Showing posts with label வெலிகம. Show all posts
Showing posts with label வெலிகம. Show all posts

கடல் சிங்கம் என கருதும் ஒரு விலங்கினம் நேற்றைய தினம் வெலிகம மிதிகம பகுதியில் கரைக்கு ஒதுங்கியுள்ளது.

கடல் சிங்கம் என்று நம்பப்படும் ஒரு கடல் உயிரினம் நேற்று 23 ஆம் திகதி பிற்பகல்  வெலிகம மிதிகம 
Read more »

முஸ்லீம்கள் அதிகமாக உள்ள வெலிகம ,பேருவளை,தர்கா டவுன் பகுதிகளில் வெடிகுண்டு அச்சுறுத்தல்: இந்திய உளவுத்துறை உறுதிப்படுத்துகிறது

1994 மற்றும் 1999 ஜனாதிபதித் தேர்தல்களின் போது இருந்த மிகவும் ஆபத்தான நிலைமை தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் வெளிவந்துள்ளது என்பதை புலனாய்வு அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 முஸ்லீம் மக்களில் பெரும்பான்மையான மக்கள் வசிக்கும் பகுதிகளான வெலிகம, பேருவளை மற்றும் தர்கா டவுன் ஆகியவை அதிக அளவில் வெடிபொருட்களால் தாக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய  முன்னாள் புலனாய்வு துறை பிரதானியான சுரேஷ் சலே இன்று இரவு நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

மேற்கண்ட தகவல்கள் இந்திய உளவுத்துறையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலின் இறுதி பேரணிகள் நாளை நடைபெறவுள்ளதால் பாதுகாப்புப் படையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.lankanewsweb.net/67-general-news/51443-Bomb-threat-in-Muslim-areas:-Indian-Intelligence-confirms
Read more »

விபத்தில் பலியான மூவரினதும் பூதவுடல்கள் மடகஸ்காரில் நல்லடக்கம்

மடகஸ்காரில் அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களுள் வெலிகமையைச் சேர்ந்த அஸ்ஸெய்யித் ரிதா மெளலானா என்பவரும் உயிரிழந்தார். வெலிகமையைச் சேர்ந்த மொஹமட் மெளலானாவின் புதல்வரான இவர், தந்தையின் இரத்தினக்கல் வியாபாரத்தை செய்து வருகிறார்.

குறிப்பிட்ட தினம் இவர்கள் மாலை 5.00 மணி அளவில் களுத்துறையைச் சேர்ந்த ஜஉபர் ஸித்தீக் மற்றும் கன்னத்தோட்டைச் சேர்ந்த மொஹமட் மிஸ்பர் ஆகியோருடன் இவர் வியாபார நோக்கமாக வாகனத்தில் சென்றுள்ளனர்.

இச்சமயம் வாகனம் வீதியை விட்டு விலகி 250 அடி ஆழமான கங்கையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது. எனினும் அடுத்த நாள் காலையிலேயே பிரதேசவாசிகள் கண்டுள்ளனர். இவர்களின் தகவலின் பிரகாரம் கங்கையிலிருந்து மூவரினதும் சடலம் மீட்கப்பட்டன.

உயிரிழந்த ரிதா மெளலானா சிறந்த சமூக சேவையாளர். அரசியலிலும் ஈடுபாடு காட்டி வந்துள்ளார். முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகரவோடு நெருங்கி பழகி வந்துள்ளார்.

இவரது ஜனாஸா பிரேத பரிசோதனையின் பின்னர் மடகஸ்காரிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
Read more »

மடகஸ்கார் நாட்டில் இடம்பெற்ற கார் விபத்தில் வெலிகமை சேர்ந்த ரிஸான் மௌலானா வபாத்.


மடகாஸ்கர் நாட்டில் இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கையர்கள் மூவர் வபாத் ஆகியுள்ளார் .மடகாஸ்கர் இல் உள்ள மோரமங்க என்ற  பிரதேசத்திற்கு  இவர்கள் சென்ற வேளையிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

அவர்கள் சென்ற கார் ஓடையில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் இரண்டு பேரின் ஜனாஸா மீட்கப்பட்டுள்ளது.

 இலங்கையில் கண்ணந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த மிஸ்வர் ஹாஜியார் மற்றும் களுத்துரை பிரதேசத்தைச் சேர்ந்த ஜவ்பர்
 மற்றும் வெலிகமை பிரதேசத்தை சேர்ந்த ரிஸான் மவ்லானா என்பவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
Read more »

வெலிகம வலான வைத்தியசாலைக்கு பழைய தெரு , மீரா ஸாஹிப் பள்ளிவாசல் மர்கஸ் நிர்வாகத்தினரால்100 LED மின்குமிழ்கள் அன்பளிப்பு

வெலிகம பழைய தெரு , மீரா ஸாஹிப் பள்ளிவாசல் மர்கஸ் நிர்வாகத்தினரால் வெலிகம வலான வைத்தியசாலைக்கு 100 LED மின் குமிழ்கள் கொண்ட பொதி அன்பளிப்பு செய்யப்பட்டது . இதனை பள்ளிவாசல் கதீப் அஷ்ஷெய்க் எம் . எம் . எம் . நாஜிஹ் ( முர்ஸி ) , வைத்தியர் சமரசேகரவிடம் கையளித்தார் . இந்நிகழ்வில் பௌத்த மதகுருவான செவனகல தம்மிக தேரர் , கிறிஸ்தவ மத குருவான பெரேரா மற்றும் பொலிஸ் அதிகாரி மாரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர் .
Read more »

வெலிகம ஆரம்ப பாடசாலையில் நான்கு சிறுமிகளுக்கு தடுப்பூசி பலாத்காரமாக ஏற்றப்பட்டது சம்பந்தமான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை

வெலிகம  ஆரம்ப பாடசாலையில்  சில நாட்களுக்கு முன்னர் நான்கு சிறுமிகளுக்கு  பலாத்காரமாக  தடுப்பூசி  ஏற்றப்பட்டதாக ஒரு தகவல் பரவி இருந்தது

 இந்த தகவல் தொடர்பாக நாம் வெலிகம ஆரம்ப பாடசாலை அதிபர் சநூலா அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது அவ்வாறான ஒரு சம்பம் இடம்பெற வில்லை எனவும் சில நாட்களாக பெற்றோர்கள் மத்தியில் ஒரு பொய்யான செய்தி பரவி வந்ததாகவும்  அதில்
 எந்தவித உண்மையும் இல்லை என குறிப்பிட்டார்

இது தொடர்பாக அவர் மேலும்  குறிப்பிடுகையில்

சென்ற திங்கட்கிழமை பாடசாலை அதிபருக்கு  பெற்றோர்கள் சிலர் தொலைபேசி அழைப்பு மூலம் பாடசாலை மாணவிகளுக்கு தடுப்பூசியை பலாத்காரமாக ஏற்றப்பட்டுள்ளது  தொடர்பாக வினவப்பட்டுள்ளது இது தொடர்பாக பாடசாலை அதிபர் விசாரணை செய்த போது அவ்வாறான ஒரு சம்பவம் பாடசாலையில் இடம்பெறவில்லை என உறுதியானது
பாடசாலை நிர்வாகத்திற்கு அறியாமல்  இவ்வாறான ஒரு சம்பவம் இடம் பெறவில்லை என பாடசாலை அதிபர் உறுதியாக கூறியுள்ளார்.

தடுப்பூசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் குறிப்பிட்ட மாணவியை  விசாரித்த போதும் அம்  மாணவியும் தனக்கு   தடுப்பூசி பலாத்காரமாக ஏற்ற பட்டதாக கூறியுள்ளார் இதனை அடுத்தே பெற்றோர்கள்  மத்தியில் இந்த தகவல் பரவயியுள்ளது  என்றாலும் அது ஒரு பொய்யான் தகவல் என உறுதிசெய்யப்பட்டது

குறித்த சம்பவம் இடம்பெற முன்னர்
பாடசாலைக்கு சுகாதார பரிசோதகர்கள் வருகைதர இருப்பதாக அறிவிக்கபட்டுள்ளது இதனை அறிந்த சிறுமிகள்
சுகாதார பரிசோதகர்கள் பாடசாலைக்கு தடுப்பூசி ஏற்றுவதற்காக  தான் வருகை தர இருக்கின்றார்கள் என்ற அச்சத்தில் கூறியிருக்கலாம்

 தடுப்பூசி  பலாத்காரமாக ஏற்றப்பட்டதாக  கூறப்படும் அச்சிறுமி தமது வீட்டு சகோதரரிடம் தமக்கு தடுப்பூசி ஏற்றியதாக  ஒரு தகவலை கூறியதை அடுத்து அந்த சிறுமி தனது சகோதரரிடம் குறித்த சம்பவத்தை கூறும்போது அந்த சிறுமியின் தாய் அருகாமையில் கேட்டு விட்டு இருந்ததாவும் அதனை அந்த தாய் சிறுமியிடம் விசாரித்தபோது தமக்குத் தடுப்பூசி வழங்கியதாகவும்  சிறுமி தாயிடம் கூறியுள்ளார்.

குறிப்பிட்ட சிறுமி  தமக்கு மாத்திரம் பலாத்காரமாக தடுப்பூசி வழங்கப்படவில்லை என்றும் இன்னும் நான்கு மாணவிகளுக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டதாகவும்   கூறியதை அடுத்து
 இந்த தடுப்பூசியை சம்பந்தமான தகவல் ஒரு வதந்தி பரவ ஆரம்பித்தது.பின்னர் பாடசாலையிலும் அம்மாணவியை விசாரித்தபோது தடுப்பூசி வழங்கப்பட்டதாக கூறப்பட்டாலும் எந்தவித ஆதாரமும் நிரூபிக்க முடியாமல் இருந்தது .தடுப்பூசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் அம்மாணவி சக மாணவி ஒருவருடன் கழிவறைக்கு சென்ற பொது  இந்த சம்பவம் இடம்பெற்றதாக
கூறியுள்ளார்.

 என்றாலும் அதே மாணவியோடு துணைக்கு  கழிவறைக்கு சென்ற அடுத்த மாணவி இவ்வாறான ஒரு சம்பவம் இடம் பெறவில்லை எனவும் உறுதியா கூறியுள்ளார்

இதனை அடுத்து  இந்தச் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என நிரூபணம் ஆனது
 சிறுமிகளின் அச்சத்தின் காரணமாக இந்த வதந்தியான தகவல் பரவி இருக்கலாம் எனவும் பாடசாலை அதிபர் குறிப்பிட்டார்


 அதேவேளை சில  நாட்களுக்கு முன் தெனிபிடிய
பிரதேசத்திலும் ஒரு சிறுமி கடத்தி செல்லப்பட்டதாக ஒரு வதந்தி பரவியது
என்றாலும் அந்த தகவல் பொய்யானது என உறுதி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
Read more »

வெலிகம நகரசபை மாநகர சபையாக மாற்றுவதற்கான யோசனை முன்மொழியப்பட்டுள்ளது


மாத்தறை மாவட்டத்தில் வெலிகம நகர சபையை  மாநகர சபையாக மாற்றுவதற்காண யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது
வெலிகம நகரசபை உற்பட்ட  பிரதேசத்தில் சனத்தோகை  27 ஆயிரத்தை தாண்டிய நிலையில்  காணப்படுவதால் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் அது 35 ஆயிரத்தைத் தாண்டும் பட்சத்தில் வெலிகம நகரசபை மாநகர சபையாக மாற்றப்பட உள்ளதாக வெலிகம நகரசபை தலைவர் ரெஹான் ஜயவிக்ரம தெறிவித்துள்ளார்.

நகரசபை மாநகர சபையாக மாற்றப்படும் போது அதன் எல்லை பரப்பு அதிகரிக்கப்படும் அதேவேளை வெலிகம பிரதேச சபைக்கு உட்பட்ட பல பிரதேசங்கள் மாநகரசபை எல்லைக்குள் உள்வாங்கப்படவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது


Read more »

பொதுஜன பெரமுனவின் பிரசார கூட்டம் இன்று வெலிகமையில் ஜனாதிபதி வேற்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது

பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டம் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வின் தலைமையில் இன்று வெலிகம பஸ் தறிப்பிடத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது 

மாத்தறை மாவட்ட பொதுஜன பெரமுன ஆதரவு பாராளுமன்ற உறிப்பினர்கள் மற்றும்
நகரசபை ,பிரதேச சபை பொதுஜனபெரமுன உறுப்பினர்கள்
 கலந்துகொண்டார்கள்Read more »

வெலிகம பகுதியில் சிறு பிள்ளைகளை கடத்தி செல்வதாக பரவி வரும் செய்தி வதந்தியானது.

வெலிகமையில் சிறு பிள்ளை ஒன்று கடத்தி செல்லப்பட்டுள்ளதாக பரவி வரும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை.

 வெலிகம தெனிப்பிடிய பிரதேசத்தில் பாடசாலை மாணவியை கடத்தி செல்ல முற்பட்டதாக   கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வருகின்ற. இதில் எவ்வித உண்மையும் இல்லை என பிரதேசவசிகள் உறுதிப்படுத்தினார்கள்.

 என்றாலும் பிள்ளைகள் தனியாக வெளியில் செல்வதில் பெற்றோர்கள் அவதானமாக இருக்குமாறும் வேண்டிக்கொள்கின்றோம்
Read more »

வெலிகம கோட்டகொடை யை சேர்ந்த இம்தியாஸ் தூக்கில் இட்டு தற்கொலை.

வெலிகம கோட்டகொடை யை பிறப்பிடமாகவும் கெவ்னுகமுவ வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இம்தியாஸ் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இன்று மாலை வேளையில் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேசவசிகள் தெரிவிக்கின்றனர்.தற்கொலைக்கான  காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை மேலதிக பரிசோதனைக்காக வளானை வைத்தியசாலையில்  உடல் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை வெலிகம போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்
Read more »

வெலிகம யின் பல பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளுடன் 22 முஸ்லீம் இளைஞர்கள் கைது


ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 27 பேர் வெலிகம பொலிசாரால் நேற்று இரவு கைது கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடம்மிருந்து போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன

வெலிகமயின் பல பகுதிகளில் இருந்து நேற்று (5) குறித்த சந்தேகநபர்கள் , ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, வெலிகம போலீசார் தேரிவித்தனர்
குறித்த பகுதியில் போலீஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கபெற்ற தகவலை அடுத்தே சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட வெலிகம பொலிசாரால் விற்பனைக்காக ஐஸ் போதைப்பொருளை கொண்டு வந்த சந்தேகநபரையும் மேலும் அதனை பயன்படுத்தியவர்களையும் கைது செய்துள்ளனர்

இதில் வெலிகம பகுதியை சேர்ந்த 22 முஸ்லீம்கள் உற்பட ஐந்து சிங்களவர்களும் உள்ளடக்கமாக மொத்தம் 27 பேர் கைதாகினர்

கைப்பற்றப்பட்டுள்ள ஐஸ் போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Read more »

முஹர்ரம் மாத நோன்பின் சிறப்பு! எம்.வீ. பாத்திமா ஹப்ஸா சலாஹிய்யா சர்வதேச பாடசாலை, வெலிகம.


ரமழான் மாத நோன்புக்கு பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்' என நபிகளார் தெரிவுத்துள்ளார். (ஆதாரம்: முஸ்லிம்)

இந்த ஹதீஸில் முஹர்ரம் மாதத்தில் நோற்கின்ற சுன்னத்தான நோன்புகளுக்கு பல நன்மைகள் உள்ளன என்பதனை 'ரமழானுக்கு பின்னர் சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பு' என்ற வரிகளின் மூலம் நபி (ஸல்) அவர்கள் விளக்கிக் கூறியுள்ளார்கள்.

இதனால் வாராந்தம் நோற்கக்கூடிய திங்கள், வியாழன் நோன்புகள், அதே போன்று மாதாந்தம் நோற்கக்கூடிய 13, 14, 15அய்யாமுல் பீழ் (வெள்ளை தினங்கள்), அதே போன்று அய்யாமுஸ்ஸூத் (கருப்புத்தினங்கள்) 27, 28, 29நோற்கக்கூடிய நோன்புகளை நோற்று நபி (ஸல்) அவர்கள் ரமழானுக்குப் பின்னர் சிறந்த நோன்பு என்று சொல்லப்பட்ட சிறப்பை பெற முயலவேண்டும்.

 ஆஷூரா நோன்பின் சிறப்பு!

முஹர்ரம் மாதத்தில் நபிகளார் செய்துவந்த, ஏவியவற்றில் ஆஷூரா நோன்பு முக்கியமானதாகும். ஆஷூரா என்பது பிறை கணிப்பீட்டின் படி முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாகும். நபிகளார் (ஸல்) மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்வதற்கு முன்னர் மக்காவில் முஹர்ரம் மாத பத்தாவது நாள் ஆஷூரா நோன்பு நோற்று வந்தார்கள்.

குரைஷிகள் (மக்காவில்) ஆஷூரா நோன்பை நோற்று வந்தார்கள், அதனை நபிகளாரும் நோற்று வந்தார்கள். மதீனாவுக்கு ஹிஜ்ரத் வந்தபோது அதனை நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் அதனை விரும்பியவர்கள் நோற்கலாம் விரும்பியவர்கள் விடலாம் என்றார்கள். (ஆதாரம்: புகாரி)

இந்த ஹதீஸ் ரமழானுக்கு முன்னர் கடமையாக்கப்பட்ட நோன்பு முஹர்ரம் மாத ஆஷூரா நோன்பு என்பதனையும், ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பை விரும்பியவர்கள் நோற்கலாம் என்பதனையும் தெளிவுபடுத்துகின்றது.

பல உபரியான வணக்கங்களுக்கு இஸ்லாம் சில சிறப்புக்களை வைத்திருப்பதை போன்று ஆஷூரா நோன்புக்கு இருக்கக்கூடிய சிறப்பையும் நபிகளார் கூறியிருக்கின்றார்கள். இன்னாளில் நோன்பு நோற்பது முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையுமென்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'ஆஷூரா நோன்பு அதற்கு முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று நான் கருதுகின்றேன்'. (ஆதாரம்: முஸ்லிம்)

முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்பதன் பொருள் சிறு பாவங்களையே இங்கு குறிக்கின்றது. மாறாக பெரும் பாவம் செய்தவர்களுக்கு அவர்களது குற்றங்களுக்கு பரிகாரமாக அமைவது தௌபாவாகும்.

முஸ்லிம்கள் அனைத்து விடயங்களிலும் யூதர்களுக்கு மாற்றமாக தங்களது நடவடிக்கைகளை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதனையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. யூதர்களும் ஆஷூரா நோன்பை நோற்று வந்ததனால் அவர்களுக்கு மாற்றமாக ஒன்பதாவது நாளும் நோற்கவேண்டும் என்று நபிகளார் கூறியிருக்கின்றார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'வருகின்ற வருடம் நான் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்' (ஆதாரம்: முஸ்லிம்)

ஆஷூரா நோன்பை நபிகளார் நோற்று வந்தார்கள் அத்தோடு யூதர்களுக்கு மாற்றம் செய்வதற்காக வேண்டி மதீனாவுக்கு வந்ததன் பின்னர் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறினார்கள். இதனடிப்படையில் பத்தாவது நாளோடு ஒன்பதாவது நாளும் சேர்த்து நோன்பு நோற்பதே சிறந்ததாகும். இதற்கே அதிகமான ஆதாரங்களும் உள்ளன. முடியாவிட்டால் பத்தாவது, பதினொறாவது நாட்களுமாக நோன்பு நோற்பது யூதர்களுக்கு மாற்றமாக செய்கின்ற செயலாக மாறும். இவ்விரு முறைகளிலும் ஒருவருக்கு நோன்பு நோற்க முடியாவிட்டால் பத்தாவது நாள் மாத்திரமாவது நோன்பு நோற்றுக் கொள்ள வேண்டும்.

வல்ல அல்லாஹ் புனிதப்படுத்திய இம்மாதத்தின் புனிதத் தன்மையை பேணி, இம்மாதத்தில் அதிகமதிக நன்மைகளை செ;யது, சுன்னத்தான நோன்பாகிய ஆஷூரா நோன்பையும் நோற்று நபிகளார் கூறிய நற்கூலியை அடைய நம் அனைவருக்கும் அருள் புரிவானாகவும். ஹிஜ்ரி புத்தாண்டே உன் வருகை மனிதகுல சுபீட்சத்துக்கும் நாட்டு நலனுக்கும், செழிப்புக்கும் காரணமாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக.

Read more »

வெலிகம கல்பொக்கை ரயில் பாதை கதவு மூடப்பட்ட நிலையில் கடந்து செல்ல முயன்ற 12 சாரதிகளுக்கு எதிராக வழக்கு. 25000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்.


வெலிகம கல்பொக்க ரயில் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ரயில் பாதை மூடப்பட்ட நிலையில் அதனை கடந்து சென்ற 12 பேர் நேற்று சிவில் உடையில் இருந்த ரயில் போலீசாரிடம் சிக்கியுள்ளார். நேற்றைய தினம்  விசேடமாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சிவில் போலீசாரிடமே  இந்த 12 பேர் சிக்கியுள்ளார். உடனடியாக அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுபட்ட போலீசார் 12 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சாதாரணமாக ரயில் கதவை மூடப்பட்ட நிலையில் அதனை கடந்தால் இருப்பத்து
ஐயாயிரம் ரூபாய் தண்டப்பனம் விதிக்கப்படும் என்பது இலங்கை நாட்டின் சட்டமாகும்
வெலிகம கல்பொக்க ரயில் பாதை மூடப்பட்டாலும் அதில் ஒரு முச்சக்கரவண்டி செல்வதற்கான இடம் அங்கு காணப்படுகின்றது அவசரமாக செல்ல சிலர் அந்த இடைவெளியால் செல்வது அங்கு வழமையாக அவதானிக்கக்கூடிய ஒன்றாக காணப்படுகின்றது.
சில சந்தர்ப்பங்களில் போலீசார் அப் பிரதேசத்தில் மூடப்பட்ட நிலையில் ரயில் பாதையை கடக்கும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கின்றனர்.

மூடப்பட்ட ரயில் பாதையை கடப்பது தண்டனைக்கு உரிய குற்றம் என உணர்ந்து சில அவசரகாரர்கள் கடந்து செல்கின்றார்கள். என்பது வேதனைக்குரிய விடயமாகும்

இனிமேலாவது இந்த அவசரகாரர்கள் ஒழுங்கு விதிமுறைகளை பேணி நடப்பார்கள???
www.weligamanews.com
Read more »

தென் மாகாண தமிழ் மொழி மூல பட்டதாரி ஆசிரியர் நியமனம் 2019 ஆகஸ்ட் 27 ஆம் திகதி வெலிகம நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது

தென் மாகாணத்தில் சுமார் 5 வருடகாலமாக பட்டதாரி ஆசிரியர் நியமனம் புறக்கணிக்கப்பட்ட நிலையில்
முதலாம் கட்ட நியமனத்தில் சுமார் 92
பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் இனைத்துகொள்ளபட்டனர்
இரண்டாம கட்ட நியமனமாக
இம் மாதம் 27 ஆம் திகதி மேலும் தமிழ் மொழி மூலமான 156 பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் இனைத்துகொள்ளபடவுள்ளனர்

 சிங்கள மொழி மற்றும் தமிழ் மொழி  1200  பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் நியமனம் பெறவுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.இன் நிகழ்வு வெலிகம நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது  மைதிரி பால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொள்வார்.
Read more »

வெலிகமையில் மீண்டும் டெங்கு தீவிரம்.. பலர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில்.


வெலிகம பிரதேசத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம்
டெங்கு... எப்படிப் பரவும், தடுப்பது எப்படி, சிகிச்சைகள் என்ன..

வெலிகமயில் டெங்கு தாக்கமும், அதுபற்றிய பீதியும் மக்களை நிறையவே அச்சுறுத்தி வருகின்றன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், காய்ச்சலுக்காக சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கிடையே, ஒவ்வொரு நாளும் டெங்கு பற்றிய உயிரிழப்புச் செய்திகளுக்கும் பஞ்சமில்லை. வெலிகம மகவீதிய  பிரதேசத்தில் டெங்கு நோய் காரணமாக 26 வயது பெண் மரணம். மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் வைத்திய சாலையில் உயிரிழப்பைத் தடுக்க சுகாதாரத் துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, ‘டெங்குவுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தே இல்லை’ என்று ஒரு தரப்பினர் கூறிக்கொண்டிருக்கின்றனர். `சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் டெங்கு வராமல் தடுக்க மட்டுமே முடியும்; காய்ச்சல் வந்த பிறகு அவை பலனளிக்காது’ என்கிறது மற்றொரு தரப்பு. அதேநேரத்தில் ஒவ்வொரு பிரிவு மருத்துவர்களும் தனித்தனியாக, `எங்களது மருத்துவத்தால்தான் சிகிச்சை அளிக்க முடியும்’ என்று கூறிவருகிறார்கள். இதுபோன்ற செய்திகள் பொதுமக்களை தெளிவான ஒரு முடிவெடிக்க முடியாமல் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.

கொசுக்களால் டெங்கு பரவுவதில்லை’ என்பது போன்ற வதந்திகள் அதிகமாகப் பரவுகின்றன. உண்மையில் டெங்கு என்பது என்ன?"

“டெங்குவின் தாக்கத்தைவிட அது பற்றிய வதந்திகள்தாம் அதிகம். இதுபோன்ற வதந்திகளைக் கேள்விப்பட்டேன். இவையெல்லாம், டெங்குவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும், மக்களை மென்மேலும் அச்சுறுத்தக்கூடிய ஓர் அபாயகரமான செயல். எனவே, இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்.
வெலிகம பிரதேசத்தில் கோரட்டுவை,மதுரப்புரை, புதியதெரு ,மகாவீதிய பெலானை போன்ற பிரதேசத்தில் டெங்கு நோயால் அதிகமாக பாதிக்கபட்துள்ளனர்

டெங்கு என்பது ஒரு வகையான வைரஸால் ஏற்படும் காய்ச்சல். இந்த டெங்கு வைரஸ் டென்-1 (DENV-1), டென்-2 (DENV-2), டென்-3 (DENV-3), டென்-4 (DENV-4) என வகைப்படுத்தப்படுகிறது. இந்த வைரஸ், நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய 'ஏடிஸ்' என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் பரவுகிறது.''


``எப்படிப் பரவுகிறது?"

இலங்கையை பொறுத்தவரை, வீடுகளில் சரியாக மூடப்படாத டிரம்கள், தண்ணீர் பிடிப்பதற்காக பைப்லைன்கள் அருகே தோண்டப்பட்ட குழிகள், மொட்டைமாடிகளில் போட்டுவைத்திருக்கும் உபயோகமற்ற பொருள்கள், காலிமனைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கப்கள், பயனற்ற பிளாஸ்டிக் பொருள்கள், வீடுகளில் சரியாக மூடப்படாத தரைத் தொட்டிகள் (சம்ப்), மேல்நிலைத் தொட்டிகள், டயர்கள், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்டகாலமாக கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரில் `ஏடிஸ்' கொசுக்கள் முட்டையிட்டு, அது புழுவாக மாறி வளர்ந்து, கொசுவாக உருவாகிறது. இது, டெங்கு பாதிப்புள்ளவர்களைக் கடித்துவிட்டு மற்றவர்களைக் கடிக்கும்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு டெங்கு பரவுகிறது.


`ஏடிஸ்' கொசுக்கள் மூன்று வாரங்களுக்குமேல் உயிர்வாழும். இந்தக் கொசுக்கள் பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கின்றன. உடல் மற்றும் கால்களில் கறுப்பு மற்றும் வெள்ளைநிறப் புள்ளிகள் கொண்ட உடலமைப்பைக் கொண்டுள்ளதால், இவை `புலிக்கொசுக்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன.''

"ஏடிஸ் கொசு பகலில்தான் கடிக்கும்; நல்ல தண்ணீரில்தான் வளரும் என்கிறீர்கள். எதன் அடிப்படையில் இப்படிச் சொல்கிறீர்கள்?"

“டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் `ஏடிஸ்' கொசுக்கள் நல்ல தண்ணீரில் வளரும்; அவை பகலில் கடிக்கும் தன்மைகொண்டவை என அவற்றின் வாழ்க்கைமுறை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்தத் தரவுகளின் அடிப்படையில் இதுதான் உண்மை. ஆகவே, பொதுமக்கள் மற்றவர்கள் கூறுவதைக் கேட்டு குழம்பிக்கொள்ளத் தேவையில்லை.''

“எத்தனை நாள்கள் தண்ணீர் தேங்கி இருந்தால் ஏடிஸ் கொசு வளரும்?"
“டெங்கு நோயைப் பரப்பும் `ஏடிஸ்' வகை கொசுக்கள் தண்ணீரில் முட்டையிட்டு கொசுப்புழு, கூட்டுப்புழு பருவம் வரை வளர ஏழு முதல் பத்து நாள்களாகும்.’’

“ஏடிஸ் கொசுவின் வளர்ச்சியை எப்படித் தடுக்கலாம்?"

“டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் `ஏடிஸ்' கொசுக்கள் சுத்தமான நீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. இவை முட்டையிலிருந்து லார்வா, பியூப்பா என உருமாறி பத்து நாள்களில் கொசுக்களாக உற்பத்தியாகின்றன. `ஏடிஸ்' கொசுக்கள் உருவாகும் இடங்களை அழித்து வீடுகள், பள்ளிக்கூடங்கள், பொது இடங்கள் மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டால் மட்டுமே டெங்குக் காய்ச்சலைத் தடுக்க முடியும்.''“பிற காய்ச்சல்களிலிருந்து டெங்குக் காய்ச்சலை எப்படி அடையாளம் காண்பது, காய்ச்சல் வந்த பிறகு என்ன செய்ய வேண்டும்?"
“காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, எலும்பு வலி ஆகியவை டெங்குக் காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாகும். காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். ஒரு மருத்துவரால் மட்டுமே தேவையான மருத்துவப் பரிசோதனை செய்து இது 

டெங்குக் காய்ச்சலா அல்லது மழைக்காலத்தில் ஏற்படும் சளிக் காய்ச்சல் மற்றும் இதர டைபாய்டு, லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் இதர வகையான காய்ச்சலா என்பதை கண்டறிந்து உரிய சிகிக்சை அளிக்க முடியும்.மருத்துவரின் ஆலோசனைப்படி காய்ச்சல் மற்றும் உடல்வலியைக் குறைப்பதற்காக 'பாரசிட்டமால்' மாத்திரைகளைச் சாப்பிடலாம். போதுமான ஓய்வு எடுத்து அதிகமான திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். டெங்குக் காய்ச்சலைக் குணப்படுத்தவும், தடுக்கவும் நிலவேம்புக் குடிநீர் மிகச்சிறந்த மருந்து என்பதில் சந்தேகமில்லை."


``வீட்டிலேயே டெங்குவுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளலாமா?"


“டெங்குக் காய்ச்சலைப் பொறுத்தவரை, மருத்துவக் கண்காணிப்பில் இருப்பது மிகவும் நல்லது. டெங்கு பாதிப்புக்கு உள்ளாகிறவர்களில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான நபர்களுக்கு ரத்தக்கசிவு நோய் மற்றும் 'டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' ஏற்படலாம். அதாவது, தட்டணுக்கள் குறைந்து, நுரையீரல் கூடு பகுதியில் நீர் தேங்கும்போது 'டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த நிகழ்வுகளில் ஆபத்து ஏற்படக்கூடும். ஆகவே, மருத்துவக் கண்காணிப்பில் இருந்து, உரிய நேரத்தில் உரிய மருந்துகள் எடுத்துக்கொள்வதன் மூலம் முழுமையாக இந்த நிகழ்வுகள் ஏற்படாமல் காப்பாற்ற முடியும். எனவே, மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவதுதான் நல்லது. அதனால் சுய சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் காய்ச்சல் வந்தவுடனேயே மருத்துவரை அணுக வேண்டும்."


“டெங்கு பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யக் கூடாது?"
“காய்ச்சல் வந்தவுடன் மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம். மருத்துவரின் ஆலோசனைப்படி ரத்தப் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்; மருந்துகளை உட்கொள்ள வேண்டும். தேவையான அளவுக்கு ஓய்வெடுத்து, அதிக அளவில் திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

காய்ச்சல் வந்த பிறகு மருத்துவச் சிகிச்சையைத் தாமதமாகப் பெறுதல், சுயமாக மருந்துகள் சாப்பிடுதல், போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுதல், குறைவான திரவ உணவுகளை உட்கொள்ளுதல் ஆகியவை கூடாது.''
“டெங்குவுக்குத் தடுப்பூசி உண்டா?"
“மிகச்சில நாடுகளில் டெங்வாக்ஸியா (Dengvaxia) என்ற தடுப்பூசி, உலக சுகாதார நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் டெங்குவின் தாக்கம் அதிகமாக என்ன காரணம்?"
இலங்கையிலும் டெங்குவின் பாதிப்பு அதிகம். மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட 140 நாடுகளிலும் இந்த நோயின் தாக்கம் இருக்கிறது. ஆனால், ஏதோ நம் மாநிலத்தில் மட்டுமே டெங்குவின் தாக்கம் அதிகமாக இருப்பதுபோல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

"டெங்குக் காய்ச்சலைத் தடுக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் என்னென்ன?"
நாளிதழ் விளம்பரங்கள், திரையரங்குகள், தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் குறும்படங்கள் மூலம் டெங்கு குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் சுய உதவி குழுக்கள் மூலம் இலங்கை  முழுவதும் பேரணி போன்ற டெங்குக் காய்ச்சல் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.

டெங்குக் காய்ச்சல் விழிப்பு உணர்வு குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள், செவிலியர் கல்லூரி முதல்வர்கள்,இலங்கையில் சனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் மூலம் பொதுமக்கள் மத்தியில் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்விதமாக பிரசாரங்கள், துண்டுப் பிரசுரங்கள், நிலவேம்புக் குடிநீர் வழங்குதல், சுற்றுப்புறப் பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியம் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தூய்மை செய்யப்படாத இடங்கள் மற்றும் டெங்குப் புழுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் பொது சுகாதார சட்டம், சட்டப்படி உரிமையாளர்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள் காய்ச்சல் கண்டவுடன் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி, தகுந்த சிகிச்சை பெற வேண்டும். மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துக் கடைகளுக்குச் சென்று தாமாகவே மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

காய்ச்சல் கண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளும் உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலின்படி (Fever Management Protocol) சிகிச்சை அளிப்பதை உறுதிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொசு ஒழிப்பு மற்றும் டெங்குக் காய்ச்சல் ஒழிப்புப் பணிகளை மக்கள் இயக்கமாக செயல்படுத்தவும், தொடர்புடைய துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைப்புப் பணிகளை தொய்வில்லாமல் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.''

“பொதுமக்கள் தங்கள் வீட்டில் `ஏடிஸ்' கொசு உருவாகும் தேவையற்ற பொருள்களான பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், தேங்காய் ஓடுகள், உடைந்த வாளி, டயர்கள் ஆகியவற்றை அகற்றி உதவ வேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடரைக் கொண்டு நன்றாகத் தேய்த்துக் கழுவி, கொசு புகாதவாறு மூடிவைக்க வேண்டும். பகல் நேரத்திலும் சிறு குழந்தைகளை கொசு வலைக்குள் தூங்க வைக்க வேண்டும்.

காய்ச்சல் குறைந்த பின்னரும்கூட நீர்ச்சத்துக் குறைவு மற்றும் இதர பிரச்னைகளால் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மூன்று நாள்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பசி எடுக்கவில்லை என்றாலோ, சோர்வாக இருந்தாலோ மீண்டும் மருத்துவரை அணுக வேண்டும். போதிய நீர் மற்றும் திரவ உணவுகளை அருந்த வேண்டும்.


 டெங்கு இல்லாத இலங்கையை உருவாக்குவது அனைத்து மக்களின் சமூகக் கடமை. இந்தப் பணியில் அனைவரும் தமது பங்கை உணர்ந்து செயல்பட்டால் நோய்த் தடுப்பு நடவடிக்கையை வெற்றிகரமாகச் செயல்படுத்த இயலும்."

Read more »

மாடு விற்பனைக்கு இருப்பதாக வந்து மாடுகளை கொள்வனவு செய்யுமாறும் கூறி மாடுகளை வாங்குவாதற்கு வந்த இரு முஸ்லீம் இளைஞர்கள் மாடு திருட வந்ததாக கூறி போலீசாரால் கைது.

அஹங்கமை பிரதேசத்தில் மாடு விற்பனைக்கு இருப்பதாகவும்  அங்கு வந்து மாடுகளை வாங்குமாறும் கூறிய பின்
 மாடுகளை வாங்குவதற்கு   வந்தவர்களை மாடு திருட வந்தாக கூறி வெலிகம பிரதேசத்தை சேர்ந்த இரு முஸ்லீம் இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரு இளைஞர்களும் திருமண வைபவம் ஒன்றிற்காக மாடு கொள்வனவு செய்ய சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

தொலைபேசி அழைப்பு மூலமே இந்த கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே திட்டமிட்டு குறித்த இரு இளைஞர்களும் மாடுகளை கொள்வனவு செய்ய சென்ற சந்தர்ப்பத்தில் மாடுகளை ஒளிவு மறைவு செய்து குறித்த முஸ்லீம் இளைஞர்கள் மீது மாடுகளை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டே பொலிஸ் இல் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

விசாரனையின் பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் பல பிரதேசங்களில் இடம்பெற்று வருவதும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக முஸ்லீம்கள் அவதானமாக இருக்குமாறும் வேண்டப்படுகின்ரீர்கள்

ஹஜ் பெருநாள் எதிர் நோக்க இருக்கும் நிலையில் மாடுகள் வியாபாரம் அதிகளவில் இடம்பெறும் காலம் என்பதாலும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் அவதானமாக இருக்குமாறும் வேண்டிக்கொள்கின்றோம்.
Read more »

வெலிகம பிரதேசத்தில் புத்தர் சிலைக்கு கல் வீச்சு தாக்குதல்

வெலிகம ரெஸ்ட் ஹௌஸ் சந்தியில் காணப்படும் புத்தர் சிலைக்கு கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள இதனால் புத்தர் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது
இன்று 21 அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெறிவிக்கப்படுகின்றது
இரண்டு கல் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகா தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் யாரால் மேற்கொள்ளபட்டது எக் காரணத்தற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பாக  இதுவரை கண்டறியப்படவில்லை

குறித்த இடத்தின் உரிமை தொடர்பில் பல தரப்பினருக்கிடையில் நீண்டகாலமாக கருத்து முரண்பாடு இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக வெலிகம போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more »

முஸ்லிம்களே இல்லாத தனி சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள வெலிகம கப்தரை பள்ளிவாசல்


மூன்று நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த வெலிகம கப்தரை பள்ளிவாசல் பல சிறப்பம்சங்களை கொண்டு தென் மாகாணத்திலே அல்லது இலங்கையிலேயே ஒரு சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள ஒரே ஒரு முஸ்லீம் பள்ளிவாசல் ஆகும் .கொழும்பு மாத்தறை பிரதான வீதியில் வெலிகமைக்கு அருகாமையில் காணலாம்.
தனி சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள இந்த பள்ளிவாசல் அமையப்பெற்றமைக்கான காரணம் ஒரு வரலாறாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
1993 தினகரன், மற்றும் 2010 சிங்கள பத்திரிகையில் வெளியாகிய கட்டுரை பள்ளிவாசல் பதாதையில் ஒட்டப்பட்டுள்ளது.

அதனை அடிப்படையாக கொண்டு இந்த பதிவு

இந்த பள்ளிவாசல் அமையப்பெற்ற வரலாறு முஸ்லீகளை மாத்திரம் அல்லாது அப்பிரதேச சிங்கள மக்களை கூட ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஒரு சம்பவமாகவே உள்ளது சிங்கள மக்கள் அப்பளிவாசல் விடயத்தில் மிகவும் பயபக்தியோடும் கண்ணியமாகவும் அன்று தொடக்கம் இன்றுவரை நடந்துக்கொள்கின்றார்கள் என்பதும் நோக்கத்தக்கது. இன்றும் கடலுக்கு செல்லும் மீனவர்கள் இப்பள்ளிவாசலுக்கு காணிக்கையாக பணத்தை போட்டுவிட்டு செல்வதை வழக்கமாக அவதானிக்கலாம்.


அப்பள்ளிவாசல் மீது இவ்வளவு பக்தி ஏற்பட என்ன காரணம்.??
(1993 பத்திரிகையில் சுமார் 300 வருடம் என குறிப்பிடப்பட்டுள்ளது.)

சுமார் 300 வருடம் மூன்று நூற்றாண்டுக்கு முன் சிங்கள மீனவர் குழு ஒன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்று இருந்த போது அந்த நேரம் கடலில் ஒரு பெட்டி மிதந்து வருவதைகண்டு அந்த பெட்டியை எடுக்க முயற்சி செய்து இருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் அதனை நெருங்க நெருங்க அந்த பேட்டி ஆழ்கடலை நோக்கி செல்வதை அவதானித்தார்கள்   அவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது அவர்கள் மீண்டும் கடலில் இருந்து கரைக்கு வரும்போது அந்த பெட்டி கரையை நோக்கி வந்து இருப்பதை அவதானிதார்கள் மீண்டு அந்த பெட்டியை நெருங்கும்போது அந்த பெட்டி ஆழ்கடலை நோக்கி சென்றதை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்

அதில் அரபு எழுத்துக்களால் எழுதப்பட்டு இருப்பதை கண்டு
எதற்கும் நாம் பக்கத்து ஊரில் உள்ள முஸ்லீகளை அழைத்து வந்து இந்த பெட்டியை எடுப்போம் என்ற எண்ணத்துடன் பக்கத்து கிராம முஸ்லீம்களுக்கு இது தொடர்பாக அறிவிக்கின்றார்கள்

முஸ்லீம்கள் கடற்கரையை நோக்கி சென்று கரையை நோக்கி வந்த அந்த பெட்டியை கரைக்கு கொண்டுவந்து முஸ்லீம்களும் சிங்களவர்களும் ஏதோ புதையல் கிடைத்துவிட்டது என்று அந்த பெட்டியை திறந்து பார்க்கின்றார்கள்அவர்களுக்கு ஏமாற்றமே இருந்தது

அந்த பெட்டியில் குங்குமம் வாசனையுடன் ஒரு கபன் இடப்பட்ட ஜனாஸா,மிஸ்வாக் குச்சி, குத்து விளக்கு மற்றும் ஷெய்ஹ் Inaayatullah என்று எழுதிய ஒரு அட்டை இருந்தன
கோபத்துடன் சிங்கள மக்கள் உங்கள் ஊருக்கே கொண்டு போய் இதை அடக்கம் செய்துவிடுங்கள் என வேண்டிக்கொண்டார்கள்
கரைக்கு எடுத்து வந்த அந்த பெட்டியை
அப்பிரதேசத்தில் இருந்து தூக்கி செல்ல முயன்றபோது அவர்களால் அந்த பெட்டியை அசைக்க முடியவில்லை.

சிங்கள மக்களும் சேர்ந்து செய்த முயற்சியாலும் அந்த பெட்டியை அசைக்க முடியாமல் போனது பின்னர்
இந்த ஜனாஸா ஒரு மாபெரும் மகான் ஒன்றின் ஜனாசாவாக இருக்கலாம் என ஊகிக்கின்றார்கள்.இந்த ஜனாஸா இந்த இடத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டுமாக இருக்கும் என கூற சிறு இடம் கேற்கின்றார்கள்

ஆனாலும் சிங்கள மக்கள் இந்த ஜனாஸா வை இந்த பிரதேசத்தில் அடக்கம் செய்ய ஒரு அங்குலம் கூட இடம் தர மாட்டோம் என காணி உரிமையாளர் கூற முஸ்லீம்கள் நாளை நாம் எமது ஊரு ஜமாத்தினர்களிடமும் கலந்து ஆலோசனை செய்து வருகிறோம் என கூறி

ஊர் முஸ்லீம்கள் கலந்து ஆலோசித்து அந்த ஜனாஸாவை முஸ்லீம் கிராமத்திற்கு கொண்டு வந்து அடக்கம் செய்வோம் என முடிவு செய்கின்றார்ள்.

என்ன அதிசயம் அதிகாலையிலேயே காணி உரிமையாளர் இன்னும் சிலரும் முஸ்லீம் கிராமத்திற்கு வந்து என்னை காப்பாற்றுங்கள் உடனே வந்து அந்த ஜனாஸாவை எனது காணியில் அடக்கம் செய்யுங்கள் இதற்காக நான் இந்த நான்கு ஏக்கர் காணியை தருகிறேன் என கதறினார் .
உங்களுக்கு என்ன நடந்தது என முஸ்லீம்கள் கேற்க அதற்கு அவர் நேற்று அந்த பெரியார் என் கனவில் வந்து என்னை உனது காணியில் அடக்க செய்ய மறுத்து விட்டாயா என கூறி எனது முதுகில் அடித்தார் என தன் முதுகை காட்டினார்.
பின்னர் முஸ்லீம்கள் அவருக்கு ஆறுதல் கூறி அந்த ஜனாஸாவை அந்த பிரதேசத்தியிலேயே அடக்கம் செய்கின்றார்கள்


இந்த சம்பவம் முஸ்லீம் சிங்கள உறவை மேலும் வலுப்படுத்தியதாக கூறப்படுகின்றது பின்னர்
முஸ்லீம்கள் அவரின் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே ஒரு சிறிய பள்ளிவாசலையும் நிர்மானிதார்கள் காலப்போக்கில் பள்ளிவாசல் புணர்நிர்மானம் செய்யப்பட்டு ஒரு கேந்திர இஸ்தானமாக இன்றும் இப்பளிவாசல் காட்சியலிக்கின்றது. இன்றும் இந்த சியாரம் அந்த பள்ளிவாசலில் காணக்கூடியதாக உள்ளது

பள்ளிவாசலில் முன்பக்க காணியில் புதைத்த மிசவாக் துண்டு ஒரு நிழல் தரும் மிஷ்வாக் மரமாக இருந்தது.
1914 ஆம் ஆண்டு முஸ்லீம் சிங்கள கலவரத்தில் இப்பள்ளிவாசலுக்கு அநியாயம் செய்யவந்தவர்களுக்கு பல ஆச்சரியம் தரும் சம்பவங்கள் நடைபெற்று இருப்பதாகவும் பின்னர் அவர்கள் திரும்பி சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

வெலிகம பிரதேசத்தில் சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட முஸ்லீம் சிங்கள கலவரங்களின் போதும் எந்த சந்தர்ப்பத்திலும் இப்பளிவாசளுக்கு எந்த சேதமும் சிங்களவர்களால் செய்ய வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை பொலிஸ் அதிகாரிகள் கலவரங்கலின் போது இப்பள்ளிவாசளுக்கு பாதுகாப்பு கடமைக்கு செல்லும் போது சிங்களவர்களால் போலீஸ் அதிகாரிகளுக்கு நீங்கள் இந்த பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு வழங்க தேவையில்லை இந்த பள்ளிவாசளை நாங்களே பாதுகாப்பு வழங்குவோம் எனவும் கூறப்பட்டுள்ளது

இந்த சம்பவங்களினால் இப்பளிவாசல் மிக பிரசித்தி பெற்ற கேந்திர இஸ்தானமாக வெலிகாமத்தில் திகழ்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

இவ்வாறாக பல அற்புதமான வரலாற்று சம்பவத்தை கொண்டு வெலிகம கப்தரை பள்ளிவாசல் இன்றும் அப்பிரதேச சிங்கள மக்களாலும் கண்ணியமான முறையில் பாதுகாக்ப்பட்டு வருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

WeligamaNews
www.weligamanews.com


Read more »

வெலிகம கொலெதண்ட பள்ளிவாசலை சோதனையிட வந்ததாக கூறிய பாதுகாப்பு படையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ள படைவீரர் போலீஸாரால் கைது

இன்று பிற்பகல் 1.45 மணி அளவில் 5 பேர் முச்சக்கர வண்டியில் வெலிகம கொலெதண்ட பள்ளிவாசலுக்கு வந்து அங்கு பள்ளிவாசல் இமாமை சந்திக்க வேண்டும் என்பதாகவும் அவரை தாம் முன் கூட்டியே அறிந்து இருப்பதாகவும் கூறியுள்ளார்கள். பின்னர் அங்கு சென்ற அப்பிரதேச வாலிபர் அவரின் அடையாள அட்டையை கேட்ட போது அவர் கொடுக்க மறுத்துள்ளார் பின்னர் ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அப்பிரதேச மக்கள் பள்ளிவாசலை நோக்கி விரைந்தனர்.   உடனடியாக பொலிஸ் இற்கு தொலைபேசி மூலம் அறிவித்ததை அடுத்து போலீஸ் அப்பிரதேசத்திற்கு வந்த 5 பேரில் 2 பேரை கைது செய்துள்ளனர்.

அடுத்த மூவரும் முச்சக்கர வண்டியுடன் தப்பி ஓடி உள்ளனர் முச்சக்கர வண்டியின் இலக்கம் போலீசார்கு வழங்கப்பட்டுள்ளது.
 ஆரம்ப கட்ட விசாரணையில் அவர் பாதுகாப்பு துறையில் இருந்து நீக்கப்பட்ட ஒரு படை வீரர் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை வெலிகம போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்
Read more »

வெலிகம தெனிப்பிடிய பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து இராணுவ படை வீரர் தற்கொலை.


வெலிகம தெனிப்பிடிய பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து இராணுவவீரர் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இன்று காலை  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

வெலிகம தெலிஜ்ஜிவில பிரதேசத்தை சேர்த்த 28 வயது மதிக்கத்தக்க இராணுவ வீரரே இவ்வாறு ஆற்றில் குதித்து  தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குடும்ப தகராறு காரணமாகவே தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

 கடற்படை மற்றும் ஊரு மக்கள் இணைந்து  சடலத்தை தேடும் பணியில்
ஈடுபட்டு வருகின்றனர். பொலிஸார் மேலதிக விசாரணை நடாத்தி வருகின்றனர்

Read more »