வாக்குச்சீட்டை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவோருக்கு மூன்று வருட சிறை


தபால் மூல வாக்களிப்பின் போது வாக்குச் சீட்டில் புள்ளடியிடுவதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடும் அரச அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இன்று (31) தேர்தல் செயலகத்தில் இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தற்பொழுது தபால் மூல வாக்களிப்பின் போது வாக்களிப்பை புகைப்படம் எடுத்து பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தரவேற்றம் செய்வது முற்றுமுழுதாக தடை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு செயற்படும் ஊழியர்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் குற்றமிழைத்தவராக கருதப்படும் சந்தர்ப்பத்தில் 3 வருட கால சிறைத்தண்டணை விதிக்கப்படும் எனவும் இதற்கு உதவி ஒத்தாசை வழங்குவோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read more »

ஒவ்வொரு மகனும் , மகளும் படித்து உணர வேண்டிய பதிவு தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்...!

பொதுவாக தந்தைகளின்  இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்குரியது.

இதனால்தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்துவிட வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.

குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர் அவரை கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும். மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, மூன்று வேளையும் சாப்பிட்டுவிட்டு பேசாமல் கிடந்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் தந்தைமாரை நடத்தி வருகின்றனர்.

வயதான தந்தை தன் குடும்பத்தினரிடமிருந்து மிகக் கொஞ்சமாகத்தான் கேட்பார். ஏனெனில் கேட்டுப் பழகாத குடும்பத் தலைவராக இருந்தவர். கொடுக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்தவர். எனவே வயதான காலத்தில் வாய்திறந்து கேட்கமாட்டார். குடும்பத்தினர் தான் அவரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைக்க வேண்டும்.

 வாசிக்கும் பழக்கம் உள்ளவரானால் குறைந்த பட்சம் வாரப் பத்திரிகையாவது வாங்கிக் கொடுங்கள்.

சில்லறைச் செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் கொடுங்கள்.

மூலையில் அமர்த்தாமல் சிறிய வேலைகளைக் கொடுங்கள்
.
பேரன் பேத்திகளை அவரிடமிருந்து பிரிக்காதீர்கள். அவர்கள் தந்தையால் கொண்டாடப்படும் செல்வங்கள்

 குடும்பத் தேவைகளைப் பார்த்து பார்த்து செய்தவருக்கு, இப்போது உங்கள் காலம், பார்த்துப் பார்த்துச் செய்வதற்கு.

ஒருவர் மறைந்த பின்னர், அதைச் செய்யவில்லையே, இதைச் செய்திருக்கலாமே என்று எண்ணிப் புலம்புவதைவிட அவர் உயிருடன் இருக்கும்போதே தந்தையின் இறுதி காலம் அமைதியாகக் கழிவதற்கு வழி செய்யுங்கள்.

வயதானவர்களுக்கு தனிமை மிகக் கொடுமையானது.
ஒரு சிறிய வானொலியை வாங்கிக் கொடுங்கள். முடிந்தால் தனி டி.வி இல்லையேல் உங்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க விடுங்கள்.

தன் மனைவியை இழந்த தந்தையின் தனிமை மிகமிகக் கொடுமையானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

 பெண் ஒரு கணவனை இழந்தால் அவரால் அதை ஜீரணித்து தன் பிள்ளைகளுடன் போய்ச் சேர்ந்து கொள்வாள். பெண் சூழலுக்கு ஏற்றாற்போல வளைந்து கொடுப்பாள்.

 குடும்பத் தலைவன், அதிகாரம் செலுத்தியவன், சம்பாதித்தவன், பிறர் மதிப்புக்கு உரியவன் என்றெல்லாம் வாழ்ந்து விட்ட தந்தை, தன் அதிகாரமும், அன்பும், நெருக்கமும், காட்டக் கூடிய மற்றும் என வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளக் கூடிய மனைவியை இழந்தபின் கையறு நிலைக்கு ஆளாகி விடுகிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இவற்றை உணர்ந்து தந்தைக்கு மரியாதை செய்யுங்கள். அவர் கௌரவிக்கப்பட வேண்டியவர்!


Read more »

வாக்களித்த இடைக்கால கொடுப்பனவு: அதிபர், ஆசிரியர் சங்கங்கள் தீர்மானம்


வாக்களித்த பிரகாரம் இடைக்கால கொடுப்பனவு யோசனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் சரியான தீர்வொன்றை வெளிப்படுத்தாவிடின் எதிர்வரும் நவம்பர் 8 ம் திகதி பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சு மற்றும் தேசிய சம்பள ஆணைக்குழு என்பவற்றினால் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் குறித்த யோசனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்காவிடின் போராட்டத்துக்கு தயாராவதாகவும் அச்சங்கங்கள் தெரிவித்துள்ளன. (மு)
Read more »

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகளும் மற்றும் மாத்தறை மாவட்டத்தில் முலடியன கல்வி வலயத்துக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை 30 ஆம் திகதி மூடப்படும் என தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர தெரிவித்துள்ளார்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகளும் மற்றும் மாத்தறை மாவட்டத்தில் முலடியன கல்வி வலயத்துக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை 30 ஆம் திகதி விடுமுறை வழங்குமாறு  தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர தெரிவித்துள்ளார் .

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல பிரதேசங்களில் கடும் மழையினால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது இதனால் நாளைய தினம் 30 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகளும் மற்றும் மாத்தறை மாவட்டத்தில் முலடியன கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மூடப்படும்.
Read more »

நில்வலா கங்கையின் நீர்மட்டம் உயர்வு மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டிக்கொள்ளபடுகின்றார்கள்

நில்வலா ஆற்றின் நீர்மட்டம் இன்று (29) உயர்வு  நிலையை எட்டியுள்ளது, மேலும் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. நில்வலா ஆற்றின் நீர்மட்டம் 6.42 மில்லிமீட்டராக இருந்தது  என மையம் தெரிவித்துள்ளது.


பலத்த மழை காரணமாக அக்குரஸ்ஸ கபுருபிடிய அக்குரஸ்ஸ கத்துவ பாதைகள் நீரில் மூழ்கியுள்ளதால் வாகன போக்குவருத்து தடைப்பட்டுள்ளது

 இந்த சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அக்குரஸ்ஸ போலீசார் கூறுகின்றனர். வெள்ளம் ஏற்பட்டால் படகுகள் மற்றும் பிற தேவையான பொருட்கள்  தயார்செய்யபட்டுள்ளதாக அனர்த்த மையம்  தெரிவித்துள்ளது
Read more »

சமையல் எரிவாயுக்கு, நாடளாவிய ரீதியில் கடும் தட்டுப்பாடு நிலவுவதனால், மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.


கைவசமிருக்கும் காஸ் சிலிண்டர்கள், அடுத்தவாரத்துக்கு மட்டுமே போதுமானதாக இருக்குமென, காஸ் நிறுவனங்கள் கடந்த வாரம் அறிவித்திருந்தன.

கைவசம் இருந்த சிலிண்டர்களும் விற்றுத்தீர்க்கப்பட்டுவிட்டன என, எரிவாயு விற்பனை முகவர்கள் தெரிவிக்கின்றனர்.


பிரதான நகரங்களில் மட்டுமன்றி, தூரப் பிரதேசங்களிலும் காஸ் சிலிண்டருக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது.

இதேவேளை, ஹோட்டல்களுக்குத் தேவையான எரிவாயும் பற்றாக்குறையாக இருப்பதால் உணவுப் பொருள்களைத் தயாரிப்பதிலும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதென அறியமுடிகின்றது.


இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு, கிடைத்ததன் பின்னர், நிலைமை சீராகிவிடுமென எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Read more »

பல மாகாணங்களில் 200 மில்லி மீற்றர் மழை



நாட்டை அண்டியுள்ள வளிமண்டலத்தில் நிலவும் சீரற்ற நிலை காரணமாக எதிர்வரும் தினங்களில் ஊவா, தெற்கு, மேல், கிழக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் 150 முதல் 200 மில்லி மீற்றர் வரையான கடும் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு தெற்காக காணப்படும் வளிமண்டலத் தளம்பல் நிலையானது தெற்கு கடற்பரப்புகள் ஊடாக நாட்டிற்கு மேற்காக காணப்படும் கடற்பரப்புகளைநோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும், குறிப்பாக ஊவா, தென், மேல், வடமேல், மத்திய, சப்ரகமுவமற்றும் கிழக்குமாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை ஒக்டோபர்30ஆம் திகதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா, தென், மேல், வடமேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 150-200 மி.மீ அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.(அ)

-தகவல் திணைக்களம்-
Read more »

வாக்களிக்கும் போது, புர்க்காவை அணிய முடியாது

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வாக்கு சாவடிகளுக்கு செல்லும் போது, வாக்காளர்கள் புர்கா ஆடைகளை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் வாக்காளர்களை அடையாளம் காண்பதை எளிதாக்கும் பொருட்டு இம்முறை புர்கா ஆடைக்கு விசேட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தல் நாளில், புர்கா மீதான தடை பாதுகாப்பு அதிகாரிகளின் கடமையை எளிதாக்கும் எனவும் எதிர்காலத்தில் புர்கா மீதான தடை குறித்து வாக்காளர்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணையத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more »

மீண்டும் தலைதூக்கும் டெங்கு!


நாட்டின் சில பிரதேசங்களில் தற்போது டெங்கு நோய் தீவிரமடைந்துள்ளது. இதனை அவ்வப்பிரதேச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற வருகை தரும் காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை வெளிப்படுத்துவதாக உள்ளது. அதேநேரம் இந்நாட்டில் இந்நோய்க்கு உள்ளானோரதும் உயிரிழந்தவர்களதும் எண்ணிக்கை கடந்த வருடத்தை விடவும் இவ்வருடம் அதிகரித்துக் காணப்படுவதாக தொற்றுநோய்கள் பரவுதல் தடுப்புப் பிரிவு மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதாவது, கடந்த வருடம் 51,169 பேர் டெங்கு நோய்க்கு உள்ளாகினர். அவர்களில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் இவ்வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி வரையும் 56,833 பேர் இந்நோய்க்கு உள்ளாகியுள்ளதோடு, 72 பேர் உயிரிழந்துமுள்ளனர். இதன்படி இந்நோய்க்கு உள்ளானவர்களதும் உயிரிழந்தவர்களதும் எண்ணிக்கை கடந்த வருடத்தை விடவும் அதிகரித்திருப்பது தெளிவாகின்றது.

அதேநேரம் இவ்வருடம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. அதற்கிடையில் இந்நோய்க்கு இவ்வளவு தொகையினர் இப்போதே உள்ளாகியிருப்பதும் உயிரிழந்திருப்பதும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க முடியும் என்ற அச்சம் சுகாதாரத் துறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில், கடந்த சில வாரங்களாக தொடராக மழை பெய்து வருவதோடு நாட்டின் பல பிரதேசங்களின் தாழ்நிலங்களிலும் வெள்ள நி​ைலமை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக டெங்கு நோயைக் காவும் நுளம்புகள் பெருகுவதற்கான வாய்ப்பு பெரிதும் அதிகரித்துள்ளது. அதாவது, இந்நோயைப் பரப்புகின்ற நுளம்புகள் தெளிந்த நீரில் முட்டையிட்டு பல்கிப் பெருகும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. அதற்கு பெருமளவிலான நீர் தேவைப்படுவதில்லை. மாறாக, வீட்டிலும் சுற்றாடலிலும் காணப்படுகின்ற அப்புறப்படுத்தப்பட்ட அல்லது கைவிடப்பட்ட பொலித்தீன் உறைகள் போன்ற பொருட்களில் தேங்கும் சொற்பளவு தெளிந்த நீரே போதுமானது.

அதன் காரணத்தினால் வீட்டிலும் சுற்றாடலிலும் மழைநீர் அடங்கலான தெளிந்தநீர் தேங்கக் கூடிய வகையில் எவ்வித பொருட்களும் காணப்படாத வகையில் சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென தொற்றுநோய் பரவுவதலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இலங்கை ஒரு வளர்முக நாடாக இருப்பதால் நாட்டில் இடம்பெற்று வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வேலைத் திட்டங்கள் மழைநீர் தேங்கி நுளம்புகள் பெருகுவதற்குரிய வாய்ப்பைக் கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். டெங்கு நோயானது, தனியே சுகாதாரப் பிரச்சினை அல்ல. அது சமூக மற்றும் சுற்றாடல் பிரச்சினையும் கூட. இதனை தனியே மருத்துவர்களால் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது. மாறாக பொதுமக்களதும் ஒத்துழைப்பும் இன்றியமையாததாகும்.

அந்தவகையில், இந்நோய்க்கு கடந்த வருடம் உள்ளானவர்களதும் உயிரிழந்தவர்களதும் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்ட போதிலும், அவ்வருடம் மார்ச், ஏப்ரல், மே, ஓகஸ்ட், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் ஆகிய மாதங்களில் இந்நோய்க்கு உள்ளானோரின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. ஆனால், இவ்வருடம் ஏப்ரல் மாதம் தவிர்ந்த ஏனைய எல்லா மாதங்களிலும் இந்நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகின்றது. இது ஆரோக்கியமான நிலைமையல்ல.

அதேநேரம் தற்போது தொடராகவும் அடிக்கடியும் மழை பெய்து வருவதானது டெங்கு நுளம்புகளின் பெருக்கத்துக்கும் டெங்கு நோய் மேலும் பரப்புவதற்கும் வாய்ப்பாக விளங்குகின்றது. அதன் காரணத்தினால் மழைநீர் உள்ளிட்ட தெளிந்தநீர் தேங்கக் கூடிய கைவிடப்பட்ட மற்றும் அப்புறப்படுத்தப்பட்ட சிரட்டைகள், யோகட் கப்கள், சொப்பிங், பொலித்தீன் உள்ளிட்ட சகல திண்மக் கழிவுப் பொருட்களையும் தெளிந்தநீர் தேங்க முடியாதபடி அப்புறப்படுத்துவது இன்றியமையாததாகும். இவ்விடயத்தில் ஒவ்வொரு குடிமகனும் விசேட கவனம் செலுத்தவேண்டும். அதனை ஒரு சமூகப் பொறுப்பாக கருதி செயற்படுவது அவசியமானது. அப்போது டெங்கு நுளம்புகள் பெருக முடியாத நிலைமை ஏற்படுவதோடு அது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நாட்டுக்கும் ஆற்றுகின்ற நன்மையாகவும் அமையும்.

மேலும் இக்காலப் பகுதியில் எவருக்காவது காய்ச்சல், தலையிடி, உடல் வலி போன்றவாறான அறிகுறிகள் காணப்பட்டால் தாமதியாது மருத்துவ ஆலோசனைகளுடன் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், இந்நோய்க்கு உள்ளானவர்களை ஆரம்ப கட்டத்திலேயே இனங்கண்டு உரிய சிகிச்சையளிக்கும் போது இந்நோயை முழுமையாக குணப்படுத்திக் கொள்ள முடியும். அத்தோடு டெங்கானது முழுமையாக தவிர்த்துக் கொள்ளக் கூடிய ஒரு நோய் என்பதையும் மறந்து விட முடியாது.

ஆனால், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தொடர்பில் கவனயீனமாகவும் அசிரத்தையாகவும் நடந்து கொள்வது நோய் தீவிரமடையவும், உயிராபத்துக்கு முகங்கொடுக்கவும் வழிவகுக்க முடியும். அதுவே மருத்துவர்களது அபிப்பிராயமாக உள்ளது.

ஆகவே, நுளம்புகள் பெருகுவதற்கு ஏற்ற வகையிலான காலநிலை தற்போது நிலவி வருவதால் வீட்டையும் சுற்றாடலையும் மழைநீர் உள்ளிட்ட தெளிந்த நீர் தேங்காதபடி சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்திருப்பதில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும். அதனை ஒரு பொறுப்பாகவும் கருதி செயற்படுவது அவசியம். அப்போது டெங்கு நோய் ஒரு அச்சுறுத்தலாகவோ ஆபத்தாகவோ இருக்காது என்பது திண்ணம்.
Read more »

10 ஆண்டுகளில் 13 ஆவது சம்பவம் 12 குழந்தைகளில் 2 குழந்தைகள் மட்டுமே உயிருடன் மீட்பு


கடந்த 10 ஆண்டுகளில் நடந்த 13ஆவது ஆழ்துளை கிணறு விபத்து கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. இவ்விபத்து திருச்சி மாவட்டத்தின் மணப்பாறையை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியில் நடந்துள்ளது. சுமார் 400 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தையொன்று விழுந்துள்ளது.

தமிழக அரசும் உபயோகம் இல்லாத ஆழ்துளை கிணறுகளை முறையாக மூடி வைக்க வேண்டும் என்று பலமுறை அறிவுறுத்தி வருகிறது. ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கிறது. கடந்த 2009 முதல் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 12 குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளன. அதில் 2 குழந்தைகள் மட்டுமே உயிரோடு மீட்கப்பட்டுள்ளன. இப்போது ஆழ்துளை கிணற்றில் சுஜித் விழுந்தது 13வது சம்பவம் ஆகும்.

தமிழகத்தில் இதுவரை நடந்த ஆழ்துளை கிணறு விபரீதம் குறித்த விவரம் வருமாறு:

இதேபோன்று 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஆண்டிப்பட்டி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் மாயி 30 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டும் உயிரிழந்தான். அதே ஆண்டு ஓகஸ்ட் 27ம் திகதி திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் 3 வயது சிறுவன் கோபிநாத் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து சடலமாக மீட்கப்பட்டான்.

2011 செப்டம்பர் 8ஆம் திகதி நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகே உள்ள கைலாசநாதபுரத்தில் 200 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் சுதர்சன் உயிரிழந்தான்.

2012ம் ஆண்டு ஒக்டோபர் 1ஆம் திகதி கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை அடுத்த மலைக்கிராமமான கும்பளத்தூரில் விவசாய நிலத்தில் ஆறரை அங்குல அகல அளவுக்கு ஆழ்துளை கிணற்றில் ஆனந்த்-பத்மா தம்பதியின் குழந்தை குணா (3) ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. 4 மணி நேர போராட்டத்துக்கு பின் காயங்களுடன் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

2013 ஏப்ரல் 28ஆம் திகதி கரூர் அருகே ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த சிறுமி முத்துலட்சுமி மீட்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தாள்.
அதே ஆண்டு செப்டம்பர் 28ஆம் திகதி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புலவன்பாடி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் 4 வயது சிறுமி தேவி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தாள்.

2014 ஏப்ரல் 5ஆம் திகதி திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கிடாம்பாளையத்தில் துரை - ஜெயலட்சுமி தம்பதியின் ஒன்றரை வயது சுஜித் என்ற ஆண் குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. 160 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில் 45 அடியில் சிக்கிய குழந்தை 24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்திற்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டது.

அதே ஏப்ரல் 5ஆம் திகதி விழுப்புரம் அருகே பல்லகசேரி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் மதுமிதா என்ற மூன்று வயது சிறுமி தவறி விழுந்து, பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு மறுதினம் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தாள்.

அதே ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே 3 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான்.

அதே ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை ரோபோ இயந்திரம் மூலம் மீட்கும் முயற்சி தோல்வி அடைந்தது. இந் நிலையில் 24 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அக்குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு ஏப்ரல் 13ம் திகதி வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே 350 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய இரண்டரை வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

2018ஆம் ஆண்டு நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் 15 அடி ஆழத்தில் சிக்கிய 2 வயது சிறுவன், உயிருடன் மீட்கப்பட்டான். ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தைகள் தவறி விழுந்துள்ள சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அடுத்தடுத்து இதுபோன்ற நிகழ்வுகளை பார்த்த பின்னரும், ஆழ்துளை கிணறு தோண்டுபவர்கள் அதனை உரிய முறையில் மூடாமல் அலட்சியமாக விட்டுச் செல்வதும் அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததும் தொடர் கதையாகவே உள்ளது.
Read more »

கொள்கலனில் இறந்த பெண் தாய்க்கு கடைசியாக செய்


வியட்நாமைச் சேர்ந்த பெண்ணொருவர் தாம் இறந்து கொண்டிருப்பதாக, தாய்க்கு அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்றை சுட்டிக்காட்டி, லண்டன் அருகே சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட கொள்கலனுக்குள் வியட்நாமைச் சேர்ந்தவர்களும் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

லண்டன் அருகே கொள்கலன் லொரியிலிருந்து 39 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதிலிருந்தவர்கள் சீனர்களாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் வியட்நாமைச் சேர்ந்த பாம் திட்ரா மை என்ற பெண், தாம் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக தனது தாய்க்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

அதில் தான் இறந்து கொண்டிருப்பதாகவும், ஏனெனில் தனக்கு மூச்சுத்திணறுகிறது எனக் கூறியுள்ள அந்த பெண், வெளிநாட்டில் குடியேற தாம் தேர்வு செய்த வழி வெற்றிகரமானது அல்ல எனவும் தெரிவித்துள்ளார். இதனால் கொள்கலனுக்குள் சடலமாகக் கிடந்தவர்களுள் வியட்நாமியர்களும் அடங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அந்த கொள்கலன் லொரியை ஓட்டி வந்த மரிஸ் ரொபின்சன் என்ற இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஆட்கடத்தல், கறுப்புப்பண பறிமாற்றம் ஆகிய குற்றங்களுக்காகவும் அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர் பொலிஸ் காவலில் உள்ளனர். கொலை மற்றும் ஆட்கடத்தல் ஆகிய சந்தேகங்களின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்கலனில் இறந்தவர்களில் சிலரே அடையாள அட்டைகளும் பிற ஆவணங்களும் வைத்திருந்ததால், அவர்களின் டி.என்.ஏ மற்றும் தழும்புகள் ஆகியவற்றைக் கொண்டே அவர்களை அடையாளம் காணவேண்டிய சூழல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read more »