்லாமல் இருந்தது.

பெற்றோரில் ஒருவரின் அமெரிக்கக் குடியுரிமையைக் காண்பித்து குழந்தைக்கு குடியுரிமை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், இந்த நடைமுறையை ஒக்டோபர் 29 முதல் மாற்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

கடிதம் மூலம் தானாகவே குடியுரிமை பெறும் வகையில் அல்லாமல் அத்தகைய வெளிநாடுகளில் தங்கியிருக்கும் அமெரிக்க பணியாளர், இராணுவத்தினர், வழக்கமாக பிறர் விண்ணப்பிப்பது போல் குடியுரிமைக்கு விண்ணப்பித்து, காத்திருந்து பெற்றுக் கொள்ளலாம். இது இராணுவ வீரர்கள் ஏற்கனவே சந்தித்து வரும் பல பிரச்சினைகளில், அவர்களுக்கு மேலும் கவலை தரக்கூடிய பிரச்சினை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.
Read more »

அமெரிக்காவில் பல்கலைக்கழகத்துக்கு அருகில் துப்பாக்கிச் சூடு, 2 பேர் பலி


அமெரிக்காவின் தெற்கு பகுதியிலுள்ள அலபாமா மாகாண தலைநகரான மாட்கோமரி நகரில் அமைந்துள்ள பல்கலைகழகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

மர்ம நபர் ஒருவர் பொதுமக்களின் மீது திடீரென துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இந்த தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பி சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடிவருவதாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. (மு)
Read more »

காணாமல் போய், தானாக திரும்பி வந்த கப்பல்! 90 வருடங்களுக்கு பின்னர் அதிசயம்


1925 ஆம் ஆண்டு, நவம்பர் 29 ஆம் திகதி, தெற்கு கரோலினாவின் சார்ள்ஸ்டனில் இருந்து கியூபாவின் ஹவானாவை நோக்கி பயணிக்கத் தொடங்கியது -எஸ்.எஸ்.கொடபக்சி (SS Cotopaxi) என்ற கப்பல். அதாவது 'சாத்தான் முக்கோணம்' என்று அழைக்கப்படும் பெர்முடா முக்கோணத்தின் வழியாகச் சென்றது எஸ்.எஸ் கொடபக்சி.

பெர்முடாவில் இருந்து மியாமி, பின் ஃப்ளோரிடாவில் இருந்து புவேர்ட்டோ, ரிக்கோவின் சாண் ஜுவன் ஆகிய பிரதேசங்களை இணைத்தால் உண்டாகும் பகுதி தான் பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle). மர்மமான சாத்தான் முக்கோணத்தின் ஒரு புள்ளியான ஃப்ளோரிடாவை கடந்துதான் எஸ்.எஸ். கொடபக்சி ஹவானாவை அடைய முடியும்.

ஆனால், அந்தக் கப்பல் ஹவானாவை சென்றடையவில்லை. புறப்பட்ட இரண்டாவது நாளிலேயே எஸ்.எஸ். கொடபக்சி காணமல் போனது, அதன் பின்பு அந்தக் கப்பல் பற்றிய தகவலே இல்லை.அக்கப்பல் மட்டுமன்றி, 2340 தொன் எடையுள்ள நிலக்கரியுடன் கப்டன் டபிள்யூ.ஜே.மெயர் தலைமையில் பயணித்த 32 மாலுமிகள் பற்றிய எந்த விதமான தகவலும் இல்லை.

சமீபத்தில் கியூபா கடலோர காவல் படையினர், தடை செய்யப்பட்ட இராணுவ பகுதியின் வழியாக ஒரு கப்பல் தீவை நோக்கி வருவதைக் கண்டுள்ளனர். அதைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்து, பயன் அளிக்காததைத் தொடர்ந்து, அதன் அருகே சென்று பார்த்த போதுதான் அது 90 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன எஸ்.எஸ். கொடபக்சி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து பெர்முடா முக்கோணத்தில் காணாமல் போன மிகப் பெரிய கப்பல்களில் ஒன்றான எஸ்.எஸ். கொடபக்சி, ஒரு நாடோடி போல இத்தனை ஆண்டுகளாக பெர்முடா முக்கோணத்துடன் இணைந்தே கிடந்துள்ளது என்றும் திரும்பி வந்த கப்பலில் ஒருவரும் இல்லை என்றும், அந்தக் கப்பல் கைவிடப்பட்ட நிலையில்தான் இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அக்கப்பலை ஆராய்ந்து பார்த்ததில் கப்டனின் ​ெலாக் புக் (Log book) எனப்படும் குறிப்பு எழுதும் நோட்டுப் புத்தகம் கிடைத்துள்ளது. ஆனால், அந்த குறிப்புப் புத்தகத்தில் கடந்த 90 ஆண்டுகளாக எஸ்.எஸ். கொடபக்சி கப்பலுக்கும், அதில் பயணித்த 33 பேருக்கும் என்ன நடந்தது என்பது பற்றிய ஒரு தகவலும் கிடைக்கப் பெறவில்லை.கப்டனின் குறிப்புப் புத்தகம் உண்மையானது தான் என்றும், சரியாக 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் திகதி முதல் கப்டன் கப்பல் பயணம் பற்றிய குறிப்பு எழுதுவதை நிறுத்திக் கொண்டுள்ளார் என்றும் கியூபா நாட்டு வல்லுநரான ரோடோல்போ சல்வடோர் க்ருஸ் நம்புகிறார்.

க்யூபா நாட்டு அரசாங்கம்,இக்கப்பல் காணமல் போனது ஏன்?திரும்பி கிடைக்கப் பெற்றது எப்படி? என்பது பற்றிய விசாரணையை தொடங்கியுள்ளது.

இதுபோன்று கப்பல்கள் காணமல்போகும் நிகழ்வுகள் வணிக ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தும், மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்க இக்கப்பல் மீதான ஆய்வு மிகவும் அவசியமென்று கியூபா நாட்டு அதிகாரிகள் கருத்துக் கூறியுள்ளனர்.

பெர்முடா முக்கோணத்தில் உள்ள மர்மங்களும், அங்கு ஏன் அறிவியலும் தொழில்நுட்பமும் செயலிழந்து போகின்றன என்பதும் இதுவரை கண்டறியப்படாதவையாகவே உள்ளன.
Read more »

233 பயணிகளுடன் விமானம் வானில் பறக்கும் போது பறவை மோதியதால் விமானத்தில் ஏற்பட்ட தொழிநுற்ப கோளாறு . சோள பயிர்செய்கையில் தரையிறக்கி ஏற்பட இருந்த பாரிய விபத்து தடுக்கபட்டது

ரஷ்யாவின் சுகோவ்ஸ்கி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 233 பேருடன் பயணித்த போயிங் 321 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன்  என்ஜினில் பறவை மோதியதில் கடுமையான தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

 விமானம் ஜுகோவ்ஸ்கி சர்வதேச விமான நிலையத்திற்கு விமானத்தை திரும்பப் பெற முயன்றார், ஆனால் அவசரநிலை ஏற்பட்டதால், அவர் அருகிலுள்ள சோள பண்ணையில் அவசர அவசரமாக தரையிறக்கியுள்ளார்.

 இந்த விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர், மற்றவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று அந்த நாட்டு செய்தி ஊடகம்  தெரிவித்துள்ளது.

 அவசர தரையிறக்கம் செய்யாவிட்டால் விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கக்கூடும், மேலும் விமானியின் புத்தி கூர்மை ஒரு பெரிய உயிர் இழப்பைத் தடுத்திருந்தது

 2009 ஆம் ஆண்டில் ஒரு விமானம் அமெரிக்க ஒரு விமானம்  பறவை  இயந்திரத்துடன் மோதிய பின்னர் விமானத்துடன் ஹட்சன் ஆற்றில்  தரையிறக்கப்பட்டது இந்த சம்பவத்திற்கு ஒத்தான  சம்பவம் இதுதான் என்று சில வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.






Read more »

பாகிஸ்தானில் விமான விபத்து; 18 பேர் உயிரிழப்


பாகிஸ்தானில் இராணுவத்தினருக்கு சொந்தமான சிறிய ரக விமானமொன்று விபத்திற்குள்ளானதில், 18 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான், ராவல்பிண்டிக்கு அருகில் மக்கள் குடியிருப்பு பகுதியிலேயே குறித்த விமானம் இன்று அதிகாலை விபத்திற்குள்ளானதாக, வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்விமானம் விபத்திற்குள்ளாக முன்னதாக வெடித்துள்ளதாக, சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் 05 விமானப் பணியாளர்கள் மற்றும் 13 பொதுமக்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.
Read more »

பாகிஸ்தானில் விமான விபத்து; 18 பேர் உயிரிழப்


பாகிஸ்தானில் இராணுவத்தினருக்கு சொந்தமான சிறிய ரக விமானமொன்று விபத்திற்குள்ளானதில், 18 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான், ராவல்பிண்டிக்கு அருகில் மக்கள் குடியிருப்பு பகுதியிலேயே குறித்த விமானம் இன்று அதிகாலை விபத்திற்குள்ளானதாக, வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்விமானம் விபத்திற்குள்ளாக முன்னதாக வெடித்துள்ளதாக, சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் 05 விமானப் பணியாளர்கள் மற்றும் 13 பொதுமக்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.
Read more »

பாகிஸ்தானில் சுமார் 1000 வருடம் பழமை வாய்ந்த இந்து கோவிலை திறக்க பாகிஸ்தான் பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார்.



பாகிஸ்தானின் சியால்கோட்டில் உள்ள 1000 வருடம் பழமைவாந்த இந்து கோவிலின் சுத்திகரிப்பு பணிகள் மற்றும் புணர்நிர்மான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமென பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் 72 ஆண்டுகளுக்கு முன் பூட்டப்பட்ட கோவில் தற்போது திறக்கபடவுள்ளது.

சர்தார் தேஜா சிங் என்பவரால் கட்டப்பட்ட இவ் ஆலயம் பிரிவினையின் போது மூடப்பட்டது.

பின்னர் 1992 இல் பாபர் மசூதி இடிப்பின் நிகழ்ந்த கலவரத்தில் இக்கோவில் தாக்கப்பட்டது.

அதன் பிறகு சியால்கோட்டில் உள்ள இந்துக்கள் இக்கோவிலுக்கு செல்வதை தவிர்த்துவிட்டனர். தற்போது பிரதமர் இம்ரான்கானின் முயற்சியால் மீண்டும் இக்கோவிலின் பராமரிப்பு பணிகள் தொடங்கி விரைவில் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Read more »

பாகிஸ்தானில் சுமார் 1000 வருடம் பழமை வாய்ந்த இந்து கோவிலை திறக்க பாகிஸ்தான் பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார்.



பாகிஸ்தானின் சியால்கோட்டில் உள்ள 1000 வருடம் பழமைவாந்த இந்து கோவிலின் சுத்திகரிப்பு பணிகள் மற்றும் புணர்நிர்மான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமென பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் 72 ஆண்டுகளுக்கு முன் பூட்டப்பட்ட கோவில் தற்போது திறக்கபடவுள்ளது.

சர்தார் தேஜா சிங் என்பவரால் கட்டப்பட்ட இவ் ஆலயம் பிரிவினையின் போது மூடப்பட்டது.

பின்னர் 1992 இல் பாபர் மசூதி இடிப்பின் நிகழ்ந்த கலவரத்தில் இக்கோவில் தாக்கப்பட்டது.

அதன் பிறகு சியால்கோட்டில் உள்ள இந்துக்கள் இக்கோவிலுக்கு செல்வதை தவிர்த்துவிட்டனர். தற்போது பிரதமர் இம்ரான்கானின் முயற்சியால் மீண்டும் இக்கோவிலின் பராமரிப்பு பணிகள் தொடங்கி விரைவில் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Read more »

இராணுவ சூனியப் பகுதிக்குள் இரகசியமாக அமேரிக்கா கொரியா ஒரு சந்திப்பு!


அடிக்கடி அணுஆயுத சோதனைகளை நடத்தியும், அணுஆயுதப் போரை ஆரம்பிக்கப் போவதாக அச்சுறுத்தியும் வரும் வட கொரியா தனது நிலைப்பாட்டில் மிகப் பெரிய மாற்றங்களை செய்வதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. இந்நிலையில் பல ஆண்டு காலமாக நிலவி வரும் இந்தப் பிரச்சினை குறித்த அடிப்படை விடயங்கள் பற்றி ஆராய்வது இங்கு முக்கியம்.
வட கொரியா அணு ஆயுதங்களை விரும்புகிறது.இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு கொரிய தீபகற்பம் இரண்டாகப் பிரிந்தது. கம்யூனிச நாடான வட கொரியா ஸ்டாலின் உருவாக்கிய சர்வாதிகார அமைப்பை ஏற்றுக் கொண்டு கட்டமைக்கப்பட்டது.உலக மேடையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தனது நாட்டை அழிக்க நினைக்கும் மற்ற உலக நாடுகளிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்கான ஒரே வழி அணுஆயுதங்கள்தான் என்று அந்நாடு கூறுகிறது.அணு ஆயுதத் தாக்குதலை வட கொரியாவால் நடத்த முடியுமா என்பது அடுத்த கேள்வி.
ஒருவேளை நடத்தலாம், ஆனால் வாய்ப்பு இல்லை.வட கொரியா இதுவரை ஆறு அணுசக்தி தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதில் ஒன்று ஐதரசன் குண்டு சோதனை என்று அது கூறுகிறது.
தொலைதூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணையில் பொருத்தக் கூடிய அளவுக்கு சிறிய ரக அணுகுண்டை உருவாக்கியுள்ளதாக வட கொரியா கூறினாலும் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
வட கொரியாவிலிருந்து அமெரிக்காவைத் தாக்கும் ​ெபாலிஸ்டிக் ரக ஏவுகணையையும் அந்நாடு கொண்டுள்ளதாக வல்லுநர்கள் நம்புகின்றனர். வட கொரியாவின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்றவை பலவிதமான தடைகளை விதித்துள்ளன.
தென் கொரியா மற்றும் ஜப்பானைக் குறி வைத்தே வட கொரியா தனது ஏவுகணைகளைத் தயாரிக்கிறது. வட கொரியாவின் தற்காப்பு தாக்குதல் பேரழிவை உருவாக்கும் பதிலடியை உண்டாக்கலாம். அதன் காரணமாக எண்ணற்ற வட கொரியர்கள் உயிரிழக்க நேரிடலாம்.
ஆசிய கண்டத்தின் மிகப் பெரிய சக்தியாக விளங்கும் சீனா கொரிய நாடுகளுக்கு இடையே நிலவும் சூழ்நிலையை எண்ணி கவலையடைந்துள்ளது. அதாவது, கொரிய நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏதாவது ஏற்பட்டு இரு கொரிய நாடுகளும் இணையும் பட்சத்தில், தற்போது தென் கொரியாவில் இருக்கும் அமெரிக்கப் படைகள் தனது எல்லைப் பகுதியை நோக்கி வரக் கூடும் என்று சீனா நினைக்கிறது.
இதற்கு முன்பு நடந்த ஆயுதக் குறைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் தோல்வியையே சந்தித்துள்ளன.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தையை நடத்திய வட கொரியா, அதன் பிறகு தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்றது. அதன் பின்னர், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு தாங்கள் தயார் என்று வட கொரியா விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தாங்கள் அணுஆயுத குறைப்பை உறுதி செய்யும் நடவடிக்கைளை ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.
ஒரு வருடத்தில் மூன்றாவது சந்திப்பு:
இதேவேளை வட மற்றும் தென் கொரியாவின் எல்லையில் இருக்கும் இராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் டொனால்ட் ட்ரம்ப் வடகொரிய அதிபர் கிம்மை சந்தித்துள்ளார்.
இராணுவம் விலக்கப்பட்ட இந்தப் பகுதியில் நடைபெற்ற சந்திப்புக்கு, ட்விட்டரில் திடீரென கிம்மை சந்திக்க டிரம்ப் அழைப்பு விடுத்தமையே காரணமாகும்.
"அமைதிக்காக அவர்கள் இருவரும் கைக்குலுக்குவர்" என தென் கொரிய அதிபர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வடகொரியா எந்த ஒரு கருத்தும் முன்னதாகத் தெரிவிக்கவில்லை. வடகொரியா அணு ஆயுதப் பயன்பாட்டை கைவிடுத்தல் குறித்ததான நின்று போன பேச்சுவார்த்தை இந்த சந்திப்பின் மூலமாக மீண்டும் தொடரும் என நம்பப்படுகிறது.
ஒரே வருடத்தில் ட்ரம்பும் கிம்மும் மூன்றாவது முறையாக சந்தித்துக் கொண்டுள்ளனர்.ட்விட்டரில் ட்ரம்ப் விடுத்த அழைப்பை "சுவாரஸ்யமானது" என வடகொரியா தெரிவித்திருந்தது.
முன்னதாக தென்கொரிய தலைநகர் சோலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கிம்மிற்கும் தனக்கும் இடையே நல்லதுதொரு உறவு வளர்ந்திருப்பதாகவும், அவரை சந்திக்க ஆர்வமாக உள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
Read more »

பேஸ்புக்கின் மின்னிலக்க நாணயம் விரைவில் அறிமுகம்


பேஸ்புக் நிறுவனம் லிப்ரா எனும் புதிய மின்னிலக்க நாணயத்தை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.

நவீன மின்னிலக்கச் சாதனங்களின் மூலம் மலிவுக் கட்டணத்தில் உலக அளவில் பரிவர்த்தனையை எளிமையாக்குவது அதன் நோக்கமாகும். லிப்ரா, உலகளாவிய புதிய நாணயமாக திகழும் என்று கூறப்படுகிறது.

போஸ்புக் நிறுவனம் அடுத்த ஆண்டு அதை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது

நிதிச் சேவை வழங்கும் லாப நோக்கமற்ற அமைப்புகள், இணைய வர்த்தக நிறுவனங்கள் உட்பட சுமார் 25 பங்காளித்துவ அமைப்புகள் அதில் பங்கெடுத்துள்ளன.

மின்னிலக்க நாணயத்தைச் சேமிக்கவும் செலவிடவும் பரிவர்த்தனை செய்யவும் ஏதுவாக கலிப்ரா என்ற மின்னிலக்க பணப்பையையும் பேஸ்புக் உருவாக்கியுள்ளது.

அந்த நிறுவனத்தின் தகவல் பரிமாற்றச் செயலிகளான மசெஞ்சர், வட்ஸப் தளங்களுடன் கலிப்ரா இணைக்கப்படும். குறுஞ்செய்தி அனுப்பவது எவ்வளவு இலகுவானதோ, அந்த அளவுக்கு பணத்தை சேமிப்பது, அனுப்புவது மற்றும் செலவு செய்வதை இது இலகுவாக்கும்.

உலகெங்கும் வங்கி கணக்கு இல்லாத 170 கோடி மக்கள் மற்றும் அவர்கள் பணப் பரிமாற்றம் மேற்கொள்ளச் செய்யும் செலவுகள் ஆகியவை பற்றி இந்த திட்டம் பற்றிய அறிக்கையில் பேஸ்புக் விபரித்துள்ளது
Read more »

ஐ.எஸ் பெண் உறுப்பினருக்கு ஈராக்கில் 15 ஆண்டுகள் சிறை


ஈராக்கில் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஐ.எஸ் பெண் உறுப்பினருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பெண் ஐ.எஸ்ஸில் உறுப்பினராக உள்ளவரை திருமணம் செய்துள்ளார். இதில் அந்த நபர் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். அப்பெண் குறித்த கூடுதல் தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஈராக் நீதிமன்றம் அப்பெண்ணுக்கு 15 ஆண்டுக்கு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

ஈராக் நீதிமன்றம் இந்த வாரம் பத்திற்கும் மேற்பட்ட ஐ.எஸ் உறுப்பினர்களுக்கு மரணத் தண்டனை விதித்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈராக் ஐ.எஸ் இயக்கம் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்புடைய சுமார் 19,000 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இதில் சுமார் 3,000 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக ஏ.பி செய்தி நிறுவனம் கடந்த ஆண்டு செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Read more »

ஹுவாய் நிர்வாணம் அமெரிக்கா மீது வழக்கு

ஹுவாவி உற்பத்திகளை பயன்படுத்துவதற்கு அமேரிக்கா விதித்திருக்கும் தடைக்கு எதிராக அந்த தகவல் தொடர்பாடல் நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது.

மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருக்கும் ஹுவாவி, தனது உற்பத்திகள் மீது கட்டுப்பாடு கொண்டுவருவதற்கு அமெரிக்க பாராளுமன்றம் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

சுருக்கமான தீர்ப்பு ஒன்றுக்காக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த ஹுவாவி, இந்த வழக்கை தொடர தகுதியுள்ளதா என்று நீதிமன்றத்திடம் வரைவான தீர்ப்பு ஒன்றைக் கேட்டுள்ளது. “ஹுவாவி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்பதற்கு அமெரிக்க அரசு எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. இங்கு துப்பாக்கியும் இல்லை புகையும் இல்லை.

ஊகங்கள் மாத்திரமே உள்ளன” என்று ஹுவாவியின் தலைமை சட்ட அதிகாரி சொங் லியுபிங் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.


அமெரிக்க அரசியல்வாதிகள் எம்மை வர்த்தகத்தில் இருந்து வெளியேற்ற விரும்புகின்றனர் என்று தெற்கு சீன நகரான சென்சனில் உள்ள ஹுவாவி தலைமையகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது லியுபிங் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்குள் தனது உற்பத்திகளை தடுக்கும் நிறைவேற்று உத்தரவு ஒன்றுக்கும் ஹுவாவி நிறுவனம் முகம்கொடுத்துள்ளது. இதனால் அந்த நிறுவனத்தின் ஸ்மாபார்ட்போர்ன் ஆண்ட்ரோய்ட் இயங்குதளத்தின் வசதிகளை கூகுள் நிறுவனம் நிறுத்தியது. எனினும் இந்தத் தடை 90 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு வலையமைப்பு உபகரண வழங்குநராகவும் இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போர்ன் உற்பத்தியாளராகவும் இருக்கும் ஹுவாவி, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போரில் மையப் புள்ளியாக மாறியுள்ளது.

ஹுவாவி அமைப்புகளை சீனா வேவுபார்க்க பயன்படுத்தப்படலாம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டுவதோடு அதனை ஹுவாவி தொடர்ந்து மறுத்து வருகிறது.
Read more »

தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் கமல் மீது காலணி வீச்சு


மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் நடிகர் கமல்ஹாசன் மீது செருப்பு வீசப்பட்டுள்ளது. செருப்பு வீசிய நபரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.




Read more »

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!


பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள தீவில் இன்று (செவ்வாய்க்கிழமை) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று மாலை இடம்பெற்ற இந்த நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7.5 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, பப்புவா நியூ கினியா மற்றும் அருகாமையில் உள்ள சொலோமன் (Solomon Island) தீவு ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக உடனடியாக தகவல் எதுவும் வெளியாகாவில்லை.

அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்துவரும் பப்புவா நியூ கினியாவில், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் நூற்றுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்கு
Read more »

கத்தாரில் ரமழான் மாதம் 6ம் திகதி ஆரம்பமாகும். - உத்தியோக பூர்வ அறிவி்ப்பு


நாளை மறுநாள் திங்கட்கிழமை, மே 6, புனித மாதமான ரமழானின் முதல் நாளாகும் என்பதாக கத்தாரின் Awqaf மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பானது, Awqaf மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சில், ஷேக் தாக்கில் அல்-ஷாமாரி தலைமையிலான குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது
Read more »

சுமார் 150 பயணிகளுடன் பயணித்த 'போயிங் 737' விமானம் ஆற்றில் விழுந்து விபத்து.


அமெரிக்காவின் புளோரிடா ஆற்றில் போயிங் 737 விமானம் ஆற்றில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

சுமார் 150 பயணிகளுடன் பயணித்த போயிங் விமானம் தரை இறக்கும்போது கட்டுப்பாட்டை திடீரென இழந்து புளோரிடா ஆற்றில் விழுந்தது.

விமானம் ஆற்றில் விழுந்ததால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை, இருவர் காயம் என என்று ஜான்சன்வில்லே விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேஷியா, எத்தியோப்பியா நாடுகளில் பயணித்த போயிங் 737 விமானங்கள் தொடர்ச்சியாக விபத்துக்குள்ளாயின. இதனால் அடிக்கடி விபத்துக்குள்ளாவதால் இந்தியா ,சீனா, உள்ளிட்ட 8 நாடுகளில் போயிங்கை பயன்படுத்த தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.



Read more »

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பெண் பலி; 46 பேர் காயம்

வெனிசூலாவில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தினால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


மேலும், இந்த மோதலில் 46 பேர் காயமடைந்தனர்.
இது குறித்துடுவிட்டர் வலைதளத்தில் அந்த நாட்டின் தன்னார்வ அமைப்பான வெனிசூலா சமூக மோதல் கண்காணிப்புக் குழு வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

ஜனாதிபதி மதுரோவுக்கு எதிராக தலைநகர் கராகஸில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில், ஜிருபித் ரெளஸியோ என்ற 27 வயது பெண்ணுக்கு தலையில் குண்டு பாய்ந்தது. அதையடுத்து, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இந்த மோதலின்போது 46 பேர் காயமடைந்ததாக மனித உரிமை மற்றும் வைத்திய சேவை அமைப்புகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Read more »

சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்க செய்து பயங்கரவாதிகள் தற்கொலை

பங்காளதேச தலைநகர் டாக்காவில் பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் நடந்த சண்டையில், இரு பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.



டாக்காவிற்கு அருகே முகமத்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக அந்நாட்டு உளவு பிரிவின் தகவலுக்கு அமைய பயங்கரவாத தடுப்பு பிரிவு படை அங்கு சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதை அறிந்து, உடனடியாக அப்பகுதியில் இருந்த மக்களை வெளியேற்றி, அவ்வீட்டை சுற்றி வளைத்தனர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இறுதியில், பயங்கரவாதிகள் தாங்கள் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர்.

இதில் அவர்கள் உடல் சிதறி பலியாகினர். பயங்கரவாதிகள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அவருடைய மனைவியை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து, சிறப்பு படைப்பிரிவு அதிகாரி தெரிவித்ததாவது,

அவர்கள் எந்த பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளனர்.

இதனால் சுற்றியிருந்த பகுதிகளும் சேதம் அடைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறோம், என்றார்.

ஜூலை, 2016-ல் டாக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடைபெற்ற அதிரடி சோதனையில் ஐ.எஸ்., பயங்கரவாத இயக்க ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் பலர் கைது செய்யப்பட்டனர். 100க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.
Read more »